- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

சரஸ்வதி பூஜையை முறையாக செய்வது எப்படி?

பூஜை அறைக்கு முன்பு இரண்டு மனையோ அல்லது மேஜையோ போட்டு அதன் மேல் தூய்மையான துணியை விரித்து பின்பு ஒரு மனையின் மேல் புத்தகம், பேணா, பண பெட்டி போன்றவற்றை வைக்க வேண்டும். இன்னொரு மனையின் அரிவாள், கத்தி, கடப்பறை போன்ற ஆயுதங்களை வைக்க வேண்டும். இவை அனைத்திற்கும் சந்தனம் குங்குமம் இடுவது அவசியம்.

அடுத்து முழு முதற் கடவுளான கணபதியை போற்றும் வகையில் மஞ்சலிலோ அல்லது பசுசாணத்திலோ பிள்ளையாரை பிடிக்க வேண்டும். பிள்ளைகளின் படிப்பும் எங்களின் தொழிலும் எந்த இடையூறும் இன்றி எப்போது சிறப்பாக இருக்க வேண்டும் என்று கணபதியிடமும், சரஸ்வதி தேவியிடமும் வேண்டிக்கொண்டு, ‘ஓம் ஸ்ரீஸரஸ்வதி தேவ்யை நமஹ‘ என்று புத்தகங்களை பூக்களால் அர்ச்சிக்கவும்.

- Advertisement -

பின்பு ‘ஓம் லேகினீ சக்தயே நமஹ‘ என்று எழுதுகோலை அர்ச்சிகவும். பிறகு வீட்டு உபயோக பொருட்களை ‘ஓம் கட்கினீ சக்தயே நமஹ‘ என்று அர்ச்சிகவும். பிறகு மணி அடித்துக்கொண்டே வீடு முழுக்க உள்ள அணைத்து பொருட்களுக்கும் ஆரத்தி காட்ட வேண்டும். பிறகு சரஸ்வதி தேவியை மனதார வேண்டிக்கொள்ளவும். அதன் பிறகு மற்ற பூஜைகளை போலவே தேங்காய் உடைத்து ஆரத்தி காட்டி பூஜையை முடிக்கவும்.

இந்த பூஜையில், பொரிகடலை, இனிப்புகள், சக்கரை பொங்கல், பழங்கள் போன்றவற்றை நிவேதியம் செய்வது சிறந்தது. பூஜையில் மந்திரங்களை ஜெபிக்க விரும்புவோர் கீழே உள்ள சரஸ்வதி காயத்திரி மந்திரம் போன்ற மந்திரங்களை கூறலாம்.

- Advertisement -

மந்திரம் :

‘ஓம் பிரம்ம சக்தியை வித்மஹே
பீதவர்ணாயை தீமஹி தன்னோ
பிராம்ஹீ ப்ரசோதயாத்’

பூஜை முடிந்த பிறகு பூஜையில் வைக்கப்பட்ட பொரிகடலை, இனிப்புகள் மற்றும் பழங்களை பூஜையில் கலந்துகொண்ட அனைவருக்கு வழங்க வேண்டும். பூஜையை முறையாக செய்வதன் மூலமாக சரஸ்வதி தேவின் பரிபூரண அருளை பெறலாம்.

- Advertisement -