- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதங்க நகை சேரவும் நிலையாக நிலைத்து இருக்கவும் செய்ய வேண்டிய பரிகாரம்.

தங்க நகை சேரவும் நிலையாக நிலைத்து இருக்கவும் செய்ய வேண்டிய பரிகாரம்.

- Advertisement -

தங்க நகை என்பது நம்முடைய வசதியை குறிக்கக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. அதனால் தான் பலரும் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பொழுது ஆபரணங்களை சூடிக் கொண்டு வருகிறார்கள். இந்த நகைகளை சேர்ப்பது என்பது அவ்வளவு சாதாரண ஒன்று கிடையாது. கஷ்டப்பட்டு சம்பாதித்து சிறுக சிறேக சேர்த்து வைத்து நகையை வாங்கக் கூடிய அளவில் தான் பலரும் இருக்கிறார்கள். அப்படி வாங்கிய நகை எப்பொழுதும் நம்மிடமே இருக்க வேண்டும் என்றுதான் நினைப்போம். ஆனால் வீட்டில் ஏதாவது ஒரு சூழ்நிலையின் காரணமாக வாங்கிய தங்க நகையை அடமானத்தில் வைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இப்படி சொந்தமாக தங்க நகை வாங்குவதையும் அதை நம்மிடமே வைத்துக் கொள்வதற்கும் நமக்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தங்க நகை சேர பரிகாரம்

தங்க நகை சேர வேண்டும் என்றால் அதற்கு குரு பகவானின் அருள் என்பது வேண்டும். மேலும் தங்க நகைகள் சேருவதற்கு மகாலட்சுமியின் அருளும் வேண்டும். மகாலட்சுமி மற்றும் மஹா விஷ்ணுவிற்கு உரிய மாதமான இந்த புரட்டாசி மாதத்தில் குரு பகவானுக்குரிய கிழமையான வியாழக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை குரு ஹோரையில் தான் செய்ய வேண்டும். காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் குரு ஹோரை இருக்கிறது. இந்த நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்யலாம். மேலும் வியாழக்கிழமை என்பது குபேர பகவானுக்குரிய கிழமையாக இருப்பதால் குபேர பகவானுக்குரிய நேரமான 5 மணியில் இருந்து 8 மணிக்குள்ளும் இந்த பரிகாரத்தை நாம் செய்யலாம்.

இதற்கு நமக்கு கண்ணாடி கிண்ணம் அல்லது கிளாஸ் வேண்டும். இதில் முக்கால் பங்கு அளவிற்கு சுத்தமான தண்ணீரை பிடித்துக் கொள்ளுங்கள். பிறகு இதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு பன்னீரை ஊற்ற வேண்டும். அடுத்ததாக இதில் ஒரு ரூபாய் நாணயத்தை போட வேண்டும். சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை எடுத்து நுணுக்கி இந்த தண்ணீரில் போட்டு விட வேண்டும். அடுத்ததாக ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூளை இதில் போட வேண்டும். இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால் ஆள்காட்டி விரல் மற்றும் கட்டைவிரலை தான் பயன்படுத்த வேண்டும். வேறு எந்த விரல்களையும் பயன்படுத்தக் கூடாது. இப்படி தயார் செய்த இந்த கிளாசின் மேல் உங்களுடைய வலது கையை வைத்து கிளாஸ்ஸை மூடிக்கொண்டு பின்வரும் மந்திரத்தை மூன்று முறை கூற வேண்டும்.

- Advertisement -

மந்திரம்:

நமோ அஜாமலவத்யாய நமோ லோகேஷ்வராய தே ஸ்வர்ணாகர்ஷண ஸுலாய பைரவாய நமோ நம

இந்த மந்திரம் சொர்ணாகர்ஷன பைரவரின் மந்திரமாக கருதப்படுகிறது. இந்த மந்திரத்தை மூன்று முறை கூறி முடித்துவிட்டு இந்த டம்ளரை நம்முடைய வீட்டின் மேற்கு திசையில் வைக்க வேண்டும். மேற்கு திசையில் இருக்கக்கூடிய சுவற்றுக்கு அருகில் வைத்து விட வேண்டும். தரையில் வைக்கக்கூடாது சற்று உயரமான இடமாக பார்த்து வைத்து விடுங்கள். படுக்கை அறையை தவிர்த்து மற்ற எந்த அறையில் வேண்டுமானாலும் இந்த டம்ளரை வைக்கலாம்.

ஒரு வாரம் இது அப்படியே இருக்கட்டும். அடுத்த வியாழக்கிழமை இதில் இருக்கக்கூடிய ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் தனியாக எடுத்து வைத்துவிட்டு இந்த தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றிவிட்டு மறுபடியும் இதே போல் தயார் செய்து மந்திரத்தை கூறி வைத்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பெருமாள், மகாலட்சுமி, குபேரர், குரு பகவான், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் என்று இவர்கள் அனைவரின் அருளும் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று தங்க நகை நம்மிடம் வந்து சேர்வதற்குரிய பணவரவு உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:புரட்டாசி இரண்டாம் வெள்ளிக்கிழமை வழிபாட்டு முறை

இந்த எளிமையான வியாழக்கிழமை பரிகாரத்தை முழு மனதுடன் நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு அவர்கள் வீட்டில் தங்கமழை பொழிவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்