- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

நவராத்திரி 3ம் நாளான இன்று எதை எப்படி செய்தால் பலன்களை பெறலாம்

நாம் அனைவரும் நவராத்திரி விழாவை சிறப்புடன் செய்யவே நினைப்போம், அந்த வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இன்று நவராத்திரி மூன்றாம் நாள் வழ்பாடு. அதனால் இங்கே மூன்றாம் நாளுக்குரிய தெய்வம் எது, அதை எப்படி வணங்கலாம், அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.

தென்னிந்தியாவை பொறுத்த மட்டில் மூன்றாம் நாள் வணங்கப்படும் அம்பிகையின் வடிவம் ஜாதவேதோ துர்க்கை எனப்படுபவள். சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து முருகன் தோன்றிய பின்பு ஏற்ப்பட்ட தீப்பொறிகளை, அக்னி தேவரும், வாயு பகவானும் தன்னுள்ளே ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆற்றலை அளித்ததால் இத்தேவிக்கு ஜாதவேதோ துர்க்கை எனப் பெயர் ஏற்ப்பட்டது. இந்த அம்பிகையானவள் ஸ்ரீ வராகி அம்மனின் வடிவானவள்.

- Advertisement -

அச்சம் அதாவது பயம், நாம் அனைவருக்குமே ஏதாவது ஒன்றின் மேல் பயம் இருக்கும், அந்த பயம் என்பது அழித்து பக்தர்களை காத்து நிற்பவள் அம்பிகையின் வடிவான ஸ்ரீ வராகி அம்மனே, அவளே மூன்றாம் நாள் வழிபாட்டுக்குரியவள்‌. வராகி அம்மன் மகிஷனை வதைக்க புறப்பட்ட படைக்கு தளபதியாய் விளங்கியவள், கோபத்தின் எல்லையை கடந்தவள், ஆனால் அன்பிற்கும், பக்திக்கும் ஆதாரமானவள். எட்டு கரங்களிலும் ஆயுதம் ஏந்தி உக்கிரமாய் இருப்பவள். மங்கல மய நாராயணி எனப் போற்றபபடுபவள்.

இந்த அம்பிகைக்கு சம்பங்கி மாலை அணிவிப்பது சிறந்தது, அத்துடன் மரு இலையையும் சாற்ற வேண்டும். கல்யாணி துர்க்கை அலங்காரம் செய்து சிவப்பு நிற ஆடை அணிவிக்கலாம். அம்பிகைக்கு முன்னே மலர்க்கோலமிட்டு அரளி பூக்களால் அர்ச்சனை சேய்ய வேண்டும். சர்க்கரை பொங்கலை நைவேத்தியமாக படைக்க வேண்டும். இப்பூஜையை குமாரி பூஜை எனவும் சொல்வர். காரணம் அம்பிகையை குழந்தையாக கருதி பூஜிப்பார்கள் அதனாலேயே இப்பெயர் ஏற்ப்பட்டது.

- Advertisement -

வீணை மீட்டி பாடினால் படையோடு வருவாளே பரந்தாமன் மனையாளே என்பது பெரியோர் வாக்கு. ஆக காம்போதி ராகம் அம்பிகையின் மனதை குளிர்விக்கும், மனையும் மாட்சி பெறும். பூஜையின் முடிவில் பிரசாதமாக ஏதெனும் ஒரு துவையலை வழங்கலாம். இவ்வழிபாட்டினால், பகை அழியும், பகைவர் மீதுள்ள பயம் அறவே அழியும், தன் தான்யத்துடன் கூடிய சிறப்பான வாழ்வு அமையும். வராகியை ராகு காலத்திலும் வணங்கலாம்.

வராகி காயத்ரி மந்திரம்:
“ஓம் ச்யாமளாயை விக்மஹே
ஹல் ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வராகி ப்ரசோதயாத்”

- Advertisement -

இதை பூஜையின் போது நெய் விளக்கேற்றி 108முறை தொடர்ந்து சொல்வது பூஜைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும்.

இதையும் படிக்கலாமே:
மன வேதனையைத் தீர்க்க ஆன்மீக வழிபாடுகள்

English Overview:
Here we have details about Navratri 2019 in Tamil. Navratri 3rd day pooja in Tamil is explained here.

- Advertisement -