- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகஷ்டங்கள் தொடராமல் தீர்ந்து போக

கஷ்டங்கள் தொடராமல் தீர்ந்து போக

- Advertisement -

ஒவ்வொரு நாளும் நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு கஷ்டத்தை அனுபவித்து கொண்டு தான் இருக்கிறோம். கஷ்டங்கள் இல்லாத மனிதரே இருக்க முடியாது என்றுதான் கூற வேண்டும். இருப்பினும் ஒரு சில கஷ்டங்களை நம்மால் தாங்கிக் கொள்ளவே முடியாத ஒரு நிலை இருக்கும். அப்படிப்பட்ட கஷ்டங்கள் வரவே கூடாது என்று கூட நாம் நினைப்போம். அப்படி இந்த பிப்ரவரி மாதத்தில் நாம் பட்ட கஷ்டங்கள் மீண்டும் வராமல் இருப்பதற்கு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கஷ்டங்கள் தொடராமல் தீர்ந்து போக

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கமும் எப்படி முக்கியமான ஒன்றாக திகழ்கிறதோ அதேபோல்தான் ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளும் மிகவும் முக்கியமான நாளாக திகழ்கிறது. அந்த இறுதி நாளில் நாம் கண்டிப்பான முறையில் இறைவழிபாட்டில் ஈடுபட்டு இந்த மாதத்தில் எனக்கு நேர்ந்த கஷ்டங்கள் திரும்பவும் நேரக்கூடாது விரைவிலேயே அந்த கஷ்டங்களில் இருந்து வெளிவர வேண்டும், புது மாதம் பிறப்பது போல் என் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் வந்து சேர வேண்டும் என்று வேண்ட வேண்டும். இதோடு சேர்த்து எளிமையான சில பரிகாரங்களை செய்வதன் மூலம் நம்முடைய கஷ்டங்களும் தீர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பரிகாரங்களில் ஒரு பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளான இன்றைய தினம் இரவு படுக்கச் செல்வதற்கு முன் இந்த பரிகாரத்தை நாம் செய்ய வேண்டும். அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு படுக்கச் செல்வதற்கு முன் ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முதலில் உங்களுடைய பெயரை எழுதிக் கொள்ளுங்கள். அடுத்ததாக உங்களுடைய பிறந்த தேதியை முழுமையாக எழுதிக் கொள்ள வேண்டும்(00/00/0000). அடுத்ததாக பிப்ரவரி மாதத்தில் நீங்கள் என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தீர்களோ அந்த கஷ்டங்களை ஒன்று விடாமல் எழுத வேண்டும்.

இப்படி எழுதி முடித்த பிறகு ஒரு டம்ளர் நிறைய தண்ணீரை பிடித்து உங்கள் முன்பாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய இடது கையில் நான்கு மிளகை வைக்க வேண்டும். இந்த மிளகிடம் நீங்கள் என்னென்ன கஷ்டங்களை பேப்பரில் எழுதினீர்களோ அவை அனைத்தையும் கூற வேண்டும். கடைசியாக இந்த கஷ்டங்கள் எதுவும் எனக்கு இனிமேல் வரக்கூடாது என்று கூற வேண்டும். பிறகு இந்த மிளகை அந்த தண்ணீருக்குள் போட்டு விடுங்கள். அடுத்ததாக எழுதி வைத்திருந்த பேப்பரை நன்றாக மடித்து அவை அனைத்தும் தண்ணீருக்குள் இருப்பது போல அந்த பேப்பரையும் டம்ளருக்குள்ளே போட்டு விடுங்கள். ஒருவேளை பேப்பர் பெரியதாக இருக்கும் பட்சத்தில் நாம் இதற்காக டம்ளரை பயன்படுத்தாமல் சொம்பை கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

அடுத்ததாக உங்களுடைய வலது கையை எடுத்து அந்த டம்ளரௌ மூடிக்கொண்டு நீங்கள் என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தீர்களோ அவை அனைத்தும் தீர்ந்துவிட்டது போல் மனதிற்குள் நினைக்க வேண்டும். பிறகு அந்த டம்ளரை நீங்கள் எந்த இடத்தில் படுத்து உறங்குவீர்களா அந்த அறையிலேயே வைத்து விடுங்கள். இந்த டம்ளரை மூடி வைக்கக் கூடாது. காலையில் எழுந்ததும் முகத்தை கழுவி விட்டு இந்த டம்ளரை எடுத்து இதில் இருக்கக்கூடிய பேப்பரை அந்த தண்ணீரிலேயே நன்றாக கரைத்து வாஷ்பேஷனில் தண்ணீரை திறந்து விட்டு ஊற்றி விட வேண்டும். அதில் இருக்கக்கூடிய மிளகையும் அதனுடன் சேர்த்து ஊற்றி விட வேண்டும். இது எப்படி ஒன்றும் இல்லாமல் கரைந்து போனதோ அதேபோல் நீங்கள் பட்ட கஷ்டமும் கரைந்து விடும்.

இதையும் படிக்கலாமே:எவ்வளவு பெரிய கடனும் காணாமல் போக

முழு நம்பிக்கையோடு நம்முடைய கஷ்டங்கள் தீர வேண்டும் என்று பரிகாரம் செய்தால் கண்டிப்பான முறையில் அந்த பரிகாரத்தின் பலனால் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்