- Advertisement -

கடன் தீரவும், பணம் நகை சேரவும் பெருமாள் வழிபாடு

- Advertisement -

அலங்கார பிரியனாக திகழக் கூடியவர் பெருமாள். அப்படிப்பட்ட பெருமாளை சனிக்கிழமை தோறும் நாம் வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. அதிலும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமை என்பது அதிக பலனை தரக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. அன்றைய தினத்தில் பெருமாளை நாம் எந்த வேண்டுதலை வைத்து வழிபடுகிறோமோ அந்த வேண்டுதலை விரைவிலேயே நிறைவேற்றுவார் என்று கூறப்படுகிறது. அந்த அளவுக்கு அதிக பலனை தரக்கூடிய புரட்டாசி சனிக்கிழமை அன்று பெருமாள் ஆலயத்திற்கு எந்த பொருட்களை எடுத்துச் சென்றால் நம் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கடன் தீர பெருமாள் வழிபாடு

ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ரூபத்தில் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று தான் நினைக்கிறோம். அப்படி சம்பாதித்த பணத்தை வைத்து நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் ஆசைப்படுவோம். அது பலருக்கும் சாத்தியமற்ற சூழ்நிலையாகவே இருக்கிறது. சம்பாதித்த பணம் பற்றவில்லை என்னும் பட்சத்தில் முதலில் வீட்டில் இருக்கக் கூடிய நகையை கொண்டு போய் அடமானம் வைப்போம். பிறகு நம்முடைய தேவைக்கு ஏற்றார் போல் பிறரிடமிருந்து கடன் வாங்குவோம். இவை அனைத்தையும் சரி செய்வதற்காக போராடுவோம். இப்படி போராடிக் கொண்டு இருப்பவர்கள் புரட்டாசி சனிக்கிழமை அன்று செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

புரட்டாசி மாதத்தில் பெருமாள் வழிபாடு என்பது சிறப்புக்குரியது. பெருமாள் என்றாலே அவர் பணக்கார தெய்வமாக கருதப்படுகிறார். மேலும் அவர் வீற்றிருக்கக் கூடிய ஆலயங்கள் அனைத்திலும் வருமானம் என்பது அதிகமாகவே இருக்கும். அதனால் தான் பணக்கார தெய்வமாக பெருமாள் திகழ்கிறார். அப்படிப்பட்ட பெருமாளை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கும் நேர்மறை ஆற்றல் ஏற்பட்டு நம் வாழ்விலும் பணவரவு என்பது அதிகரிக்கும். அப்படி பணவரவு அதிகரிப்பதற்கும் கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கும் பல பரிகாரங்கள் இருந்தாலும் புரட்டாசி சனிக்கிழமை செய்யக்கூடிய பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

புரட்டாசி மாதத்தில் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். பெருமாள் ஆலயம் இல்லை என்பவர்கள் சிவாலயத்திற்கு கூட செல்லலாம். காரணம் சிவபெருமான் சன்னதிக்கு பின்புறம் மகாவிஷ்ணு இருப்பார். அதனால் அவருக்கு கூட நாம் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். அப்படி பெருமாள் ஆலயமும் இல்லை சிவாலயமும் இல்லை என்பவர்கள் தங்களுடைய வீட்டிலேயே இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

இதற்கு ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மொட்டு உடையாத நல்ல கிராம்பாக பார்த்து 11 கிராம்பை வைக்க வேண்டும். அதேபோல் உடையாத நல்ல ஏலக்காயாக பார்த்து பதினோரு ஏலக்காயை வைக்க வேண்டும். இதனுடன் ஒரு பெரிய துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து மூட்டையாக கட்டி இதை அப்படியே கோவிலுக்கு எடுத்துச் செல்லுங்கள். அங்கு இருக்கக்கூடிய பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி வைத்து இந்த முடிச்சை அவருடைய பாதத்தில் வைத்து விட வேண்டும். பிறகு கடன் பிரச்சனை தீர வேண்டும், நகை சேர வேண்டும், பணம் சேர வேண்டும் என்று உங்களுக்கு என்ன வேண்டுதல் இருக்கிறதோ அந்த வேண்டுதலை மனதார கூறவேண்டும்.

இப்படி கூறி முடித்த பிறகு அவருக்கு சாற்றிய துளசி மாலையில் இருந்து சிறிதளவு துளசியையும் பாதத்தில் வைத்த மூட்டையையும் எடுத்துக்கொண்டு நேராக வீட்டிற்கு வரவேண்டும். எந்த இடத்தில் நகை வைக்கிறோமோ அந்த இடத்தில் இந்த பொருட்களை வைத்து விட வேண்டும். இந்த பரிகாரத்தை முதல் சனிக்கிழமை தான் செய்ய வேண்டும் என்று இல்லை. புரட்டாசி மாதம் முடிவதற்குள் வரக்கூடிய எந்த சனிக்கிழமை வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். எந்த அளவிற்கு இந்த பரிகாரத்தை அதிக அளவில் செய்கிறோமோ அந்த அளவிற்கு நேர்மறை ஆற்றல்கள் அதிகரித்து எதிர்மறை ஆற்றலாக இருக்கக்கூடிய கடன் பிரச்சனை தீர ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே:
புரட்டாசி சனிக்கிழமை செய்யக்கூடாத செயல்கள்

புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமை அன்று இந்த மூட்டையை பெருமாளின் பாதத்தில் வைத்து வழிபாடு செய்பவர்களுக்கு கடன் பிரச்சினைகள் தீரும், பணமும் நகையும் அதிக அளவில் சேரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -