அப்துல் கலாம் பற்றிய கட்டுரை தமிழ் | Abdul kalam katturai in Tamil

Abdul kalam katturai in tamil
- Advertisement -

அப்துல் கலாம் சிறப்பு கட்டுரை | Abdul kalam katturaigal in Tamil

“இளைஞர்களே கனவு காணுங்கள், இந்திய எதிர்காலம் உங்கள் கைகளில் தான் உள்ளது” என்கிற இந்த உத்வேக வரியை நம் நாட்டு இளைஞர்களுக்கு வழங்கியவர் மறைந்த ஏவுகணைத் தொழில் நுட்ப விஞ்ஞானியும், இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும் திரு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆவார். இன்றளவும் இந்திய இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக விளங்கும் திரு. அப்துல் கலாம் அவர்கள் குறித்த ஒரு கட்டுரை(Abdul kalam katturai in Tamil) இதோ.

அப்துல் கலாம் பேச்சு போட்டி

1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கின்ற ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கின்ற புகழ்பெற்ற ஆன்மிக தலமான ராமேஸ்வரம் நகரத்தில் பாரம்பரியமிக்க இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை பெயர் ஜைனுலாப்தீன், தாயார் பெயர் ஆயிஷாமாஎன்பதாகும். இவருக்கு நான்கு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி இருந்தனர்.

- Advertisement -

அப்துல் கலாமின் தந்தை ஜைனுலாபுதீன் ராமேஸ்வரத்திற்கு வருகின்ற பக்தர்களை தனுஷ்கோடி என்கிற இடத்திற்கும், ராமேஸ்வரத்திற்கு படகில் சென்று அழைத்து வரும் படகுகளை சொந்தமாக வைத்து தொழில் நடத்தினார். பூர்வீகத்தில் மிகவும் செல்வந்த குடும்பமாக இருந்தாலும் அப்துல்கலாம் அவர் பிறக்கின்ற சமயம் அவர்களின் குடும்பம் மிகுந்த வறுமை நிலையை அடைந்திருந்தது. குடும்பத்தின் வறுமை நிலையைப் போக்க அப்துல் கலாம் தனது பள்ளி நேரம் முடிந்து பகுதி நேரத்தில் செய்தித்தாள்களை விற்பனை செய்து வருமானம் ஈட்டி தனது குடும்பத்திற்கு உதவியாக இருந்தார்.

அப்துல் கலாம் பள்ளி, கல்லூரி படிப்பு

தனது பள்ளிப் படிப்பில் சராசரி மாணவனாகவே இருந்த திரு. அப்துல் கலாம் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரபலமான செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் துறையை தேர்ந்தெடுத்து படித்தார். 1954 ஆம் ஆண்டு இயற்பியல் படித்து முடித்து பட்டம் பெற்ற திரு அப்துல்கலாம் அவர்கள் தனக்கு இயற்பியலில் ஆர்வம் இல்லை என்பதை உணர்ந்து, தனது சிறு வயது கனவான போர் விமானி ஆகும் முயற்சிகளை மேற்கொண்டார்.

- Advertisement -

எனினும் போர் விமானி ஆவதற்கான தகுதி தேர்வில் அவர் சில மதிப்பெண்கள் குறைவாக எடுத்ததால், அவரின் அந்த லட்சியம் நிறைவேறாமல் போனது. எனினும் 1955 ஆம் ஆண்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி தொழில் கல்வி நிறுவனத்தில் “விண்வெளி பொறியியல்” படிப்பை தேர்ந்தெடுத்து படித்தார். பின்னர் அதே கல்லூரியில் தனது முதுகலைப் பட்டத்தையும் படித்து முடித்தார்.

அப்துல் கலாம் விஞ்ஞானி பணி – அப்துல் கலாம் கண்டுபிடிப்பு

தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு 1960 ஆம் ஆண்டு திரு. அப்துல் கலாம் மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். அங்கு “ஹோவர் கிராப்ட்” எனப்படும் நிலம் – நீரில் செல்லக்கூடிய வாகனத்தை உருவாக்கினார். சில காலத்தில் அப்பொழுது இந்தியாவின் புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளராக இருந்த திரு. விக்ரம் சாராபாய் அவர்களின் நேரடி வழிக்காட்டுதல் மற்றும் தலைமையின் கீழ் பணிபுரியும் வாய்ப்பைப் அப்துல் கலாம் பெற்றார்.

- Advertisement -

1963 முதல் 1964 வரை திரு. அப்துல்கலாம் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் (NASA) தலைமையகம் மற்றும் ஏனைய விண்வெளி ஆய்வு தளங்களுக்கு சென்று பார்வையிட்டு இந்தியாவில் எத்தகைய விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான திட்டங்களை வகுத்தார்.

