- Advertisement -

பண பிரச்சனையை தீர்க்கும் பங்குனி பