
நம்முடைய வீட்டில் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தியின் மூலம் பாதிப்பு இருக்கிறது. அது எப்பேர்ப்பட்ட, கெட்ட சக்தியாக இருந்தாலும் சரி, எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியாக இருந்தாலும் சரி, அதை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் குலதெய்வத்தை நினைத்து இந்த ஒரு கிழங்கை உங்களுடைய நிலை வாசல் படியில் பின் சொல்லக்கூடிய முறைப்படி கட்டி தொங்க விடுங்கள். நிச்சயமாக வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் விலகும்.
எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் இந்த கிழங்கு கிடைக்கும். ஆகாச கருட கிழங்கு என்று சொல்லுவார்கள். இது பார்ப்பதற்கு கருடனைப் போல தோற்றம் கொண்டிருப்பதால் இதற்கு ஆகாச கருடன் கிழங்கு என்ற பெயர் வந்தது. இந்தக் கருடன் கிழங்குக்கு ஏராளமான மருத்துவ சக்தி இருக்கிறது. அதைவிட அதிகமாக இதற்கு மகத்துவமும் இருப்பதாக ஜோதிடர்களால் சொல்லப்பட்டுள்ளது. இந்த கிழங்கை வாங்கி மஞ்சள் தடவி, குங்கும பொட்டு வைத்து கருப்பு கம்பளி கயிறால் கட்டி, இதை நிலை வாசலுக்கு வெளிப்பக்கம் கட்டி தொங்க விட வேண்டும்.
இந்த ஆகாச கருடன் கிழங்கை சனிக்கிழமை காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் நிலை வாசலில் கட்ட வேண்டும். இந்த முறையில் ஆகாச கருடன் கிழங்கை நிலை வாசலில் கட்டிக் குலதெய்வத்தை மனப்பூர்வமாக வேண்டிக் கொண்டால் வீட்டில் இருக்கும் அமானுஷ்ய கெட்ட சக்திகள் எல்லாம் விலகும். வீட்டில் கெட்ட சக்தி அண்டாது.
யாராவது பொறாமை குணத்தோடு உங்கள் வீட்டிற்குள் நுழைந்தாலும், அந்த கெட்ட எண்ணத்தை தன்னகத்தே ஈர்த்துக் கொள்ளக்கூடிய தன்மை வாய்ந்த கிழங்காக சொல்லப்பட்டுள்ளது. இதை அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இந்த ஆகாச கருடன் கிழங்கு அழுகிப்போய்விட்டால் மட்டும் அதை மாற்றி விடுங்கள்.
மேல் சொன்ன பரிகாரத்தை செய்யும் போதே உங்களுடைய உடம்பில் ஒரு சுறுசுறுப்பு வந்துவிடும். வீட்டில் இருப்பவர்கள் அவரவர் வேலையை பார்க்க தொடங்கி விடுவார்கள். வீட்டில் இருந்து வந்த கெட்ட சக்தி கண்திருஷ்டி எல்லாம் விலகத் தொடங்கி விடும். இதோடு சேர்த்து இன்னொரு எளிமையான பரிகாரமும் இருக்கிறது. தொட்ட காரியங்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிகிறது.
முயற்சிகளுக்கு வெற்றியே கிடைக்க மாட்டேங்குது என்று சில பேர் சோர்ந்து போவார்கள். இதுவும் கண் திருஷ்டியின் மூலம் வருவது தான். புது முயற்சிகளில் வெற்றி காண வேண்டும் என்றால், முயற்சிகளில் ஏற்படக்கூடிய முன்னேற்றங்களை அடுத்தவர்கள் பார்த்து கண் வைத்துக் கொண்டே இருந்தால், செவ்வாய்க்கிழமை தோறும் விநாயகருக்கு சிதறு தேங்காயை உடைக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே: பண வரவு அதிகரித்து கடன் பிரச்சினை தீர பரிகாரம்
ஐந்து வாரம் தொடர்ந்து செவ்வாய்க்கிழமைகளில் பிள்ளையார் கோவிலுக்கு சென்று சிதற தேங்காய் உடைத்தால், உங்களுடைய முயற்சிகள் வெற்றி அடையும். உடம்பில் சோம்பேறித்தனம் தாங்காது. கண் திருஷ்டியால் வந்த உடல் சோக்கம் நீங்கும் என்பது நம்பிக்கை. எளிமையான ஆன்மீகம் சொல்லும் இந்த பரிகாரத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் பின்பற்றி பலன் பெறவும்.