உங்களின் பண கஷ்டங்கள் தீர, லட்சுமி கடாட்சம் உண்டாக இதை துதியுங்கள்

laksmi
- Advertisement -

வாழ்க்கையை கஷ்டமின்றி வாழ்வதற்காக தான் அனைவருமே உழைத்து செல்வம் ஈட்டுகின்றனர். ஆனால் ஒரு சிலர் என்ன தான் கடினமாக உழைத்து பொருள் ஈட்டினாலும் அவர்களால் பெரிய அளவில் செல்வம் சேர்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. ஒருவருக்கு மிகுந்த செல்வம், பொன் ஆபரணங்கள், புத்தாடைகள் போன்றவற்றின் சேகரம் ஏற்பட செல்வ மகளான லட்சுமி தேவியின் அருட்கடாட்சம் இருக்க வேண்டும். அத்தகைய வரத்தை தரும் லட்சுமி தேவி துதி இதோ:

margali-laksmi

லட்சுமி தேவி ஸ்துதி

ராஜராஜேஸ்வரீம் லக்ஷமீம் வரதாம்
மணிமாலினீம் தேவீம் தேவப்ரியாம்
கீர்த்திம் வந்தே காம்யார்த்த ஸித்தயே

- Advertisement -

செல்வக் கடவுளான மகாலட்சுமி தேவிக்குரிய துதி இது. இந்தத் துதியை தினமும் அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள்ளாக உடல், மனத்தூய்மையோடு துதிப்பது சிறந்த பலன் அளிக்கும். மேலும் வெள்ளிக்கிழமைகளில் காலை 6 லிருந்து 7 மணிக்குள்ளாகவும், மாலை 6 லிருந்து 7 மணிக்குள்ளாக லட்சுமி தேவிக்கு தீபம் ஏற்றி, இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து லட்சுமி தேவியை வழிபடுபவர்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும். பணவரவுகளில் ஏற்படும் தடை, தாமதங்கள் நீங்கும். ஆபரணங்கள், புத்தாடைகள் சேர்க்கையும் உண்டாகும்.

mahalakshmi

“வரமளிப்பவளும் மணி மயமான மாலை தரித்த ராஜராஜேஸ்வரி ரூபமான லட்சுமியும் தேவர்களுக்குப் பிரியமான கீர்த்தி ஸ்வரூபிணியுமான தேவியை நமஸ்கரிக்கின்றேன்” என்பதே மேற்கண்ட லட்சுமி துதியின் பொதுவான பொருளாகும். செல்வத்தின் அம்சமானவரும், திருமாலின் பத்தினியுமான லட்சுமி தேவி, மக்களின் மீது கருணை பொழியும் தெய்வமாக இருக்கிறார். அவரை திட சித்ததோடு தியானித்து வணங்குபவர்களுக்கு வாழ்வில் செல்வமும், இதர வளங்களையும் அருள்கிறார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
யோக வாழ்வு பெற சுலோகம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Lakshmi stuti in Tamil. It is also called as Lakshmi mantras in Tamil or Lakshmi kadatcham peruga in Tamil or Selvam peruga manthiram in Tamil or Latchumi devi manthiram in Tamil or Selvam sera manthiram in Tamil.

- Advertisement -