
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நாம் அனைவருமே கேள்விப்பட்டு இருக்கிறோம். 12 வருடங்களுக்கு ஒருமுறை வரக்கூடிய சிறப்பு மிகுந்த தை மாதமாக இந்த மாதம் திகழ்கிறது. இதற்கு காரணம் என்னவென்றால் குருபகவான் ரிஷப ராசியில் இருந்து கொண்டு சூரிய பகவானை பார்க்கிறார். அதனால் தான் இந்த தை மாதத்திற்கு இவ்வளவு சிறப்புகள் இருக்கிறது. இந்த முறையில் குரு சூரியனை பார்க்கும் பொழுது நம்முடைய பொருளாதாரத்தில் மிக சிறப்பான முன்னேற்றத்தை பெற முடியும். அந்த முன்னேற்றத்தை பெறுவதற்கு தை மாதத்தில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மிகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
பணம் இல்லாமல் யாராலும் வாழ்க்கையை வாழவே முடியாது. ஒரு நாள் கூட கையில் பணம் இல்லாமல் நம்மால் இருக்க முடியாது. பணத்திற்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் என்பது இருக்கிறது. ஒரு நாள் நம் கையில் பத்து ரூபாய் வந்துவிட்டால் மறுநாள் அது 20 ரூபாயாக செலவாகி விடுகிறது. இதற்கு காரணம் என்னவென்று யாராலும் சொல்ல முடியாது. ஒரு இடத்தில் நிலையாக இருக்காமல் சென்று கொண்டே இருக்கும் என்பதால் தான் அதற்கு செல்வம் என்றே பெயர். அப்படிப்பட்ட செல்வத்தை நிரந்தரமாக பெறுவதற்கு செய்யக்கூடிய தை மாத வழிபாட்டை தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான திதி என்பது வரும். வளர்பிறை தேய்பிறை என்று இரண்டு விதங்களில் திதிகள் வரும். இந்த திதிகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான பலன் இருக்கிறது என்றும், அந்த ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு தெய்வத்தை நாம் வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். நாமும் அந்த வழிபாட்டை செய்து கொண்டு தான் இருக்கிறோம். தை மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு திதிக்கும் மிகப்பெரிய பலன்கள் என்பது இருக்கிறது. அந்த திதிக்குரிய தெய்வத்தை வழிபாடு செய்வதோடு மகாலட்சுமி தாயாரையும் நாம் வழிபாடு செய்தோம் என்றால் நம்மால் இந்த வாழ்க்கையில் நிரந்தரமான செல்வத்தை பெற முடியும்.
இந்த வழிபாட்டிற்கு தினமும் நாம் ஆலயம் செல்ல வேண்டும் என்று இல்லை. வீட்டில் இருக்கக் கூடிய மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து மகாலட்சுமி தாயாருக்கு என்று ஏதாவது ஒரு இனிப்பு பொருளை வைத்து முழுமனதோடு மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்தாலே அதற்குரிய பலன் என்பது நமக்கு கிடைக்கும். இதோடு மட்டுமல்லாமல் வில்வ மரம், துளசி செடி போன்ற மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய செடிகளுக்கு மஞ்சள் கலந்த தண்ணீரை தங்கள் கைகளால் ஊற்றி மகாலட்சுமி தாயாரே அந்த செடியில் வாசம் செய்வதுபோல் உணர்ந்து அவளிடம் நிரந்தர செல்வம் வேண்டும் என்று கேட்டால் நிச்சயம் மகாலட்சுமி தாயார் நமக்கு செல்வ செழிப்பை அருள்வார்.
மேலும் வீட்டில் காலையிலும் மாலையிலும் மகாலட்சுமியின் அஷ்டோத்திரம், அஷ்டகம் போன்றவற்றை ஒலிக்கச் செய்து நமக்குத் தெரியும் பட்சத்தில் நாமும் கூற வேண்டும் மேலும் நம்மளால் நம்மால் இயலும் பட்சத்தில் மகாலட்சுமி தாயாருக்கு தாமரை மலர்களையும் வில்வ இலைகளையும் வாங்கி சமர்ப்பித்து வழிபாடு செய்தோம் என்றால் இந்த தை மாதத்தில் இருந்து நம்முடைய வாழ்க்கையில் செல்வ வளம் என்பது உயர ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே:செல்வம் பெருக மாட்டுப்பொங்கல் அன்று ஏற்ற வேண்டிய தீபம்
மிகவும் சக்தி வாய்ந்த அற்புதமான 12 வருடங்களுக்கு ஒரு முறை வரக்கூடிய இந்த தை மாதத்தை அனைவரும் தவறவிடாமல் அனுதினமும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்து நிரந்தரமான செல்வத்தை பெற்று சிறப்புடன் வாழ்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.