
ஒவ்வொரு மாதமும் பிறக்கக்கூடிய நாளை பொருத்தும் நட்சத்திரத்தை பொருத்தும் அந்த மாதம் சிறப்பாக அமைவதற்கு என்று சில வழிபாட்டு முறைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் மார்ச் மாதம் என்பது சனிக்கிழமை அன்று பிறக்கிறது. சனிக்கிழமை என்பது பெருமாளுக்கு உகந்த கிழமை என்று நம் அனைவருக்குமே தெரியும். பெருமாள் செல்வ வளத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவர் என்பதும் நாம் அறிந்ததே. அப்படிப்பட்ட பெருமாளை நினைத்து வீட்டிலேயே ஒரு தீபத்தை நாம் ஏற்றி வைத்தோம் என்றால் கண்டிப்பான முறையில் மார்ச் மாதம் முழுவதும் செல்வ வளம் அதிகரிக்கும். அந்த தீபத்தை எப்பொழுது எப்படி ஏற்ற வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நமக்கு பணத்தை வாரி வழங்கக்கூடிய தெய்வம் என்றால் அது மகாலட்சுமி தாயார் தான். அதற்காக நாம் மகாலட்சுமி தாயாரை மட்டும் வழிபாடு செய்யக்கூடாது. மகாலட்சுமி தாயார் என்பவள் பதிவிரதையாக திகழ்கிறார். தன்னுடைய கணவருக்கு மதிப்பு மரியாதை கொடுக்காத இடத்தில் அவளும் இருக்க மாட்டாள். அந்த வகையில் நாம் மகாலட்சுமியை வழிபாடு செய்ய வேண்டும் என்றால் முதலில் பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும். பெருமாளை வழிபாடு செய்த பிறகு மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்தால்தான் மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு கிடைக்கும். மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யாமல் கூட பெருமாளை மட்டும் நாம் வழிபாடு செய்தால் கண்டிப்பான முறையில் பணவரவு கிடைக்குமாம். தன்னை வணங்காமல் தன் கணவரை வணங்கினால் கூட அருளை தரக்கூடிய தெய்வமாக தான் மகாலட்சுமி திகழ்கிறார்.
அந்த வகையில் மார்ச் மாதத்தின் முதல் நாள் என்பது பெருமாளுக்கு உரிய சனிக்கிழமை அன்று பிறக்கிறது. அன்றைய தினத்தில் நாம் பெருமாளை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. முடிந்தவர்கள் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்து கொள்ளலாம். வீட்டிலேயே வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் மாலை 6:00 மணியிலிருந்து இரவு 10:30 மணிக்குள் வீட்டு பூஜை அறையில் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். இதற்கு முதலில் ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் வாசனை நிறைந்த மலர்களை பரப்பிக் கொள்ளுங்கள்.
அந்த மலர்களுக்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான பசு நெய்யை ஊற்ற வேண்டும். பிறகு பஞ்சுத்திரி போட்டு கிழக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். தீபத்தை ஏற்றிய பிறகு அந்த தீபத்திற்குள் மூன்று ஏலக்காயை போட வேண்டும். இந்த தீபமானது ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக எரிய வேண்டும். இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு எனக்கு பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் நீங்க வேண்டும், பணம் தாராளமாக வந்து சேர வேண்டும், பணத்தை சேர்ப்பதற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைய வேண்டும் என்று முழு மனதோடு பெருமாளை வேண்டிக் கொள்ள வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து தீபத்தை குளிர வைத்துவிட்டு அந்த தீபத்தில் போட்டிருந்த ஏலக்காய்களை எடுத்து சாம்பிராணி போடும்பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே:கஷ்டங்கள் தொடராமல் தீர்ந்து போக
பெருமாளை நினைத்து இந்த முறையில் மார்ச் மாதத்தின் முதல் நாள் அன்று தீபமேற்றி வழிபாடு செய்ய பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் அருளால் பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கி பணம் தாராளமாக வரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.