வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு

Sithambaram
- Advertisement -

வ.உ.சிதம்பரம் பிள்ளை ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீரர். மேலும் அந்த காலத்தில் தமிழ் தெரிந்த அளவிற்கு ஆங்கிலம் தெரிந்த வழக்கறிஞரும் இவர்தான்.இவர் ஆங்கிலேய கப்பல்களுக்கு போட்டியாக தூத்துக்குடி முதல் கொழும்பு வரை கப்பல் போக்குவரத்தை துவங்கினார். இதனால் இவர் “கப்பலோட்டிய தமிழன்” என்ற அடையாளத்துடன் திகழ்ந்தார்.

voc-1

இவரின் ஆற்றலும் திறனும் ஆங்கிலேய அரசுக்கு எதிராக திரும்பும் போது ஆங்கிலேய அரசு இவரை தேசதுரோகி என்று கைது செய்து ஆயுள் தண்டனை விதித்தது. இவரின் வாழ்க்கை இப்போது வளரும் குழந்தைகளுக்கு கட்டாயம் தெரிய வேண்டிய ஒன்று. அதனால் இந்த பதிவினை முழுமையாக வாசித்து வ.உ.சிதம்பரம் பிள்ளை குறித்து அறிந்து கொள்ள விழைகிறேன்.

- Advertisement -

வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறப்பு :

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உலகநாத பிள்ளை மற்றும் பரமாயி அம்மாள் என்கின்ற தம்பதிக்கு செப்டம்பர் 5, 1872ஆம் ஆண்டு மூத்த மகனாக பிறந்தார். இவரது கும்பம் ஒரு சைவ வெள்ளாளர் மரபினை சார்ந்தது.

இயற்பெயர் – வ.உ.சிதம்பரம் பிள்ளை
பிறந்ததேதி மற்றும் வருடம் – செப்டம்பர் 5, 1872
பெற்றோர் – உலகநாத பிள்ளை மற்றும் பரமாயி அம்மாள்
பிறந்த ஊர் – ஓட்டப்பிடாரம் [தூத்துக்குடி]

- Advertisement -

வ.உ.சிதம்பரம் பிள்ளை இளம்வயது கல்வி :

வ.உ.சிக்கு கல்வி கற்பதில் ஆர்வம் அதிகம் நிறைந்து காணப்பட்டார். இருந்தாலும் அவர் இருந்த காலகட்டத்தில் நினைத்த நேரத்தில் கல்வி கிடைப்பது கடினம். ஆகையால், தனது பாட்டியிடம் சிவனை மையமாக வைத்து எழுதப்பட்ட புராணங்களையும், பாட்டனாரிடம் ராமாயணத்தினையும் மற்றும் அவரது தாத்தா மற்றும் அவரது நண்பர் ஒருவரது உதவியின் மூலம் மஹாபாரதத்தினையும் முழுவதும் தெரிந்து கொண்டார்.

- Advertisement -

பிறகு தனக்கு தெரிந்த ஒரு அரசாங்க அதிகாரி மூலம் ஆங்கிலமும் கற்றுக்கொண்டார். பிறகு தனது 14ஆம் வயதில் தூத்துக்குடி சென்று பயின்றார். அதனை தொடர்ந்து திருநெல்வேலி சென்று கல்வி கற்றார்.

வழக்கறிஞராக வ.உ.சிதம்பரம் பிள்ளை :

வ.உ.சி வளர்ந்ததும் முதலில் தாலுகா அலுவலகத்தில் சில காலம் பணியாற்றினார்.பிறகு அவரது தந்தை அவரை சட்ட படிப்பை மேற்கொள்ளுமாறு கூறி அவரை திருச்சிக்கு அனுப்பினார் . ஐவரும் திருச்சிக்கு சென்று படிப்பினை வெற்றிகரமாக முடித்து திரும்பினார். இவர் குற்றவியல் [crime] மற்றும் உரிமையியல் [rights] ஆகிய பிரிவில் சட்டத்தில் தேர்ந்தார்.

voc-2

பிறகு ஓட்ட பிடாரத்தில் தனது வழக்கறிஞர் தொழிலை துவங்கிய இவர் ஏழைகளுக்காக இலவசமாக வாதாடினார். மேலும் சிறப்பாக வாதாடி பல வழக்குகளில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் நீதிபதிகளின் நன்மதிப்பினையும் பெற்றார். இதனால் அவரது தொடர் வெற்றியின் காரணமாக அவரை யாராவது ஏதாவது செய்யப்போகிறார்கள் என்று எண்ணிய அவர் தனது மகனை தூத்துக்குடிக்கு அனுப்பினார்.

பாரதியாரின் நண்பர் :

வ.உ.சி எப்போது சென்னை சென்றாலும் பாரதியாரை சந்திப்பது வழக்கம். ஏனெனில் இவரது தந்தையும் பாரதியாரின் தந்தையும் நல்ல நண்பர்கள். அதுபோன்றே இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொள்வது வழக்கம் அவ்வாறு பேசும்போதெல்லாம் நாட்டினை பற்றியே அதிகமாக பேசுவார்களாம்.

