ஒரு கப் இட்லி மாவு இருந்தா அஞ்சே நிமிஷத்துல ரொம்பவே சூப்பரான, கிரிஸ்பியான இந்த குணுக்கு ரெசிபியை செய்து கொடுங்க. இவ்வளவு ஈஸியான ஈவினிங் ஸ்நாக்ஸ் இருக்கிறது இதுவரைக்கும் தெரியாம போச்சே.

kunuku
- Advertisement -

பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு மாலையில் ஏதாவது ஒன்று செய்து கொடுத்து தான் ஆக வேண்டும். இதற்காக அதிக நேரம் எடுத்து பெரிதாக எதையும் செய்து கொண்டிருக்க முடியாது. ஏனென்றால் மாலையில் அதை சாப்பிட்டு விட்டால் இரவு சாப்பிட மாட்டார்கள். எனவே ஏதாவது லைட்டாக அதே நேரத்தில் ரொம்ப சிம்பிளாக இருக்கும் ஸ்னாக்ஸ் வகைகள் தான் இதற்கு சரியாக இருக்கும். ஒரு கப் இட்லி மாவு இருந்தால் அதை வைத்து சூப்பரான இந்த குணுக்கு ரெசிபியை செய்து குழந்தைகளுக்கு கொடுத்து விடலாம். வாங்க அதை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த குணுக்கு ஸ்னாக்ஸ் செய்வதற்கு பெரியதாக ஒன்றும் பொருட்கள் தேவை படாது. நம் வீட்டில் இருக்கும் ஒன்று இரண்டு பொருட்களை வைத்து ரொம்பவே சுலபமாக செய்து விடலாம். இதை செய்வதற்கு முதலில் ஒரு கப் இட்லி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இது நல்ல புளித்த இந்த மாவாக இருந்தால் கூட பரவாயில்லை தாராளமாக இந்த ரெசிபியை செய்யலாம்.

- Advertisement -

செய்முறை

இந்த ரெசிபி செய்வதற்கு அடுப்பை பற்ற வைத்து ஒரு அகலமான பேனை வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். அதில் ஒரு கப் இட்லி மாவு சேர்த்து தண்ணீருடன் நன்றாக கலந்த பிறகு கால் கப் அரிசி மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு அரிசி மாவிற்கு பதிலாக மைதா மாவை சேர்த்துக் கொள்ளலாம்.

இவை இரண்டையும் அடுப்பில் வைத்து ஒரு நிமிடம் கிளறினாலே போதும், மாவுகொஞ்சம் ஈரப்பதமாக இருக்கும் போதே இறக்கி விடுங்கள். அப்போது தான் குணுக்கு உள்ளே சாப்டாகவும், மேலே கிறிஸ்ப்பியாகவும் இருக்கும். இதை மொத்தமாக தண்ணீர் வற்றும் வரை விடக் கூடாது.

- Advertisement -

அதே போல் அடுப்பில் இருந்து இறக்கிய உடனே வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு மீடியம் சைஸ் வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை, கொத்தமல்லி இவைகளை பொடியாக நறுக்கி இதில் சேர்த்து கால் டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். இந்த மாவை பிசையும் போதும் கைகளில் ஒட்டும் லேசாக எண்ணெய் அல்லது தண்ணீர் தொட்டு பிசைந்து கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் பேனை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன், அடுப்பை மிதமான தீக்கு மாற்றிய பிறகு கலந்து வைத்த மாவில் இருந்து சின்ன சின்ன உருண்டைகளாக பக்கோடா போடுவது போல் உருட்டி எடுத்து போட்டு பொன்னிறமாக சிவந்தவுடன் எடுத்து விடுங்கள். இதை போடும் போது மிகவும் சின்ன சின்ன உருண்டைகளாக மட்டும் போட்டால் போதும் பெரிதாக போடத் தேவையில்லை. இப்படி சின்னதாக போடும் போது ரெண்டு நிமிடத்தில் இது நன்றாக சிவந்து வந்து விடும்.

இதையும் படிக்கலாமே: பாசிப்பருப்பில் இப்படி பாயசம் வைத்தால் அமிர்தம் போல இருக்கும். இனிப்பு பிரியர்கள் இந்த ரெசிபியை மிஸ் பண்ணாதீங்க.

இந்த ஸ்நாக்ஸ் செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது. ஒரு கப் மாவு மட்டும் இருந்தால் போதும். வெங்காயம் பச்சை மிளகாய் எல்லாம் தயாராக அரிந்து வைத்துக் கொண்டால் மாவை தயார் செய்து ஸ்கூல் முடிந்து வரும் குழந்தைகளுக்கு உடனே செய்து கொடுத்து விடலாம்.

- Advertisement -