- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வம் பெருக மாட்டுப்பொங்கல் அன்று ஏற்ற வேண்டிய தீபம்

செல்வம் பெருக மாட்டுப்பொங்கல் அன்று ஏற்ற வேண்டிய தீபம்

- Advertisement -

பொங்கல் திருநாளில் முக்கியமான இன்னொரு திருநாள் என்றால் அது மாட்டுப் பொங்கல் தான். உழவர் திருநாளில் எப்படி நாம் உழவருக்கும், சூரிய பகவானுக்கும் நன்றி செலுத்தும் விதமாக பொங்கலை வைத்து கொண்டாடுகிறோமோ, அதே போல் மாட்டுப் பொங்கல் தினத்தன்று அன்று அந்த உழவுக்கு உறுதுணையாக நிற்கக்கூடிய மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப்பொங்கலை கொண்டாடுகிறோம். அப்படியான இந்த திருநாளில் நந்தி பகவானின் அருளை முழுமையாக பெறுவதற்குரிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் இப்பொழுது ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செல்வம் சேர மாட்டுப் பொங்கல் வழிபாடு

கால்நடைகள் எப்பொழுதுமே நம்முடைய உழவுக்கு உறுதுணையாக நிற்கக் கூடியவை அவற்றில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. அத்தகைய சிறப்பு வாய்ந்த கால்நடைகளில் ஒன்றான மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தைத்திருநாளுக்கு அடுத்த நாள் அவைகளை வழிபடுவது நம்முடைய பாரம்பரியமான வழக்கம். இந்த வழிபாடு கிராமப்புறங்களில் வெகு விமர்சையாக இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

- Advertisement -

அத்தகைய சிறப்பு மிக்க இந்த வழிபாட்டை மேலும் சிறப்புமிக்கதாக மாற்றக் கூடிய ஒரு முறையை தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த முறையில் நாம் நந்தி பகவானை வழிபட்டால் நந்தி பகவானோடு சேர்த்து சிவபெருமானின் அருளும் முழுமையாக கிடைத்து நம்முடைய வாழ்க்கையில் செல்வநலன் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த வழிபாட்டை நாம் எளிமையாக வீட்டில் இருந்தபடியே செய்யலாம் என்பது மேலும் சிறப்பு வாய்ந்த தகவல்.

இந்த வழிபாட்டை நாளைய தினம் சூரியன் மறைந்த பிறகு அல்லது சூரிய உதயத்திற்கு முன்பு செய்ய வேண்டும் அது உங்கள் விருப்பம். இந்த வழிபாடு செய்வதற்கு வீட்டில் சிவலிங்கம், ஸ்படிகலிங்கம் பானலிங்கம், சிவபெருமான் படம் போன்றவை இருந்தால் மிகவும் நல்லது இல்லை என்றாலும் பரவாயில்லை பூஜை அறையில் வழிபாடு செய்யலாம். இதற்கு நமக்கு தேவையான ஒரே ஒரு பொருள் அருகம்புல் இவற்றை கொஞ்சம் அதிகமாக எடுத்து உங்கள் பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

சிவபெருமான் படம் இருந்தால் அதற்கு முன்பாக வைத்து விடுங்கள் இல்லை என்றால் பூஜை அறையில் வைத்து விட்டு அந்த அருகம்புல்லுக்கு முன்பாக அகல் விளக்கு ஏற்ற வேண்டும். இந்த அகல் விளக்கு ஐந்து எண்ணிக்கையில் இருக்க வேண்டும். இதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சி திரி போட்டு ஏற்ற வேண்டும். இந்த தீபம் கிழக்கு முகமாக எரிய வேண்டும். அடுத்து இந்த தீபத்திற்கு முன்பாக நீங்கள் வடக்கு பார்த்து அமர்ந்து கொள்ளுங்கள். இவ்வாறாக அமர்ந்து சிவபெருமானையும் நந்தி பகவானையும் மனதார நினைத்து உங்கள் பண பிரச்சனைகள் தீர்ந்து செல்வந்தரை வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அத்துடன் சேர்த்து இந்த மந்திரத்தையும் சொல்லுங்கள்.

நந்தி பகவான் மந்திரம்:

“தத்புருஷாய வித்மஹே நந்திகேஷ்வராய தீமஹி
தந்நோ விருஷபாரு ப்ரச்சோதயாத்..”

- Advertisement -

இந்த மந்திரத்தை ஒரே ஒருமுறை சொன்னாலும் போதும் நந்தி பகவானின் அருளையும் சிவபெருமானின் அருளையும் முழுவதுமாக பெற்றுவிடலாம். இதன் மூலமாக நம்முடைய வறுமை குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி செல்வந்தராகவும், நிம்மதியாகவும் வாழக்கூடிய சூழல் உருவாகும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:செவ்வாய் கிழமை தைத்திருநாளில் படிக்க வேண்டிய முருகன் திருப்புகழ்

நாளைய தினம் உங்களின் வழிபாட்டோடு சேர்த்து இந்த ஒரு தீபம் ஏற்றி மந்திரமும் சேர்ந்து சொன்னால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத நல்லதொரு நிலையை எட்டலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் வழிபட்டு நல்ல பலனை பெறலாம் என்று இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்