- Advertisement -
சமையல் குறிப்புகள்

பாலக் பன்னீர் செய்வது இவ்வளவு ஈஸியா? சத்தான உணவை, சுவையாக செய்து கொடுத்தால் யாரும் வேண்டாம் என்று சொல்லவே மாட்டாங்க.

- Advertisement -

பாலக் கீரையை வைத்து சுவையாக பாலக் பன்னீர் செய்வது எப்படி என்பதை பற்றித்தான் ரெசிபி. வடமாநிலத்தில் உள்ளவர்கள் இந்தக் கீரையை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆரோக்கியம் தரக்கூடிய இந்த கீரையை குழந்தைகளுக்கு பன்னீரோடு சேர்த்து சமைத்துக் கொடுத்தால், வேண்டாம் என்று சொல்லாமல் விரும்பி சாப்பிடுவார்கள். சப்பாத்திக்கு, நாண், ஃபுல்கா, பரோட்டாவிற்கு கூட இதை சைடிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் நாம் இட்லி தோசைக்கு கூட தொட்டு சாப்பிடலாம் சுவையாக தான் இருக்கும். வாங்க சுவை தரும் ஆரோக்கியம் தரும் அந்த ரெசிபி எப்படி செய்வது. என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

செய்முறை

முதலில் கொஞ்சம் காம்புகளோடு ஒரு பெரிய கைப்பிடி அளவு பாலக்கீரைகளை எடுத்து சுத்தமாக கழுவி அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, கீரை மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி, 5 நிமிடம் போல வேக வைத்துக் கொள்ளுங்கள். வேகவைத்த கீரையை வடிகட்டி கீரையை தனியாக, தண்ணீர் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வேகவைத்த கீரை தண்ணீரை கீழே ஊற்றக்கூடாது. கிரேவியில் சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் – 1 ஸ்பூன் ஊற்றி, பூண்டு – 6 பல், நறுக்கிய வெங்காயம் – 1 கைப்பிடி அளவு, இஞ்சி – 1 இன்ச், முந்திரி பருப்பு – 5, பெரிய தக்காளி பழம் – 1, நறுக்கி போட்டு இந்த பொருட்களை எல்லாம் நன்றாக வதக்கி கொள்ள வேண்டும்.

பிறகு இதோடு வேகவைத்த கீரைகளை மட்டும் போட்டு, அடுப்பை அணைத்து விடுங்கள். இது நன்றாக ஆறட்டும். ஆறிய பின்பு வதக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, முந்திரி, தக்காளி, கீரை எல்லாவற்றையும் மிக்ஸி ஜாரில் போட்டு, கீரையில் இருந்து வடிகட்டி வைத்திருக்கும் தண்ணீரை ஊற்றி, இதை எழுது போல அரைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பன்னீரை எடுத்து கியூப் வடிவில் வெட்டி அதையும் தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து இப்போது பாலக் பன்னீர் தாளித்து விட வேண்டியது தான். அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் – 1 ஸ்பூன் ஊற்றி, ஏலக்காய் – 2, கிராம்பு – 2, பட்டை – 1 துண்டு, மல்லி தூள் – 1 ஸ்பூன், மிளகாய் தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், சீரகத் தூள் – 1/2 ஸ்பூன், சேர்த்து இதை எண்ணெயிலேயே கருகாமல் 30 செகண்ட்ஸ் வதக்க வேண்டும்.

பிறகு மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் கீரையை இதில் ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, ஒரு நிமிடம் போல கொதி வந்ததும் உடனடியாக வெட்டி வைத்திருக்கும் பன்னீரையும் சேர்த்து இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வையுங்கள்.

- Advertisement -

அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு தான் எண்ணெயில் மிளகாய் தூள், மல்லித்தூள், மற்ற மசாலா பொருட்களை சேர்த்து வதக்க வேண்டும். இந்த மசாலாத்தூள் எண்ணெயில் கருகி விட்டால் கிரேவியின் சுவை மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: ஒரு கப் இட்லி மாவு இருந்தா அஞ்சே நிமிஷத்துல ரொம்பவே சூப்பரான, கிரிஸ்பியான இந்த குணுக்கு ரெசிபியை செய்து கொடுங்க. இவ்வளவு ஈஸியான ஈவினிங் ஸ்நாக்ஸ் இருக்கிறது இதுவரைக்கும் தெரியாம போச்சே.

இறுதியாக வெல்லம் பொடி – 1 ஸ்பூன், சேர்த்து ஃபிரஷ் கிரீம் ஊற்றி, கஸ்தூரி மேத்தி தூவி, பட்டர் – 1 ஸ்பூன் ஊற்றி, கலந்துவிட்டு அடுப்பை அணைத்தால் சூப்பரான பாலக் பன்னீர் தயார். இதில் அவ்வளவு சத்து இருக்கிறது. குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை செய்து கொடுத்தால் ரொம்ப ரொம்ப நல்லது. உங்க வீட்ல ஒரு முறை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -