- Advertisement -
ஆரோக்கியம்

முள்ளங்கி ஜூஸ் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?

நமது உடலுக்கு உணவு என்பது எந்தளவு முக்கியமோ அதே அளவு உடலில் நீர்சத்து சரியான விதத்தில் இருக்க வேண்டியது அவசியம். நமது உடல் நோய்களால் பாதிக்கப்படாமல் இருக்க ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். அதிலும் நீர்சத்து அதிகம் உள்ள காய்களை உண்ண வேண்டும். அப்படியான ஒரு காய் தான் முள்ளங்கி. “முள்ளங்கி ஜூஸ்” அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

முள்ளங்கி ஜூஸ் பயன்கள்

இதயம்
உடலின் அனைத்து உறுப்புகளுக்கு ரத்தத்தை பாய்ச்சும் உறுப்பான இதயத்தில் சிலருக்கு அடைப்பு ஏற்பட்டு இதய பாதிப்பு, இதயம் தற்காலிகமாக செயலிழப்பது போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. முள்ளங்கி சாறு தினமும் அருந்துபவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, கொழுப்பு அடைக்காமல் இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது.

- Advertisement -

மலச்சிக்கல்

நீர் அதிகம் அருந்தாமை, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் இன்று பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியுறுகின்றனர். தினந்தோறும் முள்ளங்கி ஜூஸ் போட்டு அருந்தி வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.

- Advertisement -

வெண்குஷ்டம்

தோலின் செல்களில் ஏற்படும் மாறுதல்கள் காரணமாக தோலின் சில பகுதிகள் வெள்ளை நிறமாக மாறி, வெண்குஷ்டம் ஏற்படுகிறது. இந்நோய்க்கு நிரந்தர தீர்வாக எந்த ஒரு மருந்தும் இல்லை என்றாலும் முள்ளங்கி ஜூஸ் குடித்து வந்தால் வெண்குஷ்டம் உடலின் பிறபகுதிகளுக்கு பரவுவதை கட்டு படுத்துகிறது.

- Advertisement -

சிறுநீரக கற்கள்

தண்ணீர் அதிகம் அருந்தாமை, உப்பு தன்மை அதிகமாக இருக்கும் நீரை குடிப்பது போன்ற காரணங்களால் இன்று பலருக்கும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. முள்ளங்கி ஜூஸ் தினந்தோறும் இரண்டு வேளை அருந்தி வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும்.

மூலம்

அதிகம் காரமான உணவுகளை உண்பது, தொடர்ந்து ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவது, நாட்பட்ட மலச்சிக்கல் போன்றவற்றால் மூலம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது. எப்படிப்பட்ட மூல நோயையும் தினந்தோறும் முள்ளங்கி ஜூஸ் தினமும் குடித்து வந்தால் மூல நோய்களில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

சுவாசக் கோளாறுகள்

நாம் அன்றாடம் சுவாசிக்கும் காற்றில் கண்ணனுக்கு தெரியாத நுண்கிருமிகளும், மாசுகளும் அதிகம் இருக்கின்றன. இவை எல்லாம் நாம் சுவாசிக்கும் போது நமது நுரையீரல்களுக்குள்ளாக சென்று பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. முள்ளங்கி ஜூஸ் அடிக்கடி பருகி வருபவர்களுக்கு நுரையீரல் தூய்மையடையும், சுவாச பிரச்சனைகளும் நீங்கும்.

பூச்சி கடி

நாம் வீட்டிலிருந்தாலும், வெளியில் நடமாடும் போதும் சில விஷ பூச்சிகள் நம்மை கடித்து விடுவதால் நமது தோலில் வீக்கம், அரிப்பு, தோல் சிவந்து போதல் போன்றவை ஏற்படுகின்றன. இப்படியான சமயங்களில் முள்ளங்கியை ஜூஸ் போட்டு குடிப்பது நமது உடலில் இருக்கும் பூச்சி கடி விஷம் முறியும்.

ஞாபகசக்தி

வயதாகும் பலருக்கும் ஞாபக மறதி ஏற்படுவது இயற்கை தான். மூளை செல்களின் வளர்ச்சியை தூண்டவும், அதன் செயல்பாடுகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை முள்ளங்கி ஜூஸ் குடித்து வருவதால் ஞாபக சக்தியை அதிகம் பெற முடியும். குறிப்பாக முள்ளங்கி ஜூஸ் குழந்தைகள் பருக கொடுப்பது மிகவும் சிறந்தது.

தலைமுடி

தலைமுடியில் ஈரப்பதம் இல்லாமல் போவதால் தலைமுடி உதிர்வு, முடி உடைவது போன்ற பிரச்சனைகள் உருவாகிறது. முள்ளங்கி நமது உடலில் ஈரப்பதத்தை அதிகம் தேக்கி வைக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. தினமும் காலையில் முள்ளங்கி ஜூஸ் அருந்தி வந்தால் தலைமுடி உதிரும் பிரச்சனைகள் விரைவில் நீங்கும்.

மஞ்சள் காமாலை

நாம் சாப்பிடும் உணவை உடலுக்கு தேவையான சக்தியாக கல்லீரல் மாற்றுகிறது செய்கிறது. இந்த கல்லீரல் கிருமித்தொற்றால் பாதிப்படையும் போது மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. இந்த மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சிவப்பு அல்லது வெள்ளை நிற முள்ளங்கி ஜூஸ் உப்பு சேர்க்காமல் குடித்து வந்தால் இந்நோயின் தீவிரதன்மை குறையும்.

இதையும் படிக்கலாமே:
சுரைக்காய் பயன்கள்

இது போன்று மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Mullangi juice benefits in Tamil. It is also called as Mullangi juice nanmaigal in Tamil or Mullangi juice for kidney stone in Tamil or Mullangi juice uses in Tamil or Mullangi juice in Tamil.

- Advertisement -