பாரதியார் யார் என்று கூறவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும் அவரை பற்றி ஒற்றை வரி கூறவேண்டும் என்றால் தனது கவிதைகள் மூலம் சுதந்திரத்தை வலியுறுத்திய ஒரு மாபெரும் புலவர். பாரதியாரது கவிதைகள் வ.உ.சிக்கு எப்போதும் பிடித்த ஒன்று.

சுதேசி கப்பல் நிறுவனம் :

ஆங்கிலேயர்கள் வாணிபம் செய்ய இந்தியாவிற்குள் நுழைந்து பிறகு நாட்டினை ஆளத்துவங்கியது நாம் அறிந்ததே . அந்த வாணிபத்தினை நிறுத்த நினைத்த வ.உ.சி ஆங்கிலேயர்களுக்கு போட்டியாக கப்பல் போக்குவரத்தினை துவங்கினார். ஆனால் அவர் முதலில் துவங்கிய போது வாடகை கப்பலை எடுத்து நடத்தியதால் அதனை தொடர்ந்து அவரால் நடத்த இயலவில்லை.

இதனால் சொந்தமாக கப்பல் வாங்க முடிவு எடுத்த வ.உ. சி தூத்துக்குடி தொழிலதிபர்கள் மற்றும் தனக்கு தெரிந்த மற்ற மாநில நண்பர்களிடம் இது குறித்து கூறி போதுமான பணம் வந்ததும் ஒரு கப்பலை சொந்தமாக வாங்கினார். பிறகு அந்த கப்பலை தூத்துக்குடி முதல் கொழும்பு வரை இயக்கினார்.

மக்கள் அனைவரும் தங்களது வியாபார சரக்குகளை சுதேசி நிறுவனம் இயக்கிய கப்பலில் கொண்டுவர ஆரம்பித்தனர். இதனால் கப்பல் நிறுவனம் வளர ஆரம்பித்தது கப்பல்களும் அதிகரிக்க துவங்கியது . இதனை பார்த்த ஆங்கிலேய அரசு இப்படியே போனால் தங்களது கப்பல் போக்குவரத்துக்கு பாதிக்கும் என்று நினைத்து ஆங்கிலேய அரசு சுதேசி நிறுவன கப்பல் தங்களது கப்பல் மீது மோத வந்தது என்று பொய் வழக்கினை தொடுத்தது.

voc-3

ஆனால் அதிலும் தனது வாதத்திறமை மூலம் வெற்றி பெற்று தொடர்ந்து தனது கப்பல் நிறுவனத்தினை நடத்தி வந்தார். இதனால் ஆங்கிலேய அரசு அவரின் வளர்ச்சியினை உற்று கவனித்து வந்தது.

தூத்துக்குடி நூற்பாலை போராட்டம் :

தென்னிந்தியாவில் தூத்துக்குடியில் ஆங்கிலேய வணிகர்களால் உருவாக்கப்பட்ட நூற்பாலை தொழிற்சாலையில் தமிழக மக்கள் மிக குறைந்த கூலியில் வேலை செய்துவந்தனர். மேலும், அங்கு வேலைசெய்பவர்களை அவர்கள் மனித தன்மை இல்லாமல் வேலைவாங்கினர். இதனை கண்டு மனம் நொந்த வ.உ.சி முதலில் அந்த தொழிலாளர்களை சந்தித்தார்.

பிறகு அனைவரையும் ஒன்றுதிரட்டி உங்களுக்கான சரியான ஊதியத்தினை அவர்களிடம் கேளுங்கள் மேலும் வாரம் ஒரு நாள் விடுமுறை கேளுங்கள் என்று கூறி ஒரு போராட்டத்தினை நடத்த அவர்களோடு சேர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் பங்களித்தார்.ஆங்கிலேயர்கள் முதலில் அவர்களின் நிலைநிறுத்த போராட்டத்தினை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை.

பிறகு போராட்டம் தீவிரமடைய நாளுக்குநாள் போராட்டத்தில் கலந்து கொள்ளும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதன் பின்னர் தொழிலாளர்களிடம் பேசிய அந்த தொழிற்சாலை நிறுவனம் அவர்கள் வைத்த கோரிக்கைகளை நிரைவேற்றியது. அதுமட்டுமின்றி அதனை தொடர்ந்து அவர்கள் வேலை நேரத்தில் அவர்களிடம் கனிவாக நடக்க துவங்கினர்.

அந்த காலத்தில் தொழிற்சங்கம் இல்லாமல் இவ்வளவு பெரிய போராட்டத்தினை நடத்தி அதனை வெற்றிகரமாக முடித்தவர் வ.உ.சி இந்த நிகழ்வினை அடுத்து ஆங்கிலேயர்களின் வெறுப்பு இவர் மீது மீண்டும் அதிகரிக்க துவங்கியது.

