
கடன் இல்லாத மனிதன் இந்த பூமியில் வாழ்ந்தால் அவனை, இன்று கொண்டு போய் அருங்காட்சியகத்தில் வைத்து அனைவரும் பார்க்கலாம். கடன் இல்லாத மனிதன் காட்சி பொருளாக வைக்க வேண்டிய மனிதன். அந்த அளவுக்கு இன்று பூமியில் கடன் வாங்கக் கூடிய மக்கள் தொகை அதிகரித்துவிட்டது. கடன் வாங்காத மனிதன் இந்த பூமியில் அபூர்வமான மனிதனாக பார்க்கப்படுகின்றான். கடன் இல்லாத ஒருவர் இந்த பூமியில் இன்று இல்லை.
அப்படித்தான் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றோம். இந்த பதிவை படித்துவிட்டு எனக்கு கடனே இல்லை. நான் நிம்மதியாக இருக்கின்றேன் என்று யாராவது ஒருவர் கமெண்ட் செய்தாலும் அவருடைய வாழ்க்கை எப்படி சொர்க்கமாக இருக்கும் என்று மற்றவர்கள் எல்லாம் சந்தோஷப்படுவார்கள். சரி இப்போது பதிவிற்குள் செல்வோம். நீங்கள் ஏதோ ஒரு வகையில் கடனாளியாக இருக்கிறீர்கள். ஏதோ ஒரு லோன் மாதம் மாதம் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள். அந்த பிரச்சனையில் இருந்து ஏதாவது ஒரு வகையில் விடுபட வேண்டும் சீக்கிரம் அந்த லோன் அடைய வேண்டும் என்றால் என்ன பரிகாரம் செய்வது.
இது ஒரு மிக மிக எளிமையான பரிகாரம். எல்லோராலும் செய்ய முடியக்கூடிய பரிகாரம் தான். தற்போது மழை காலம்தான் மழை எந்த சமயத்தில் வேண்டும் என்றாலும் பெய்கிறது. மழை நீரை நாம் எப்போது வேண்டுமென்றாலும் சேகரிக்கலாம். வானத்தில் இருந்து அப்படியே விழக்கூடிய மழை தண்ணீரை கொஞ்சமாக சேகரித்து மூடி போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
மூடி போட்டு வைத்தால் அந்த மழை நீரில் பூச்சி பிடிக்காது. இந்த தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தினமும் நீங்கள் பரிகாரத்திற்கு பயன்படுத்த வேண்டும். ஒரு வாட்டர் கேனில் பாதி அளவு தண்ணீர், பாதி அளவு பசுமாட்டு கோமியம் கலந்து இந்த தண்ணீரை தினமும் நிலை வாசலில் இருந்து வீட்டிற்குள் வரை தெளித்து வர வேண்டும். யாருக்கு கடன் இருக்கிறதோ அந்த நபரின் தலைமேலும் இந்த தீர்த்தத்தை தினமும் கொஞ்சமாக தெளித்து விடுங்கள் தவரே கிடையாது.
கடைகளில் பாட்டிலில் அடைக்கும் கோமியத்தை பயன்படுத்த வேண்டாம். பசுமாடு வைத்திருப்பவரிடம் சொல்லி காலையில் சென்று அந்த முதல் கோமியத்தை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள். பசுமாட்டிற்கு வழியே இல்லை. எங்கள் ஊரில் மாடே இல்லை என்பவர்கள் மட்டும் பாட்டலில் அடைத்த கோமியத்தை பயன்படுத்திக் கொள்ளவும்.
இந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து வர, உங்கள் தலைமேலும் தெளித்து வர வீட்டில் இருக்கும் தரித்திரம் விலகி வருமை விலகி, லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு, லோன் அதாவது உங்களுக்கு இருக்கும் கடன் எல்லாம் சீக்கிரம் அடையும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: தங்க நகை சேரவும் நிலையாக நிலைத்து இருக்கவும் செய்ய வேண்டிய பரிகாரம்.
தொடர்ந்து 48 நாள் இந்த பரிகாரத்தை செய்யும் போது ஏதாவது ஒரு வகையில் உங்கள் கடன் பிரச்சனையில் இருந்து வெளிவர அந்த மகாலட்சுமி நிச்சயம் நல்லதொரு வழியை காட்டி தருவாள். நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.