- Advertisement -
மந்திரம்

இந்த ராசிக்காரர்கள் இம்மந்திரத்தை துதிப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒன்பது கிரகங்களில் ஒரு மனிதனுக்கு ரத்தம், சகோதர உறவு, பூர்வீக நிலம், வீர உணர்வு போன்றவற்றுக்கு காரகனான செவ்வாய் பகவான் குறிப்பிடப்படுகிறார். செவ்வாயின் அம்சமாக இருப்பவர் தான் தமிழ் கடவுளாகிய முருகப்பெருமான். அந்த முருகப்பெருமானுக்குரிய இந்த துதிப்பாடலை பாடி வணங்குவதால் எந்த ராசி மற்றும் நட்சத்திரக்காரர்கள் நன்மைகளைப் பெறலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

முருகன் துதி பாடல்

காரணம் அது ஆக வந்து புவிமீதே
காலன் அணுகாது இசைந்து கதிகாண
நாரணனும் வேதன்முன்பு தெரியாத
ஞான நடமே புரிந்து வருவாயே

- Advertisement -

ஆர் அமுதம் ஆன ஏந்தி மணவாளா
ஆறுமுகம் ஆறு இரண்டு விழியோனே
சூரர் கிளை மாளவென்ற கதிர்வேலா
சோலை மாலமேவிதின்ற பெருமானே

நவகிரகங்களில் செவ்வாய் கிரகத்தின் அம்சம் கொண்ட முருகப்பெருமானுக்குரிய துதிப்பாடல் இது. இந்த துதிப்பாடலை “மேஷம்” ராசியில் பிறந்தவர்களும், “அஸ்வினி, பரணி, கிருத்திகை” ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் தினமும் காலையில் மூன்று முறை இந்த துதிப்பாடலை படிப்பது நல்லது. செவ்வாய்க் கிழமைகள் மற்றும் மாதங்களில் வரும் சஷ்டி தினங்களில் முருகப்பெருமானுக்கு செந்நிற மலர்களை சமர்ப்பித்து, இந்த துதிப் பாடலைப் பாடி வணங்குவதால் மேற்கண்ட ராசி மற்றும் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு முருகப்பெருமான் மற்றும் செவ்வாய் பகவானின் பூரண அருள் கிடைக்கும். காரியத் தடை தாமதங்கள் நீங்கும். வாழ்வில் யோகங்களும், அதிர்ஷ்டங்களும் ஏற்படும்.

- Advertisement -

12 ராசிகளில் முதலாவதாக வரும் ராசி மேஷ ராசி ஆகும். இந்த ராசியின் அதிபதி செவ்வாய் பகவானாவார். மேஷ ராசியின் ஆதிக்கத்துக்குட்பட்ட நட்சத்திரங்களாக அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரங்கள் வருகின்றன. மேலே சொல்லப்பட்ட மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களும், மேஷ ராசியில் பிறந்தவர்களும் வாழ்வில் நன்மைகளையும் யோகங்களையும் பெறுவதற்கு முருகப்பெருமானை வழிபட்டு வரவேண்டும்.

இதையும் படிக்கலாமே:
பணக்கஷ்டங்கள் நீங்க, லட்சுமி கடாட்சம் உண்டாக

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Murugan thuthi padal in Tamil. It is also called as Murugan mantras in Tamil or Mesha rasi stuti in Tamil or Mesha rasi manthira padal in Tamil or Adhirshtam pera in Tamil.

- Advertisement -