
ஒவ்வொருவரும் கடவுளை வேண்டுவதும் ஆலயம் செல்வதும் தனக்கு தேவையானவற்றை இறைவனிடம் கேட்டு பெறுவதற்காக தான். மன நிம்மதிக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் கோவிலுக்கு செல்வோர் மிகக் குறைவு. ஒவ்வொரு மனிதனுக்கும் பலவிதமான தேவைகள் இருக்கிறது. அவற்றையெல்லாம் தன்னுடைய முயற்சியுடன் சேர்த்து நிறைவேற்றி கொள்ள இறைவனை தஞ்சம் அடைகிறார்கள்.
பெரும்பாலும் எல்லோரும் ஆலயத்திற்கு செல்வது இதற்காகத் தான். வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று ஆலயம் செல்வோரும், எனக்கு இதை நிறைவேற்றித் தாருங்கள் என்று கேட்பவர்களும் வீட்டிலே எளிமையான முறையில் இப்படி வேண்டுதல் வைத்தாலும் உடனே நிறைவேறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வேண்டுதலை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிய தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
முதலில் பச்சைக் கற்பூரத்தை வைத்து செய்யப்படும் இந்த வேண்டுதலை பற்றி தெரிந்து கொள்வோம். இந்த வேண்டுதலை எந்த நாளில் வேண்டுமானாலும் தொடங்கலாம். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். பெண்கள் மாதவிடாய் நேரத்தில் மட்டும் இதை செய்ய வேண்டாம்.
இந்த வேண்டுதலுக்கு சிறிதளவு பச்சைக் கற்பூரத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியில் சென்று விடுங்கள். நிலை வாசலில் அருகில் பச்சைக் கற்பூரத்தை கையில் வைத்துக் கொண்டு நீங்கள் எந்த வேண்டுதலுக்காக இதை ஏற்றுகிறீர்களோ அதை நினைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு வாசலில் இந்த பச்சை கற்பூரத்தை வைத்து ஏற்றி விடுங்கள்.
அந்த நேரத்தில் குலதெய்வம் இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்துக் கொண்டு விநாயகரின் நினைத்து உங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டுமென்று வேண்டி கொள்ளுங்கள். பச்சைக் கற்பூரம் எரிந்து முடியும் வரை அங்கே நிற்க வேண்டும். அதன் பிறகு வீட்டிற்குள் சென்று விடுங்கள். இதை தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் போது நிச்சயம் உங்களுடைய எந்த வேண்டுதலாயினும் அது பலிக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதில் இன்னொரு எளிமையான பரிகார முறையும் உண்டு. இதற்கு ஒரு முழு தேங்காய் வாங்கிக் கொள்ளுங்கள். தேங்காயை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து உங்களுடைய பூஜை அறையில் தெற்கு திசையை பார்த்தவாறு இந்த தேங்காய் வைத்து விடுங்கள். விநாயகப் பெருமானை மனதார நினைத்துக் கொண்டு உங்களுடைய சின்ன வேண்டுதல்கள் (அதாவது உடனே நடக்க கூடிய ) நிறைவேற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இந்த தேங்காய்க்கு தினமும் கற்பூர தீபாராதனை காட்டுங்கள்.
அந்த வேண்டுதல் நிறைவேறியவுடன் தேங்காயை கொண்டு விநாயகருக்கு சூரை விட்டு விடுங்கள். இந்த பரிகாரம் உங்களுடைய எளிமையான வேண்டுதலுக்கு நல்ல பலனை தரும் என்று சொல்லப்படுகிறது. பெரிய அளவிலான வேண்டுதலை வைக்க இதை செய்யலாமா? என்றால் தாராளமாக செய்யலாம் தவறில்லை.
இதையும் படிக்கலாமே: பண வரவை அதிகரிக்க வெள்ளிக்கிழமை விநாயகர் வழிபாடு
ஆனால் தேங்காய் அது வரை அழுகாமல் இருக்க வேண்டும். அதற்காகத் தான் இந்த பரிகார முறைக்கு சின்ன சின்ன வேண்டுதல்களை வைத்துக் கொள்ள சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருந்தால் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம்.