- Advertisement -
மந்திரம்

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருள் மற்றும் அதன் பலன்கள் பற்றி தெரியுமா ?

நாம் அனைத்து மந்திரத்தை ஜெபிக்கும் முன்பும் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை ஜபிப்பது வழக்கம். இறைவனை போற்றி பாடும்போதும் ஓம் என்று கூறுவதுண்டு. ஓம் நமசிவாய, ஓம் முருகா போற்றி , ஓம் விநாயகா போற்றி இப்படி ஓம் இல்லாமல் எந்த மந்திரத்தையும் கூறுவது கிடையாது. அப்படி ஓம் என்னும் மந்திரத்திற்கு என்ன விஷேஷம், அதன் பொருள் தான் என்ன, அதை உச்சரிப்பதால் என்ன பயன் என்று பார்ப்போம் வாருங்கள்.

ஓம் என்பது இந்த உலகம் இயங்குவதற்கான ஒரு மூல சக்தியாக விளங்குகிறது. அனைத்து மந்திரங்களுக்கும் இதுவே உயிர் நாடியாக இருக்கிறது. இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பு இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவி இருந்த ஒரு சக்தியாக இருந்தது. ஓம் என்ற பிரணவ மந்திரத்திற்கு பல பொருள்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஓம் என்றால் “அனைத்து சக்திகளும் அதில் அடக்கம்” என்று பொருள் கொள்ளலாம். ஆனால் ஓம் என்பதற்கு பற்பல பொருள்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதில் ஒன்று தான் “இறைவா எனக்குள் இருக்கும் ஜீவனை உன்னுடன் சேர்த்துக்கொள்” என்ற பொருள்.

மேலே உள்ள பொருளை அடிப்படையாக கொண்டு பார்த்தால், ஒருவர் ஓம் நமசிவாய என்று ஜபித்தால், சிவபெருமானே என்னுள் இருக்கும் ஜீவனை உங்களோடு சேர்த்துக்கொண்டு பிறவா நிலையில் எனக்களியுங்கள் என்று பொருள்படுகிறது. ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் ஒருபுறம் இருக்க, அந்த மந்திரத்தை ஜபித்தால் என்ன பலன்களை பெறலாம் என்று பார்ப்போம் வாருங்கள்.

- Advertisement -

ஓம் என்னும் மந்திரம் ‘ஆ’ , ‘ஓ’ ,’ம்’ ஆகிய மூன்று ஓசைகளால் உருவான ஒரு அற்புத மந்திரம் ஆகும். இந்த மந்திரத்தில் உள்ள மூன்று ஓசைகளையும் ஒருவர் உச்சரிக்கும்போது உடலில் பல மாறுதல்கள் நிகழ்கின்றன. ‘ஆ’ என்ற ஓசையை ஒருவர் எழுப்பும் சமயத்தில் உடலின் கீழ் பகுதி முதல் வயிற்று பகுதி வரை இயக்கம் பெறுகிறது. ‘ஓ’ என்ற ஓசையை உச்சரிக்கும் பொழுது மார்பு பகுதி சீரான இயக்கத்தை பெறுகிறது. ‘ம்’ என்ற ஓசையை உச்சரிக்கும் பொழுது நமது மூளை பகுதி தூண்டப்படுகிறது. அதோடு நமது முகத்தில் உள்ள தசைகளும் நன்கு வேலை செய்கின்றன.

ஒருவரது மனதை ஒருமை படுத்தி அவரது என்ன ஓட்டங்களை கட்டுப்படுத்தி தியான நிலைக்கு இட்டு செல்லும் அற்புத சக்தி ஓம் என்னும் மந்திரத்திற்கு உள்ளது. இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபிப்பதன் மூலம் நமது உடலின் இயக்கம் சீரடைகிறது. நமக்குள் இருக்கும் எதிர் மறை ஆற்றல் அழிந்து நேர் மறை ஆற்றல் பெருகுகிறது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
முருகனின் 125 தமிழ் பெயர்கள்

தினமும் காலையில் 20 நிமிடங்கள் தியான நிலையில் அமர்ந்து வெறும் ஓம் என்ற மந்திரத்தை மட்டும் கூறினாலே போதும் அந்த நாள் முழக்க நாம் சிறப்பாக செயல்பட அந்த மந்திரம் பல அற்புத ஆற்றல்களை நமது உடலிற்கு தருகிறது. அதாவது இதன் மூலம் ‘எண்டார்பின்’ என்னும் ஒருவகை ஹார்மோன் சுருக்கப்பட்டு நம்மை உற்சாகமாக வைத்துக்கொள்ள “ஓம்” என்னும் பிரணவ மந்திரம் உதவுகிறது என்று நவீன ஆய்வுகள் கூறுகின்றன.

இதையும் படிக்கலாமே:
வாழ்வில் இழந்த அனைத்தையும் திரும்ப பெற உதவும் மந்திரம்

English Overview:
Here we have Om mantra meaning in Tamil. It is also called as Pranava mantra meaning in Tamil.

- Advertisement -