- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினை தீர வழிபாடு

கடன் என்ற ஒன்று ஒருவருடைய வாழ்க்கையில் வரவே கூடாது. அப்படி வந்து விட்டால் அதனால் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளவார்கள். பலரும் இந்த கடன் பிரச்சினையில் மாட்டிக் கொண்டு வெளியில் தலை காட்ட முடியாமல் தலைமறைவாக சென்றவர்களும் இருக்கிறார்கள். இந்த நிலை ஏழைகளுக்கு மட்டுமல்லாமல் கோடீஸ்வரர்களுக்கும் ஏற்படதான் செய்கிறது. அப்படிப்பட்ட கொடுமையான சூழ்நிலையை தரக்கூடிய கடன் பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கு மரகதவல்லி அம்மனை எந்த முறையில் வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான அருள் இருக்கும். ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு விதமான அவதாரங்களை ஒவ்வொரு காரணத்திற்காக எடுத்து இருப்பார்கள். அந்த காரணத்தை மையமாகக் கொண்டு நாம் அந்த தெய்வத்தை வழிபடும் பொழுது நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் நம்முடைய கடன் பிரச்சினை தீர்வதற்கு வழிப்பட வேண்டிய தெய்வமாக கருதப்படுபவர் மரகதவல்லி அம்மன்.

- Advertisement -

அருகில் மரகதவல்லி அம்மன் ஆலயம் எங்கு இருக்கிறது? என்பதை கண்டறிந்து கொள்ளுங்கள். பௌர்ணமி அல்லது அமாவாசைக்கு அடுத்து வரும் நாள் பிரதமை திதி. அன்று மரகதவல்லி அம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது அந்த அம்மனுக்கு மரகத பச்சை நிறத்தில் புடவை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். இந்த புடவையை அம்மனுக்கு சாற்ற சொல்லி வழங்க வேண்டும். இதோடு மரிக்கொழுந்து மாலையையும் அணிவிக்க வேண்டும்.

அடுத்ததாக அம்மனின் சன்னதியில் 21 நெய் தீபங்களை ஏற்ற வேண்டும். இப்படி ஏற்றிவிட்டு மனம் உருகி மரகதவல்லி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். வழிபாடு அனைத்தையும் நிறைவு செய்த பிறகு அம்மனுக்கு சாற்றிய மரிக்கொழுந்திலிருந்து சிறிதளவு மட்டும் வாங்கி வந்து நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய பணப்பெட்டியில் வைத்து விட வேண்டும். அல்லது பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

இந்த முறையில் வளர்பிறை பிரதமையில் செய்பவர்களாக இருந்தால் தொடர்ந்து வளர்பிறை பிரதமையும் தேய்பிறை பிரதமையில் செய்பவராக இருந்தால் தொடர்ந்து தேய்பிறை பிரதமையிலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். உங்களுடைய கடன் பிரச்சனைக்கு ஏற்றவாறு இத்தனை வாரங்கள் என்ற எண்ணிக்கையில் நீங்களே நிர்ணயம் செய்து கொண்டு இந்த வழிபாட்டை செய்துவர உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய எவ்வளவு பெரிய கடன் சுமையாக இருந்தாலும் அது படிப்படியாக விலகும்.

இந்த கடன் சுமை விலகுவதற்குரிய வருமானம் உங்களுக்கு கிடைக்கும். அந்த வருமானத்திற்குரிய வழியும் கிடைக்கும். வருமானத்தை பெருக்க வேண்டும் என்றும் பணவரவை அதிகரிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து முயற்சிகளை செய்து கொண்டு இந்த மரகதவல்லி அம்மனையும் வழிபடுபவர்களுடைய வாழ்க்கையில் எப்பேர்பட்ட பண பிரச்சனையும் விலகி பணவரவு அதிகரித்து கடன் சுமை குறையும். நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: பெண்களுக்கு ஏற்படும் துன்பம் விலக பரிகாரம்

இந்த இறை வழிபாட்டில் நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் இந்த அம்மனை வழிபட்டு கடன் சுமையிலிருந்து வெளியே வந்து நிம்மதியான வாழ்க்கையை வாழலாம்.

- Advertisement -