- Advertisement -

நீங்கள் கடனாக கொடுத்த பணத்தை, வட்டியோடு சேர்த்து, ஒரு பைசா மிச்சமில்லாமல் டக்குனு வசூல் செய்ய முடியும். இந்தக் கிழமையில், கடன் தொகையை திருப்பி கேட்கணும்.

நிறைய பேர் தங்கள் கையில் இருக்கும் பணத்தை அடுத்தவர்களுக்கு கடனாக கொடுத்து விட்டு, அதை திரும்பவும் வசூல் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். சில பேருக்கு கடனைக் கொடுத்து வசூலிப்பதே தொழிலாக இருக்கும். சிலபேர் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வேண்டியவர்களுக்கு, பணத்தை கடனாக கொடுத்துவிட்டு, அந்த பணத்தை திரும்ப பெற முடியாமல் தவித்து வருவார்கள். நீங்கள் வட்டிக்கு விடுபவர்களாக இருந்தாலும் சரி, அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகயால், உங்களது பணத்தை கொடுத்து இருந்தாலும் சரி, அந்த பயணம் கூடிய விரைவில் வட்டியோடு வசூலாக வேண்டுமென்றால், என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வழிபாட்டினை தெரிந்து கொள்வதற்கு முன்பாக முதலில் கடன் கொடுத்தவர், கடன் பெற்றவரிடம் கடுமையான வார்த்தைகளை பிரயோக படுத்தக்கூடாது. உங்களது பணத்தை கொடுத்து, கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்திருந்தாலும், வட்டிக்கு பணத்தை கொடுத்து இருந்தாலும், உங்களது பேச்சில் தகாத வார்த்தைகள் வரவே கூடாது.

- Advertisement -

கடனை பெற்றவருக்கு நல்ல காலம் பிறந்து, ஏதாவது ஒரு வழியில் அவருடைய பிரச்சனை தீர்ந்து, அதன் மூலம் அவருக்கு பணம் கிடைத்து, அதன் மூலம் கடன் தொகையை அடைப்பதற்கு, கடனாளிக்கு விடிவு காலம் பிறக்க வேண்டும் என்று வேண்டுதல் வைப்பது சிறப்பானது. எக்காரணத்தைக் கொண்டும் உங்களிடம் இருந்து கடன் பெற்றவர்கள், ‘நன்றாக வாழ கூடாது’ என்ற எண்ணத்தை கடன் கொடுத்தவர்கள் நினைக்கவே கூடாது. இந்த நினைப்பு இருந்தாலே போதும். உங்களது கடன் தொகை வட்டியும் முதலுமாக சீக்கிரமே வசூலாகிவிடும்.

சரி, எல்லாவற்றையும் தாண்டி, சாஸ்திரம் சம்பிரதாயம் என்ற ஒன்று இருக்கின்றது அல்லவா? அந்த பரிகாரத்தையும் பார்த்துவிடுவோம். (அதிக வட்டிக்கு பணம் கொடுப்பவர்களாக இருந்தாலும் சரி, அதிக வட்டிக்கு பணத்தை பெறுபவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுடைய பிரச்சனைக்கு தீர்வு கிடைப்பது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான்.) நீங்கள்  கடனாக கொடுத்த தொகையை வசூல் செய்ய, நீங்கள் கடன் கொடுத்தவரிடம் சனிக்கிழமை அன்று உங்களது பணத்தை திருப்பி கேட்க வேண்டும். அதிகாரமாக கேட்கக்கூடாது. சாதாரண முறையில், உங்களது சூழ்நிலையை சொல்லி புரிய வைத்து கேட்டாலே போதும். அதுவும் சனிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள், கடன் தொகையை திருப்பித் தரச் சொல்லி கேட்க வேண்டும்.

- Advertisement -

காலையிலேயே கடன் தொகையை எப்படி கேட்பது, என்ற சங்கடம் உங்களுக்கு இருந்தால் சனிக்கிழமை மதியம் 1.30 மணியிலிருந்து 3.00 மணிக்குள் தொலைபேசியிலோ அல்லது நேரிலோ சென்று உங்களது பணத்தை, நீங்கள் தாராளமாக திருப்பிக் கேட்கலாம். இந்த நேரத்தில் கடனாளியிடம் நீங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்கும் பட்சத்தில், அந்த கடன் தொகை கூடிய விரைவில் வசூல் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

சனிக்கிழமை கடன் தொகையை கடனாளியிடம் கேட்பதற்கு முன்பாகவே, உங்கள் வீட்டு பூஜை அறையில் கொஞ்சம் பெரிய அளவிலான மண் அகல் தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். காலை 7 மணிக்கு ஏற்றிய இந்த தீபமானது மாலை 7 மணி வரை எரிந்து கொண்டே இருக்க வேண்டும். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, கடனாளியிடன், கடன் தொகையை கேட்கும் வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்தால் போதும். உங்களுடைய கடன் தொகை எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும், எத்தனை நாட்களுக்கு முன்பாக கொடுத்து வசூல் ஆகாமல் இருந்தாலும், அது கூடிய விரைவில் சீக்கிரமே வசூலாகும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நஷ்டம், கஷ்டம் என்ற வார்த்தைக்கே உங்கள் வீட்டில் இடம் இருக்காது. உருளியில் இந்த பொருளை, இப்படி வைத்தால், அந்த மகாலட்சுமியே வந்து, உருளியில் அமர்ந்து விடுவாள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -