- Advertisement -
வாழ்க்கை வரலாறு

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை வரலாறு | Nethaji subash chandra bose history in Tamil

நேதாஜி வாழ்க்கை வரலாறு | Nethaji history in Tamil

“சுதந்திரம் என்பது கேட்டு பெறுவது அல்ல, அது நாமாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்று” என்கிற வீரமிக்க இந்த வரிகளை உதிர்த்தவர் மறைந்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் “நேதாஜி” சுபாஷ் சந்திரபோஸ் ஆவார். இன்றளவும் இளைஞர்களின் உந்து சக்தியாகவும், தேசப்பற்றுக்கே சிறந்த உதாரணமாகவும் திகழ்கின்ற நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை வரலாறு (Nethaji subash chandra bose history in Tamil) குறித்தும் அவர் குறித்த பல தகவல்களையும் இந்த கட்டுரையின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

பெயர்சுபாஷ் சந்திர போஸ்
பிறந்த தேதிஜனவரி 23, 1897
பிறந்த இடம்கட்டாக், ஒடிஷா
மற்ற பெயர்கள்நேதாஜி
பெற்றோர்ஜானகினாத் போஸ் -பிரபாவதி தத்தா
கல்வித் தகுதி பி . ஏ தத்துவவியல், ஐ.சி.ஸ்
பணிஇந்திய தேசிய ராணுவ தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்
சமயம்இந்து
இறப்புஆகஸ்ட் 18, 1945

சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம்

சுபாஷ் சந்திரபோஸ் (Subhash chandra bose birthday in Tamil) அவர்கள் 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் தேதி ஒரிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் என்னும் நகரில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் ஜானகினாத் போஸ். தாயாரின் பெயர் பிரபாவதி தத்தா என்பதாகும். சுபாஷ் சந்திரபோஸ் உடன்பிறந்தவர்கள் 6 சகோதரிகள் ,மற்றும் 7 சகோதரர்கள் ஆவார்கள். சுபாஷ் சந்திரபோஸின் தந்தை ஜானகிநாத் போஸ் கட்டாக் நகரில் அரசு வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார்.

- Advertisement -

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் யார்?

கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட சுபாஷ் சந்திரபோஸ் கட்டாக் நகரில் இருந்த ஐரோப்பிய பிராட்டஸ்டண்ட் பள்ளியில் 1902 ஆம் ஆண்டு முதல் பள்ளிக்கல்வி கற்றார். 1913 ஆம் ஆண்டு கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தத்துவ இயல் கற்க தொடங்கினார். கல்லூரியில் கல்வி பயின்ற சமயத்தில் அக்கல்லூரியில் பணிபுரிந்த ஆங்கிலேய பேராசிரியரான ஓட்டன் என்பவர் இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாடு குறித்து அவதூறாக பேசியதை கண்டு கொதித்தெழுந்த சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அவரது நண்பர்கள் ஓட்டன் பேராசிரியரை தாக்கியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் சுபாஷ் சந்திர போஸ் கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார்.

பிறகு பெரிய மனிதர்களின் சிபாரிசுடன் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்து 1918 ஆம் ஆண்டு பி.ஏ தத்துவவியல் பட்டம் பெற்றார். சுபாஷ் சந்திர போஸின் தேசப்பற்று மிகுந்த போர்க்கணத்தைக் கண்டு பயந்த அவரது தந்தை சுபாஷ் சந்திரபோசை தற்காலத்தில் ஐ.ஏ.எஸ் எனப்படும் அக்காலத்தைய ஐ .சி. எஸ் எனப்படும் இந்திய குடிமை பணி தேர்வு எழுத ஊக்கப்படுத்தினார். இதற்காக இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் சுபாஷ் சந்திரபோஸ் சேர்ந்தார். ஐ.சி.எஸ் கல்வியில் தேர்ச்சி பெற்றாலும் இந்த கல்வியால் தனது இந்திய நாட்டிற்கு பெரிய பயன் இல்லை என்றும், ஒரு ஆங்கிலேய அரசின் அடிமையாக பணியாற்றவே இந்த கல்வி பயன்படும் என்பதை உணர்ந்த சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் 1921 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பினார்.

- Advertisement -

சுபாஷ் சந்திர போஸ் பற்றி – Nethaji subash chandra bose valkai varalaru Tamil

1921 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய சுபாஷ் சந்திரபோஸ் அப்போதைய பம்பாய் நகரில் தங்கி இருந்த விடுதலைப் போராட்ட வீரரான மகாத்மா காந்தியை சந்தித்தார். காந்தியை சந்தித்து உரையாடிய சுபாஷ் சந்திரபோஸ் காந்தியின் அகிம்சை வழிமுறை மற்றும் இந்திய விடுதலைக்கான அவரின் திட்டங்கள் எதுவும் பயன் தராது என்பதை உணர்ந்தார். சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் இந்திய விடுதலை உணர்வுகளை மக்களிடம் விதைக்க உதவும் வகையில் “சுவராஜ்” என்கிற பத்திரிக்கை ஆசிரியராக செயல்பட்டார்.

1923 ஆம் ஆண்டு இந்திய இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஷ் சந்திரபோஸ் பல போராட்டங்களை தலைமை ஏற்று நடத்தினார். 1925 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு பர்மாவில் சிறையில் அடைக்கப்பட்டனர். 1927 ஆம் ஆண்டு சிறையில் இருந்து வெளிவந்த சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸின் அகில இந்திய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -

1939 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவரானதும் இந்திய கவிஞரும் நோபல் பரிசு பெற்றவருமான “ரவீந்திரநாத் தாகூர்” சுபாஷ் சந்திரபோஸை அழைத்து அவருக்கு பாராட்டு விழா நடத்தியத்துடன் “நேதாஜி” என்கிற சிறப்பு பட்டத்தை சுபாஷ் சந்திர போஸுக்கு அளித்து அவரை கௌரவித்தார்.

சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் வீரத்தையும், ஆங்கிலேயே அரசை எதிர்த்து ஆயுத போராட்டம் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தையும் அறவே விரும்பாத காந்தி, நேரு போன்ற தலைவர்கள் சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக மறைமுகமாக நெருக்கடி கொடுத்தனர். எனினும் சுபாஷ் சந்திரபோஸ் பெருந்தன்மையாக தான் வென்ற காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் ஆங்கிலேய அரசுக்கு எதிராக பலவிதமான போராட்டங்களை சுபாஷ் சந்திரபோஸ் முன்னெடுத்தார். அதில் 1941 ஆம் ஆண்டு கல்கத்தா மாநகரில் இருக்கின்ற “ஹோல்வெல்” நினைவு தூணை அகற்ற வேண்டும் என்கிற போராட்டத்தை சுபாஷ் சந்திரபோஸ் நடத்தினார். இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். எனினும் சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் ஆங்கிலேய அரசின் ரகசிய காவல் துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தார்.

சுபாஷ் சந்திர போஸ் பற்றிய தகவல்கள் (Nethaji subash chandra bose history in Tamil)

ஆங்கிலேய அரசின் ரகசிய கண்காணிப்பல் இருந்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்களிடமிருந்து தப்பிக்க எண்ணி 1941 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி இரவு வேளையில், ஒரு ஆப்கானிய பத்தான் பழங்குடி நபரை போன்ற வேடமிட்டு, கல்கத்தா நகரில் இருந்து தப்பி ஆப்கானிஸ்தான் உள்ள பெஷாவர் நகரத்திற்கு பயணமானார். பின்பு பெஷாவர் நகரத்திலிருந்து சிலரின் உதவியுடன் ரஷ்ய நாட்டிற்கு சென்றார். ரஷ்யா சென்றடைந்த சுபாஷ் சந்திரபோஸ் அங்கிருந்த இந்திய அனுதாபர்களின் உதவியை பெற எண்ணினார். எனினும் எதிர்பார்த்த உதவி கிடைக்க பெறாமல் வருந்திய சுபாஷ் சந்திர போஸ் மாஸ்கோ நகரில் இருந்த ஜெர்மன் தூதரை சந்தித்தார். அவரின் உதவியுடன் ஜெர்மன் தலைநகர் பெர்லினுக்கு வந்தடைந்த சுபாஷ் சந்திரபோஸ் அங்கிருந்த இந்திய நாட்டு அனுதாபிகளை சந்தித்து இந்திய நாடு சுதந்திரம் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.

