
முருகப்பெருமானுக்கு உகந்த கிழமையாக திகழ்வது செவ்வாய்க்கிழமை, முருகப் பெருமானுக்கு உகந்த திதியாக கருதுவது சஷ்டி திதி, முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாக திகழ்வது கிருத்திகை நட்சத்திரம், அதே போல் தான் முருகப்பெருமானுக்கு உகந்த மாதமாக திகழ்வது கார்த்திகை மாதம். இந்த கார்த்திகை மாதம் முழுவதும் முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு பல அற்புதமான நன்மைகள் உண்டாகும். அதிலும் குறிப்பாக முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்தோம் என்றால் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு நன்மைகள் நம் வாழ்வில் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட அற்புதமான மாதத்தில் முருகப்பெருமானை நினைத்து எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் கடன் பிரச்சினை தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கடன் என்ற ஒன்று நம்முடைய வாழ்க்கையில் வந்துவிட்டால் நம்மால் எந்த விஷயத்திலும் சந்தோஷமாக இருக்கவே முடியாது. எப்பொழுதும் நம்முடைய மனதிற்குள் எப்படியாவது கடனை அடைக்க வேண்டும் என்ற நினைப்பு மட்டும்தான் இருந்து கொண்டே இருக்கும். இந்த கடன் பிரச்சனையை தீர்ப்பதற்காக பல வழிகளில் முயற்சி செய்தாலும் பணம் ஒன்று மட்டுமே அந்த பிரச்சினையை தீர்க்கக் கூடியதாக திகழும். அந்த பணம் தாராளமாக நம்மிடம் வருவதற்கும் அப்படி வந்த பணத்தை வைத்து கடனை அடைப்பதற்கும் முருகப்பெருமானின் அருள் என்பது வேண்டும்.
கடன் ரீதியான அனைத்து பிரச்சினைக்கும் காரணமாக திகழக் கூடியவர் செவ்வாய் பகவான் என்பதால் செவ்வாய் பகவானுக்குரிய அதி தேவதையான முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்யும்பொழுது இந்த பிரச்சினைகள் அனைத்தும் தீரும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட முருகப்பெருமானுக்கு உகந்த இந்த கார்த்திகை மாதத்தில் நாம் தினமும் இந்த ஒரு தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த தீபத்தை தொடர்ச்சியாக கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பூஜை அறையில் ஒரு இடத்தில் தாம்பாளத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதில் முருகப்பெருமானுக்கு உகந்த தானியமான துவரம் பருப்பை பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைத்து அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். பிறகு அதில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை தினமும் மாலையில் ஏற்றுவது என்பது மிகவும் சிறப்பு. தினமும் ஏற்ற இயலாது என்பவர்கள் செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமை இந்த இரண்டு கிழமையிலும் ஏற்ற வேண்டும்.
இப்படி தீபம் ஏற்றி வைத்துவிட்டு முருகப் பெருமானை மனதார நினைத்து நம்முடைய கடன் பிரச்சினைகளில் அனைத்தும் முற்றிலும் தீர வேண்டும் என்ற வேண்டுதலை முன் வைக்க வேண்டும். ஒரு மாதம் வரை இந்த விளக்கை சுத்தம் செய்யக்கூடாது. இந்த விளக்கை எந்த இடத்தில் வைத்து ஏற்றினோமோ அந்த இடத்திலிருந்து மாற்றவும் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மாதம் கழித்து இதில் இருக்கக்கூடிய துவரம் பருப்பை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து செலவு செய்யாமல் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த முறையில் முருகப் பெருமானை நினைத்து தினமும் தீபம் ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு முருகப்பெருமானின் அருளாலும் செவ்வாய் பகவானின் அருளாலும் கடன் பிரச்சனை முற்றிலும் தீரும் என்றும் அந்த பிரச்சினை தீருவதற்குரிய பண வரவு உண்டாகும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:மன கசப்பை நீக்கும் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை வழிபாடு
சக்தி வாய்ந்த இந்த தீப வழிபாட்டை முருகப்பெருமானை முழுமனதோடு நம்பி தினமும் ஏற்று வழிபாடு செய்பவர்களுக்கு கடன் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.