இஸ்ரோவில் அப்துல் கலாம் – Abdul kalam katturai in Tamil

1969 ஆம் ஆண்டு இஸ்ரோ (ISRO) எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்ட அப்துல் கலாம், இந்தியாவின் முதல் எஸ் எல் வி (S.L.V) எனப்படும் விண்வெளி ஏவுதள திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டார். விஞ்ஞானி அப்துல் கலாமின் கோரிக்கைக்கு ஏற்ப மேலும் பல விண்வெளி ஆய்வு விஞ்ஞான பொறியாளர்களை இஸ்ரோ நிறுவனத்தில் சேர்க்க அப்போதைய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

இவரது தலைமையின் கீழ் ரோகிணி -1 (ROHINI – 1) எனப்படும் ஒரு செயற்கைக் கோள் 1980 ஆம் ஆண்டு விண்வெளியில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இவரது இந்த சாதனை பாராட்டிய அப்போதைய மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு “பத்ம பூஷன்” விருதை வழங்கி கௌரவித்தது. 1970கள் முதல் 1990 ஆண்டுகள் காலகட்டத்தில் இந்தியாவின் பி.எஸ்.எல்.வி எனப்படும் (PSLV) விண்வெளி திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தினார்.

விண்வெளியில் ராக்கெட்டுகளை ஏவுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த கலாம், இந்தியாவின் பாதுகாப்பிற்காக இந்த ராக்கெட் தொழில்நுட்பத்தை, ஏவுகணை தொழில்நுட்பமாக மாற்றுவதற்கான முயற்சிகள் பற்றி அப்போதைய பிரதமரான இந்திரா காந்தி அவர்களிடம் விவரித்தார். இந்த ஏவுகணை திட்டத்திற்கான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பொழுது, இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி, திட்டம் கிடப்பில் போடப்பட்டது. எனினும் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள், தனக்கிருந்த சில சிறப்பு அதிகாரங்களை பயன்படுத்தி தேசத்தின் பாதுகாப்பிற்காக, அப்துல் கலாமின் ஏவுகணை திட்டத்திற்கு பல ரகசியமான முறைகளில் உதவிகள் செய்தார்.

இதன் காரணமாக அப்துல் கலாமின் தலைமையின் கீழ் இயங்கிய விஞ்ஞானிகளால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஒரு சேர்க்கும் வகையிலான “அக்னி” மற்றும் “பிரித்திவி”” ரக ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. இதன் காரணமாகவே இவருக்கு “ஏவுகணை நாயகன்” என்கிற ஒரு பட்டப் பெயரும் உண்டானது.

அப்துல் கலாம் பற்றி 10 வரிகள்

அப்துல்கலாமின் சாதனைகளில் மகுடமாக கருதப்படுவது 1998 ஆம் ஆண்டு அவர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அணுகுண்டு சோதனை தான். அந்த ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் “பொக்ரான்” என்னுமிடத்தில் மேற்கொள்ளப்பட்ட அணுகுண்டு சோதனை இந்தியாவின் அணு ஆயுத பலத்தை உலகிற்கு பறைசாற்றியது. இந்திய நாட்டின் விண்வெளி ஆய்வு, தேச பாதுகாப்பு மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தில் அவர் ஆற்றிய சிறப்பான பணிகளுக்காக திரு. அப்துல் கலாமுக்கு 1997 ஆம் ஆண்டு மத்திய அரசு “பாரத ரத்னா” விருது வழங்கி அவரை கௌரவித்தது.

அப்துல் கலாம் இந்திய ஜனாதிபதி பதவி (Abdul kalam katturai in tamil)

இந்தியாவின் மீது மிகுந்த பற்று கொண்ட அப்துல் கலாம், அரசியலில் பெரிய அளவு ஈடுபாடு இல்லாத நபராகவே இருந்தார். எனினும், அவர் மீது மதிப்பு கொண்ட அப்போதைய பிரதமர் திரு. வாஜ்பாய் அவர்களின் வேண்டுகோளை ஏற்று 2002 ஆம் ஆண்டு இந்திய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2002 ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் முழுவதும் இந்திய ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

பதவிக் காலத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளால் அவருக்கும், அவர் வகித்த ஜனாதிபதிக்கும் இந்திய மக்களிடம் பெரும் மதிப்பு உண்டானது. 2007ஆம் ஆண்டு அவரின் பதவிக் காலம் முடிந்ததும் மீண்டும் இந்திய நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முயன்றார். எனினும் பல்வேறு காரணங்களால் அந்த போட்டியில் இருந்து விலகினார்.