சுபாஷ் சந்திர போஸ் ஹிட்லர் சந்திப்பு

1933 ஆண்டு ஜெர்மனி நாட்டில் நாசி கட்சி ஆட்சிக்கு வந்தது. அக்கட்சியின் தலைவராக இருந்த அடோல்ப் ஹிட்லர் ஜெர்மன் நாட்டின் ஒட்டுமொத்த சர்வாதிகாரியாக திகழ்ந்தார். 1939 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு எதிரான இரண்டாம் உலகப்போரை தொடங்கி நடத்திக் கொண்டிருந்தார் ஹிட்லர். ஆங்கிலேயர்கள் மீது தீவிர கோபம் கொண்டிருந்த ஹிட்லர் தான் இந்திய நாடு சுதந்திரம் பெறுவதற்கான உதவியை கேட்கத் தகுந்த நபர் என கருதிய சுபாஷ் சந்திர போஸ் ஹிட்லரை சந்திக்க முயற்சி செய்தார்.

1942 ஆம் ஆண்டு ஜெர்மனியில் அடால் ஹிட்லரை சந்தித்து இந்திய நாட்டின் விடுதலைக்கு உதவுமாறு கோரிக்கை வைத்தார் சுபாஷ் சந்திர போஸ். எனினும் இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டிருந்த ஜெர்மனியால் பெரிய அளவில் உதவிகள் செய்ய முடியாது என கை விரித்த அடால் ஹிட்லர், சுபாஷ் சந்திர போஸ்க்கு தேவையான அனைத்து வகையான உதவிகளும் செய்வதாக உறுதியளித்தார். அதன் படி ஜெர்மனியில் இருந்து நீர்மூழ்கிக் கப்பல் வழியாக ஜப்பானுக்கு தப்பி செல்ல ஜெர்மனி தலைவர்கள் சுபாஷ் சந்திரபோஸை அறிவுறுத்தினார்கள்.

இந்திய தேசிய ராணுவம் – Nethaji history in Tamil

1943 ஆம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து நீர்மூழ்கிக் கப்பலில் தப்பி சுபாஷ் சந்திரபோஸ் ஜப்பானின் ஆதிக்கத்தில் இருந்த சிங்கப்பூர் நகருக்கு சென்றடைந்தார். அங்கு ஆங்கிலேயே ராணுவத்தில் பணிபுரிந்த ஜப்பானியர்களிடம் சிறை கைதிகளாக இருந்த இந்திய வீரர்களை ஒன்று திரட்டி இந்தியாவில் இருக்கின்ற ஆங்கிலேய ஆட்சியை அகற்ற உதவும் “இந்திய தேசிய ராணுவம்” எனும் இந்திய விடுதலை படையை சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கினார்.

“உங்கள் ரத்தத்தை எனக்கு கொடுங்கள், நான் உங்களுக்கு விடுதலை வாங்கித் தருகிறேன்” என்கிற சுபாஷ் சந்திர போஸின் வீர முழக்கத்தை கேட்ட பல இந்தியர்கள் தானாக முன்வந்து இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தனர். 1944 ஆம் ஆண்டு ஜப்பானிய ராணுவத்துடன் கூட்டு சேர்ந்து நாட்டின் கொஹீமா மற்றும் மணிப்போர் பகுதியில் ஆங்கிலேய படைகளுக்கெதிராக இந்திய தேசிய ராணுவம் போர் புரிந்தது எனினும் தீவிரமாக போர் புரிந்த இந்திய தேசிய ராணுவம் ஆங்கிலேய படைகளின் பலத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் போரில் தோல்வி அடைந்து பின் வாங்கியது.

1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் நாடு மேற்கத்திய நாடுகளின் கூட்டணியிடம் தோல்வி அடைந்து சரணடைந்தது. இதன் காரணமாக ஜப்பானுடன் கூட்டணியில் இருந்த இந்திய தேசிய ராணுவத்தினர் பலரும் அப்பொழுது ஆங்கிலேய ராணுவத்திடம் சரண் அடைந்ததால், ஆங்கிலேயே அரசை இந்தியாவில் விட்டு அகற்ற வேண்டும் என்கிற சுபாஷ் சந்திர போஸின் கனவு நிறைவேறாமலேயே போனது.

சுபாஷ் சந்திர போஸ் இறப்பு (Subhash chandra bose death Tamil)

இரண்டாம் உலகப்போரின் இறுதி நாட்களில் மேற்கத்திய கூட்டணி நாடுகளிடமிருந்து தப்பிக்க எண்ணிய சுபாஷ் சந்திரபோஸ் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் நாள் தைவான் நாட்டில் இருக்கின்ற தைப்பேய் நகரில் இருந்து விமானத்தில் ஜப்பான் நோக்கி புறப்பட்டார். ஓடுதளத்திலிருந்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்திற்குள்ளான விமானத்தில் பயணித்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உட்பட அனைவரும் படுகாயம் அடைந்தனர்.

தீவிர தீக்காயங்கள் அடைந்திருந்த சுபாஷ் சந்திரபோஸ் அருகில் இருந்த ஜப்பானிய ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாகவும் எனினும் சிகிச்சை பலனின்றி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் அடைந்ததாகவும், அப்போதைய ஜப்பானிய ராணுவம் வானொலியில் அறிவித்தது. சந்திரபோஸின் உடல் ஜப்பானுக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருக்கின்ற ரெங்கோஜி கோயிலில் அவருடைய அஸ்தி கலசம் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பாரத ரத்னா

இந்திய நாட்டில் செயற்கரிய செயல்களை செய்பவர்களுக்கு வழங்கப்படுகின்ற மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது “போஸ்துஹுமஸ்” எனப்படும் இறந்தவர்களுக்கான பிரிவில் 1992 ஆம் ஆண்டு மறைந்த சுதந்திரப் போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. எனினும் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் இறக்கவில்லை என தீவிரமாக நம்பிய அவரது உறவினர்கள் இந்த பாரத ரத்னா விருதை ஏற்க மறுத்து விட்டனர். அதே போன்று சுபாஷ் சந்திர போஸின் ஆதரவாளர்களும் சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா என்பதை மத்திய அரசு தீவிரமாக விசாரணை செய்து அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி

இந்திய விடுதலைக்காக ஆயுதமேந்தி போராடிய இந்தியாவின் ஒப்பற்ற தேசப்பற்றாளரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் ஜெயந்தி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 23ஆம் தேதி மத்திய மற்றும் மாநில அரசுகளால் அனுசரிக்கப்படுகின்றன. 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த ஜனவரி 23 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் “பராக்கரம் திவாஸ்” என்கிற பெயர் சிறப்பு தினமாக கடைபிடிக்கப்படும் என அறிவித்தது. மேற்கு வங்க மாநிலத்தின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மற்றும் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் ஆகிய இரு கட்சிகளும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினத்தை “தேஷ் பிரேம் திவாஸ்” என்கிற பெயரில் அனுஷ்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன.

English Overview: Here we have Nethaji subash chandra bose history in Tamil or Nethaji history in Tamil. We can also say it as Nethaji subash chandra bose valkai varalaru Tamil or Nethaji subash chandra bose biography in Tamil.

- Advertisement -