கடன் என்பது யாருக்கு தான் இல்லை. அனைவருக்கும் கடன் இருக்கத்தான் செய்கிறது. அந்த கடனிலிருந்து வெளியே வருவதுதான் புத்திசாலித்தனம். அப்படி வெளியே வரவேண்டும் என்றால் நாம் சம்பாதிக்கும் பணத்தைவிட அதிக அளவு பணத்தை சம்பாதிக்க வேண்டும். அப்பொழுதுதான் கடன் பிரச்சினையில் இருந்து வெளியே வர முடியும். அந்த அளவிற்கு பணவரவு என்பது வந்துவிட்டால் நாம் கடனற்ற நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும். மேலும் கடனை வாங்காத சூழ்நிலையும் உண்டாக்கும். அப்படி கடன் பிரச்சினை தீர்ப்பதற்குரிய பணவரவை அதிகரிப்பதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கடன் பிரச்சினை தீர வேண்டும் என்பவர்கள் பல பரிகாரங்களை செய்வார்கள். இதே போல் பணவரவை அதிகரிக்க வேண்டும் என்றும் பல பரிகாரங்கள் இருக்கின்றன. இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து நாம் செய்வதற்கு நமக்கு இரண்டே இரண்டு பொருட்கள் இருந்தால் போதும். அந்த இரண்டு பொருட்களும் பண வரவை அதிகரிக்க கூடிய பொருட்களாக இருக்க வேண்டும் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
அந்த பொருட்கள் மகாலட்சுமி தாயாருக்கு பிடித்தமான பொருட்களாக இருந்தால் அதன் சிறப்பு இன்னும் அதிகமாகவே இருக்கும். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். மாலை 5:30 மணிக்கு மேல் இரவு 11:30 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அது முழுக்க குங்குமத்தை பரப்பிக் கொள்ளுங்கள்.
அதற்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைத்து அதில் மூன்று கிராம்பை வைக்க வேண்டும். பிறகு சிறிதளவு பச்சைக் கற்பூரத்தை வைக்க வேண்டும். இதில் இருக்கக்கூடிய குங்குமம், கிராம்பு, பச்சை கற்பூரம் இது மூன்றுமே மகாலட்சுமிக்கு உகந்த பொருட்களாக கருதப்படுகிறது. மகாலட்சுமி தாயாரையும் குலதெய்வத்தையும் மனதார நினைத்துக் கொண்டு அந்த பச்சை கற்பூரத்தை பற்ற வைக்க வேண்டும்.
அந்த பச்சை கற்பூரம் எரியும் பொழுது அதில் இருக்க கூடிய கிராம்பும் சேர்ந்து எரியும். இவ்வாறு எரியும் பொழுது நம்முடைய கோரிக்கை என்னவோ வேண்டுதல் என்னவோ அதை மனதார கூற வேண்டும். அது முழுவதும் எரிந்து முடித்த பிறகு அதில் இருக்கக்கூடிய மீதி பொருட்களை கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். குங்குமத்தை எடுத்து நாம் நெற்றியில் வைத்துக் கொள்ளலாம். அடுத்த வாரம் இதே போல் நாம் ஏற்றுவதற்கு இதே குங்குமத்தை பயன்படுத்தலாம். இப்படி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நாம் நம்முடைய வேண்டுதலை முன்வைத்து பச்சை கற்பூர தீபத்தை ஏற்றும் பொழுது அந்த வேண்டுதல் நிறைவேறும்.
இதையும் படிக்கலாமே ஐஸ்வர்யம் பெருக குங்குமச்சிமிழ் பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் மகாலட்சுமி தாயாரை நினைத்து செய்தால் கண்டிப்பான முறையில் நினைத்தது நிறைவேறும்.