திரு அப்துல் கலாம் அவர்கள் உலகெங்கிலும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசாங்கங்களால் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். இதோ அந்த பட்டியல்.

அப்துல் கலாம் பெற்ற விருதின் பெயர் (Abdul kalam vangiya viruthugal)

  • 1981 – பத்ம பூஷன்
  • 1990 – பத்ம விபூஷன்
  • 1997 – பாரத ரத்னா
  • 1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
  • 1998 – வீர் சவர்கார் விருது
  • 2000 – ராமானுஜன் விருது
  • 2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம், அமேரிக்கா
  • 2007 – கிங் சார்லஸ்-II பட்டம், இங்கிலாந்து
  • 2008 – பொறியியல் டாக்டர் பட்டம், சிங்கப்பூர்
  • 2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது, அமெரிக்கா
  • 2009 – ஹூவர் மெடல், அமெரிக்கா
  • 2010 – பொறியியல் டாக்டர் பட்டம், கனடா
  • 2012 – சட்டங்களின் டாக்டர், கனடா
  • 2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது
  • 2013 – வான் பிரான் விருது, அமெரிக்கா
  • 2014 – டாக்டர் ஆப் சயின்ஸ், மலேஷியா
  • 2014 – கௌரவ விரிவுரையாளர், பெய்ஜிங் பல்கலைக்கழகம், சீனா

எழுத்தாளர் அப்துல் கலாம் (Abdul kalam short essay in Tamil)

சிறந்த புத்தக வாசிப்பாளரான அப்துல் கலாம், இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலான பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார். அதில் அவரின் புகழை எப்போதும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் புத்தகமாக திகழ்வது அவர் எழுதிய “அக்னி சிறகுகள்” எனும் புத்தகம் தான்.

அப்துல் கலாம் எழுதிய புத்தகம் – APJ Abdul kalam books name in Tamil

  • இந்தியா 2020
  • எழுச்சி தீபங்கள்
  • அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை
  • என்னுடைய பயணம்

போன்ற மேலும் பல புகழ்பெற்ற புத்தகங்களையும் அப்துல் கலாம் எழுதியுள்ளார்.

அப்துல் கலாம் இறப்பு – Abdul kalam katturai in Tamil

2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் மத்திய அரசின் இந்திய நிர்வாக கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்த சிறிது நேரத்தில் உடல்நலக்குறைவால் மேடையிலேயே நிலை தடுமாறி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சில மணி நேரத்தில் திரு. அப்துல் கலாம் அவர்கள் காலமானார். ஜூலை மாதம் 30 ஆம் தேதி அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் இருக்கின்ற பேய்கரும்பு எனும் இடத்தில் முழு அரசு மரியாதையுடன், இஸ்லாமிய மத சம்பிரதாயத்தின்படி அவரது உடல் நல்அடக்கம் செய்யப்பட்டது. அப்துல் கலாம் மீது கொண்ட அன்பு மற்றும் மரியாதை காரணமாக அவர்களின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்களும் மற்றும் அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அப்துல் கலாமின் சிறப்புகள் (Abdul kalam katturaigal in Tamil)

சிறுவயதிலிருந்தே எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் மிகுந்தவராக அப்துல் கலாம் அவர்கள் விளங்கினார். எப்போதும் எளிமையாக இருப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தார். அவர் இஸ்லாமியராக இருந்த பொழுதும் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடும் பழக்கம் கொண்டிருந்தார். தினமும் 6:30 மணிக்கு எழுந்து கொள்ளும் பழக்கமுடைய திரு.கலாம் பல்வேறு பணிகளை முடித்து அதிகாலை 2 மணிக்கு உறங்கச் செல்லும் பழக்கம் கொண்டவராக இருந்தார்.

அறிவியல் மட்டுமல்ல, ஆன்மீகத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக அப்துல்கலாம் அவர்கள் விளங்கினார். இஸ்லாம் மதம் மட்டும் அல்லாது இந்து, ஜெயின, பௌத்த மற்றும் சீக்கிய மத கொள்கைகள், நூல்கள் போன்றவற்றை நன்கு கற்றறிந்தார். இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட திரு.கலாம் அவர்கள் வீணை வாசிப்பதில் திறமையானவராக இருந்தார்.

குழந்தைகள் மீது தீராத அன்பு கொண்ட கலாம் அவர்கள் எங்கு சென்றாலும் அங்கும் பள்ளி மாணவர்களை சந்தித்து, அவர்களுடன் பேசி, அவர்களை உற்சாகப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். தன்னுடைய விஞ்ஞான ஆய்வு வாழ்க்கைக்கு குடும்ப வாழ்க்கை ஒரு பாரமாக இருக்கும் என கருதிய கலாம் அவர்கள் இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தார்.

- Advertisement -