- Advertisement -

நடக்காத காரியமும் நடக்க ஆஞ்சநேயர் வழிபாடு

- Advertisement -

நம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரியம் நடைபெற வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுவோம். அந்த காரியத்தால் பலவிதமான நன்மைகளை பெறலாம் என்றும் நினைத்திருப்போம். ஆனால் அது ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக தடைப்பட்டு போயிருக்கும். அது தொழில் ரீதியான காரியமாகவும் இருக்கலாம், வேலை ரீதியான காரியமாகவும் இருக்கலாம், குடும்பத்தில் நடக்கக்கூடிய சுபகாரியமாகவும் இருக்கலாம் அல்லது பணவரவிற்கு உரிய காரியம் ஆகவும் இருக்கலாம். இப்படி எந்த காரியமாக இருந்தாலும் அந்த காரியத்தில் தடைகள் இருக்கும் பட்சத்தில் இந்த ஒரு எளிமையான ஆஞ்சநேயர் வழிபாட்டை செய்ய அந்த தடைகள் அனைத்தும் நீங்கும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நடக்காத காரியமும் நடக்க வழிபாடு

காரிய சித்தி அருளக்கூடிய தெய்வங்களாக விநாயகப் பெருமானையும் ஆஞ்சநேயரையும் கூறுவது உண்டு. அந்த வகையில் இந்த பதிவில் நாம் ஆஞ்சநேயரை எப்படி எந்த மலரை வைத்து வழிபாடு செய்ய நாம் நினைத்த காரியம் நடக்கும் என்றுதான் பார்க்கப் போகிறோம். பொதுவாகவே ஆஞ்சநேயருக்கு உகந்த மலர்கள் என்று சிறப்பாக எதையும் கூறுவது கிடையாது. பலரும் துளசி இலைகளையே மாலையாக சாற்றுவார்கள் அல்லது வெற்றிலை மாலை சாற்றும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். இதை தவிர்த்து வாசனை மிகுந்த ஒரே ஒரு மலரை வைத்து வழிபாடு செய்ய நம் நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த வழிபாட்டை செவ்வாய் அல்லது சனிக்கிழமை செய்ய ஆரம்பிக்க வேண்டும். தொடர்ச்சியாக 11 வாரங்கள் இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை ஆரம்பித்தால் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமையும் சனிக்கிழமை ஆரம்பித்தால் தொடர்ச்சியாக சனிக்கிழமையும் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டிற்கு நமக்கு தேவைப்படக்கூடிய மலர் தாழம்பூ மலர். தாழம்பூ மலரை ஆஞ்சநேயரின் பாதத்தில் வைத்து ஆஞ்சநேயரிடம் எந்த காரியம் நடைபெற வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த அதை வேண்டுதலாக வைக்க வேண்டும்.

பிறகு ஆஞ்சநேயரின் சந்நிதிக்கு முன்பாகவே அமர்ந்து 108 முறை “ஸ்ரீராமஜெயம்” என்று ராம நாமத்தை உச்சரிக்க வேண்டும். பிறகு ஆஞ்சநேயரை வலம் வந்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். இந்த முறையில் தொடர்ச்சியாக 11 வாரங்கள் நாம் செய்யும் பொழுது தாழம்பூவின் வாசனையில் நாம் கூறக்கூடிய ராம நாமம் ஆஞ்சநேயரையே அந்த இடத்திற்கு வரவழைத்து நம்முடைய வேண்டுதலை நிறைவேறுவதோடு மட்டுமல்லாமல் சனீஸ்வர பகவானால் ஏற்பட்ட தோஷங்களை நீக்குவதற்கும் இந்த வழிபாடு உதவும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: தொழிலிலும் வேலையிலும் முன்னேற்றம் ஏற்பட

மிகவும் எளிமையான இந்த வழிபாட்டை முழுமனதோடு தொடர்ச்சியாக ஆஞ்சநேயரை சரணாகதி அடைந்து செய்பவர்களுக்கு அவர்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்திடும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -