- Advertisement -
மந்திரம்

தேவர்களுக்கும் கிடைக்காத அதிசக்தி வாய்ந்த வரம் உங்களுக்கு கிடைக்க அமாவாசையில் இந்த மந்திரத்தை உச்சரித்து பித்ருக்களை வழிபடலாமே! என்ன மந்திரம் அது?

முன்னோர்களின் அருளாசியை பெற, முன்னோர்களின் தர்ப்பணத்தின் பொழுது இந்த ஸ்லோகத்தை துதிப்பவர்களுக்கு எத்தகைய பாவங்களும் நீங்கி, பல அஸ்வமேத யாகம் செய்த பலன்களையும் கொடுக்குமாம். இந்த மந்திரம் காசியில் இருக்கும் மணிகர்ணிகா குளத்தில் தர்ப்பணம் கொடுத்ததற்கு இணையான பலன்களை கொடுக்கும். காசியில் இருக்கும் கங்கையை விட இந்த மணிகர்ணிகா சிறந்ததாக புராணங்கள் குறிப்பிட்டு கூறுகிறது. அத்தகைய அதிசக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை எப்படி உச்சரிக்க வேண்டும்? என்பதை அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

முன்னோர்களுடைய படத்தை வைத்து அலங்காரம் செய்து, அவர்களுக்கு மிகவும் பிடித்தமான பொருளை நைவேத்யம் படைத்து, தேங்காய், வாழைப்பழம் ஆகியயை படைத்து துளசி இலைகளாலும், மலர்களாலும் அர்ச்சித்து, நெய் தீபம் ஏற்றி, எள்ளும், தண்ணீரும் தாம்பாளத்தில் இறைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். இந்த நீரை செடிகளுக்கும் அல்லது ஓடும் நீர் நிலைகளிலும் சமர்பிக்க வேண்டும். பின்னர் பிரசாதத்தை காக்கைக்கு உணவிட்டு கயாவில் சிரார்த்தம் செய்ததாக கூறிக் கொள்ள வேண்டும். இப்படி உங்களால் முடிந்ததை செய்து இந்த மணிகர்ணிகா ஸ்துதியை வாசித்தால் போதும்! தேவர்களுக்கும் கிடைக்காத அற்புத வரங்கள் உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

மணிகர்ணிகா ஸ்துதி:
1. த்வத்தீரே மணிகார்ணிகே ஹரிஹரௌ ஸாயுஜ்ய முக்திப்ரதௌ
வாதம் தௌ குருத:பரஸ்பரமுபௌ ஜந்தோ:ப்ரயாணோத்ஸவே!
மத்ரூபோ மனுஜோஸ்யமஸ்து ஹரிணா ப்ரோக்த:சிவஸ்தத்க்ஷணாத்!
தன்மத்யாத் ப்ருகுலாஞ்சனோ கருடக:பீதாம்பரோநிர்கத:!!

2. இந்த்ராத்யாஸ்த்ரிதசா:பதந்தி நியதம் போகக்ஷயே யே புன:
ஜாயந்தே மனுஜாஸ்ததோஸ்பி பவச:கீடா:பதங்காதய:!
யே மாத:மணிகர்ணிகே தவ ஜலே மஜ்ஜந்தி நிஷ்கல்மஷா:
ஸாயுஜ்யேஸ்பி கிரீடகௌஸ்து பதரா நாராயணா:ஸ்யுரநரா:!!

- Advertisement -

3. காசீ தன்யதமா விமுக்திநகரீ ஸாலங்க்ருதா கங்கயா
தத்ரேயம் மணிகர்ணிகா ஸுககரீ முக்திர்ஹி தத்கிங்கரீ!
ஸ்வர்லோக ஸ்துலித:ஸஹைவ விபுதை:காச்யா ஸமம் ப்ரஹ்மணா
காசீ க்ஷேணிதலே ஸ்திதா குருதரா ஸ்வர்கோ லகுத்வம் கத:!

4. கங்காதீரமெனுத்தமம், ஸகலம்;தத்ராபி காச்யுத்தமா
தஸ்யாம் ஸா மணிகர்ணிகோத்தமதமா யத்ரேச்வரோ முக்தித: I
தேவானாமபி துர்லபம் ஸ்தலமிதம் பாபௌக நாசக்ஷமம்
பூர்வோபார்ஜிதபுண்ய புஞ்ஜகமகம் புண்ணயைர்ஜனை:ப்ராப்யதே!!

- Advertisement -

5. து:காம்போதி கதோ ஜந்து நிவஹஸ்தேஷாம் கதம் நிஷ்க்ருதி:
ஜ்ஞாத்வா தத்ஹி விரிஞ்சிநா விரசிதா வாராணஸீ சர்மதா!
லோகா:ஸ்வர்க முகாஸ்ததோஸ்பி லகவோ போகாந்தபாதப்ரதா:
காசீமுக்தி புரீ ஸதாசிவகரீ தர்மார்த்த மோக்ஷப்ரதா!!

6. ஏகோ வோணுதரோ தராததரதர:ஸ்ரீவத்ஸ பூஷாதார
யோஸ்ப்யோக:கில சங்கரோ விஷதரோ கங்காதரோ மாதவ:!
யே மாதர்மணிகர்ணிகே தவ ஜலே மஜ்ஜந்தி தே மானவா:
ருத்ரா வா ஹரயோ பவந்தி பஹவஸ்தேஷாம் பஹஸ்த்வம் கதம்!!

7. த்வத்தீரே மரணம்து மங்கல கரம் தேவை ரபி ச்லாக்யதே
சக்ரஸ்தம் மனுஜம் ஸஹஸ்ரநயநை:த்ரஷ்டும் ஸதா தத்பர:!
ஆயாந்தம் ஸவிதா ஸஹஸ்ரகிரணை:ப்ரத்யுத்கதோஸ்பூத் ஸதா
புண்யோஸ்ஸெள வ்ருஷகோஸ்தவா கருடக:கிம் மந்திரம் யாஸ்யதி!!

8. மத்யாஹ்னே மணிகர்ணிகாஸ்நபனஜம் புண்யம் வ வக்தும் க்ஷம:
ஸ்வீயை ரப்தசதை:சதுர்முகதரோ வேதார்த்த தீக்ஷ குரு:!
யோகாப்யாஸ பலேந சந்த்ர சிகரஸ்தத்புண்யபாரங்கத:
த்வத்தீரே ப்ரகரோதி ஸுப்தபுருஷம் நாராயணம் வா சிவம்!!

9. க்ருச்ரை:கோடிசதை:ஸ்வபாபநிதனம் யாச்சாச்வமதை:பலம்
தத்ஸர்வம் மணிகர்ணிகாஸ்நபனஜே புண்யே ப்ரவிஷ்டம்பவேத்!
ஸ்நாத்வா ஸ்தோத்ரமிதம் நர:படதி சேத் ஸம்ஸாரபாதோநிதிம்
தீர்த்வா பல்வலவத் ப்ரயாதிஸதனம் தேஜோமயம் ப்ரஹ்மண:!!

- Advertisement -