திருநெல்வேலி எழுச்சி :

வங்கத்தின் சுதந்திரப் போராட்டத் தலைவரான பிபின் சந்திர பால் 1908-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் நாள் விடுதலையாக இருந்தார். அந்த நாளில் பிபின் சந்திர பால் அவர்களை சிறப்பித்து ஒரு விழா நடத்தி அதில் சொற்பொழிவாற்ற வ.உ.சி மற்றும் அவரது நண்பர் சுப்ரமணிய சிவா ஆகியோர் தயாரானார்கள். விழாவிற்கான வேலைகள் தொடர்ந்து மும்முரமாக நடந்தது.

இந்த விழா நடந்து அதில் வ.உ.சி பேசினால் அது மேலும் நமக்கு பாதகமாகிவிடும் என்று நினைத்த ஆங்கிலேய அரசு அவரை கைது செய்யும் முடிவுக்கு வந்தனர். தூத்துகுடியிலேயே அவரை கைது செய்தால் மக்கள் கொந்தளிப்பார்கள் என்று எண்ணிய ஆங்கிலேயர்கள் அவரை திருநெல்வேலிக்கு வரவைத்து அவரையும் அவரது நண்பரான சுப்ரமணிய சிவாவையும் கைது செய்தது.

voc-4

இவர்களது கைதினை கேள்விப்பட்ட மக்கள் தமிழகம் முழுவதும் ஆங்கிலேய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆங்கிலேயர்களின் கீழ் வேலைசெய்த அனைத்து தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில்ஈடுபட்டனர். இந்த நிகழ்வினை திருநெல்வேலி எழுச்சி என்று சரித்திரத்தில் குறிப்பிடலாம்.

செக்கிழுத்த செம்மல் :

1908ஆம் ஆண்டு நடந்த திருநெல்வேலி எழுச்சியில் கைது செய்பட்ட வ.உ.சி அவர்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக விடுதலை உணர்வினை மக்களுக்கு புகுத்த நினைத்தற்கு 20 ஆண்டுகளும் மேலும் சுப்ரமணிய சிவாவிற்கு அடைக்கலம் குடுத்த காரணத்திற்காக 20 வருடம் என 40 வருடம் சிறை தண்டனை விதித்தனர்.

இந்த தீர்ப்பு இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. நாடு முழுவதிலும் இருந்து வ.உ .சி அவர்களுக்கு ஆதரவு பெருகியது . மேலும் இந்த தீர்ப்பினை எதிர்த்து பலரும் மேல்முறையீடு செய்யத்துவங்கினர்.

இந்நிலையில் கோவையில் சிறையில் அடைக்கப்பட்ட அவர் மிகவும் மோசமாக நடத்தப்பட்டார். உணவு, உடை மற்றும் வேலை என அனைத்திலும் மிக மோசமாக நடத்தப்பட்டார். மேலும் சிறையில் அவர் கல் உடைத்தார், புல் வெட்டினார் மேலும் மாடுகள் இழுக்கும் செக்கினை அவர் சுமந்து இழுத்தார். இது போல பல கொடுமைகளை அவர் அனுபவித்தார்.

இந்நிலையில் மேல்முறையீடு மற்றும் மக்களை போராடட்ம போன்றவைகளால் அவரது தண்டனை காலம் குறைக்கப்பட்டு 1912 ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

வ.உ.சி இறப்பு :

வ.உ. சி தொடர்ந்து மக்களுக்காக தனது போராட்டத்தினை நடத்திவந்தார் . பிறகு வ.உ.சி. 1936-ஆம் ஆண்டு நவம்பர் 18-ஆம் நாள் மறைந்தார்.

வ.உ.சி நினைவு சின்னங்கள் :

ஒட்டப்பிடாரத்தில் அவர் வாழ்ந்த வீட்டினை அவரது நினைவு இடமாக மாற்றி அதில் நூலகம் மற்றும் அவரை பற்றிய புகைப்படங்கள் மற்றும் குறிப்புக்கள் என அனைத்தும் அங்கே உள்ளது. மேலும் தமிழம் முழுவதும் பல இடங்களில் இவரது சிலை வைக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மத்திய சிறையில் அவர் இழுத்த செக்கு இன்று சென்னை கிண்டியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துறைமுகத்திற்கு இவரது பெயரினை சூட்டியுள்ளது. மேலும் தமிழம் முழுவதும் வ.உ.சி என்ற பெயரில் பல தெருக்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சாலைகள் என பலவற்றிற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

English Overview:
Here we have V O Chidambaram Pillai biography in Tamil. Above we have V O Chidambaram Pillai history in Tamil. We can also say it as V O Chidambaram Pillai varalaru in Tamil or V O Chidambaram Pillai essay in Tamil or V O Chidambaram Pillai Katturai in Tamil.

சர் C.V இராமன் வாழ்க்கை வரலாறு குறித்து அறிய இங்கு கிளிக் செய்யவும்

- Advertisement -