முருகனின் 125 தமிழ் பெயர்கள்

தமிழ்க்கடவுள் முருகனுக்கு அழகிய பெயர்கள் பல உண்டு. அதில் சிலவற்றை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

lord-Murugan

முருகன் பெயர்கள்
1.சக்திபாலன், 2.சரவணன், 3.சுப்ரமண்யன், 4.குருபரன், 5.கார்த்திகேயன், 6.சுவாமிநாதன், 7.தண்டபானி, 8.குக அமுதன், 9.பாலசுப்ரமணியம், 10.நிமலன், 11.உதயகுமாரன், 12.பரமகுரு, 13.உமைபாலன், 14.தமிழ்செல்வன், 15.சுதாகரன்

16.சத்குணசீலன், 17.சந்திரமுகன், 18.அமரேசன், 19.மயூரவாஹனன், 20.செந்தில்குமார், 21.தணிகைவேலன், 22.குகானந்தன், 23.பழனிநாதன், 24.தேவசேனாபதி, 25.தீஷிதன், 26.கிருபாகரன், 27.பூபாலன், 28.சண்முகம், 29.உத்தமசீலன், 30.குருசாமி

31.திருஆறுமுகம், 32.ஜெயபாலன், 33.சந்திரகாந்தன், 34.பிரபாகரன், 35.சௌந்தரீகன், 36.வேல்முருகன், 37.பரமபரன், 38.வேலய்யா, 39.தனபாலன், 40.படையப்பன், 41.கருணாகரன், 42.சேனாபதி, 43.குகன், 44.சித்தன், 45.சைலொளிபவன்

46.கருணாலயன் 47.திரிபுரபவன், 48.பேரழகன், 49.கந்தவேல், 50.விசாகனன், 51.சிவகுமார், 52.ரத்னதீபன், 53.லோகநாதன், 54.தீனரீசன், 55.சண்முகலிங்கம், 56.குமரகுரு, 57.முத்துக்குமரன், 58.அழகப்பன், 59.தமிழ்வேல், 60.மருதமலை,

- Advertisement -

61.சுசிகரன், 61.கிரிராஜன், 62.குமரன், 63.தயாகரன், 64.ஞானவேல், 65.சிவகார்த்திக், 66.குஞ்சரிமணாளன், 67.முருகவேல், 68.குணாதரன், 69.அமுதன், 70.செங்கதிர்செல்வன், 71.பவன்கந்தன், 72.திருமுகம், 73.கதிர்காமன், 74.வெற்றிவேல், 75.ஸ்கந்தகுரு

76.பாலமுருகன், 77.மனோதீதன், 78.சிஷிவாகனன், 79.இந்திரமருகன், 80.செவ்வேல், 81.மயில்வீரா, 82.குருநாதன், 83.பழனிச்சாமி, 84.திருச்செந்தில், 85.சங்கர்குமார், 86.சூரவேல், 87.குருமூர்த்தி, 88.சுகிர்தன், 89.பவன், 90.கந்தசாமி

91.ஆறுமுகவேலன், 92.வைரவேல், 93.அன்பழகன், 94.முத்தப்பன், 95.சரவணபவன், 96.செல்வவேல், 97.கிரிசலன், 98.குலிசாயுதன், 99.அழகன்,100. தண்ணீர்மலயன், 101.ராஜவேல், 102.மயில்பிரீதன், 103.நாதரூபன், 104.மாலவன்மருகன், 105. ஜெயகுமார்

106.செந்தில்வேல், 107.தங்கவேல், 108.முத்துவேல், 109.பழனிவேல், 110.கதிர்வேல், 111.ராஜசுப்ரமணியம், 112.மயூரகந்தன், 113.சுகதீபன், 114.குமரேசன், 115.சுப்பய்யா, 116.கார்த்திக், 117.சக்திதரன், 118. முத்துக் குமரன், 119.வேலவன், 120.கதிர் வேலன், 121. விசாகன், 122. கந்தன், 123. விசாகன், 124. குமாரன், 125.அக்னி பூ

முருகு என்றால் அழகு என்று பொருள். மாறாத இளமையோடும், பலர் வியக்கும் அழகோடும், பேரின்ப நறுமணத்தோடும், அழியா தெய்வத்தன்மையோடும் விளங்கும் முருகனுக்கு பார்போற்றும் பல பெயர்கள் உள்ளன. அந்த பெயர்கள் ஒவ்வொன்றிற்கும் அற்புதமான அர்த்தங்களும் உள்ளன. உதாரணத்திற்கு,

விசாகம் நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன்.
அக்கினியில் தோன்றியதால் அக்னி பூ
கங்கை தன் கரங்களால் முருகனின் தீப்பிழம்பு கருவை ஏந்தியதால் கங்காதரன்.
சரவண பொய்கையில் மிதந்ததால் சரவணபவன்.
கார்த்திகை பெண்களிடம் வளர்ந்ததால் கார்த்திகேயன்.
அறுவரும் இணைத்து ஒருவராக மாறியதால் கந்தன்
ஆறுமுகம் கொண்டதால் ஆறுமுகன் / சண்முகன்

இப்படி தமிழ்க்கடவுள் முருகன் பெயர்கள் அனைத்திற்கு பின்பு ஒரு அர்த்தம் ஒளிந்துள்ளது.

இதையும் படிக்கலாமே:
கந்த சஷ்டி கவசம் கூறுவதற்கு பின் ஒளிந்துள்ள மிகப்பெரிய அறிவியல்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள முருகன் பெயர்கள் பல வற்றை பெற்றோர்கள் பலர் தங்களது குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்வது வழக்கம். முருகன் பெயர்கள் என்றாலே அது அழகிய தமிழில் தான் இருக்கும். அப்படி பட்ட முருகன் பெயர்கள் பலவற்றை நாம் உச்சரிக்க உச்சரிக்க நம்முள் ஒரு இனம் புரியாத இன்பம் பிறக்கும்.

முருகன் பெயர்கள் பலதை பல்வேறு நாட்டை சார்ந்த பலரும் வைத்துள்ளனர். உதாரணத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா போன்ற பல நாடுகளில் முருகன் பெயர்கள் பிரபலம். தமிழ் கடவுள் முருகன் சிவ மைந்தன் என்பதால் சிவ பக்தர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளுக்கு முருகன் பெயர்கள் சூட்டி மகிழ்வதுண்டு. நமக்கு தெரிந்த முருகன் பெயர்கள் சில, இன்னும் தெரியாத பல முருகன் பெயர்கள் உள்ளன. அதை எல்லாம் சீராக தொகுக்க முயற்சிப்போம். முருகன் பெயர்கள் பலவற்றை இனி வரும் காலங்களிலும் நம் குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்வோம்.

மனிதர்களுக்கு மட்டும் அல்ல பல முன்னணி நிறுவனங்களுக்கும் முருகன் பெயர்கள் சூட்டப்படுவதுண்டு. சரவணா ஸ்டோர்ஸ், சரவண பவன் இப்படி முருகன் பெயர்கள் கொண்ட நிறுவனங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். முருகன் பெயர்கள் உள்ள இடத்தில் அவரின் அருள் இருக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த சான்று. கலை துறையிலும் கூட முருகன் பெயர்கள் கொண்டு எடுக்கப்பட்ட பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளன. அதே போல பல கல்வி நிறுவனங்களும் கூட முருகன் பெயர்கள் கொண்டு இயங்குகின்றன. இப்படி முருகன் பெயர்கள் பலதும் நாம் திரும்பும் திசை எல்லாம் ஒலித்துக்கொண்டே தான் இருக்கின்றன. இனி வரும் காலங்களிலும் நாம் முருகன் பெயர்கள் பலதை உலகெங்கும் ஒலித்திட வை செய்வோம்.

English Overview

This page has complete details about Tamil God Lord Murgan names. God Murugan is very famous in tamil nadu. He has many names like Lord Subramanya, Lord Kartikeya and many others. Here we can see Lord Murugan names in tamil. This can also be a tamil baby boy names.  Many tamil people are keeping these names for their baby. So it can also be tamil baby boy names.