- Advertisement -

கல்லடி பட்டாலும் பிறரின் கண்ணடி நம்மீது விழக்கூடாது என நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். நாம் நமது கடின முயற்சி மற்றும் உழைப்பினாலும், இறைவனின் அருளாலும் எல்லா வளங்களையும் பெற்று வாழும் போது, இதெல்லாம் கிடைக்காதவர்கள் நம்மீது பொறாமை கொண்டு பார்க்கும் பார்வையால், சில தீமைகள் ஏற்படுவதையே “கண் திருஷ்டி” என்கின்றனர். இந்த கண்திருஷ்டியை போக்குவதற்கான சில எளிய பரிகாரங்கள் பற்றி இங்கு காணலாம்.

கண் திருஷ்டி பரிகாரம்

வீடுகளின் வெளிப்புற வாயிலில் வடக்கு திசையை பார்த்தவாறு “கண் திருஷ்டி விநாயகரின்” படத்தை மாட்டி வைப்பதால், நம் வீட்டை நோக்கி வரும் அந்நியர்களின் பொறாமை மற்றும் வயிற்றெரிச்சல் கொண்ட தீய பார்வைகளின் அதிர்வுகளை விநாயகர் நீக்குகிறார். வசதியுள்ளவர்கள் வருடத்திற்கொருமுறை வீட்டில் “கணபதி ஹோமத்தை” செய்வதால் எப்படிப்பட்ட திருஷ்டிகளும், கெட்ட அதிர்வுகளும் இல்லங்களிலிருந்து நீங்கும் அதோடு அதிஷ்டமும் பெருக்கும். கணபதி ஹோமம் அல்லது வேறு எந்த ஹோமங்கள் எங்கேனும் செய்யப்பட்டிருந்தாலும், அந்த ஹோம சாம்பலை சிறிது எடுத்து வந்து உங்கள் பூஜையறையில் வைத்துக்கொள்வது எப்படிப்பட்ட திருஷ்டிகளையும் போக்கும்.

- Advertisement -

வீடுகளில் துளசி மற்றும் அருகம்புல் போன்ற தாவரங்களை வளர்ப்பது கண் திருஷ்டி மற்றும் தீய அதிர்வுகளை நீக்கி விடும். மேலும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமைகளில், வீட்டின் தலை வாயில்களில் மாவிலைகளை தோரணமாக கட்டி தொங்க விடுவதும் சிறந்த திருஷ்டி பரிகாரம் ஆகும். வீட்டு வாயிலின் மேற்பகுதியில் படிகார கல்லை கருப்பு நிற கயிற்றில் கட்டி தொங்க விடுவதால் வீட்டின் மீது விழும் வெளிநபர்களின் கண் திருஷ்டிகள் நீங்கும்.

அமாவாசை போன்ற தினங்களில் வீடு, வாகனங்கள் மற்றும் தொழிற்கூடங்கள் போன்றவற்றிற்கு பூசிணிக்காயைக் கொண்டு திருஷ்டி கழித்து உடைக்க வேண்டும். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முன்னிரவு வேளையில் மிளகாய், உப்பு மற்றும் உங்கள் வீடு மற்றும் தொழிற்கூட நிலத்தின் மண் ஆகியவற்றை ஒன்றாக ஒரு கொட்டாங்குச்சியில் போட்டு, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் திருஷ்டி கழித்து தெரு முச்சந்தியில் அப்பொருட்களை தீயிட்டு கொழுத்த வேண்டும். இதன் மூலம் கண் திருஷ்டி கழியும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
மருதமலை முருகன் கோவில் பற்றிய சுவாரஸ்ய தகவல்.

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மந்திரங்கள் என பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kan thirusti pariharam in Tamil. It is also called as Kan thirusti remedies in Tamil or Kan thirusti neenga in Tamil

- Advertisement -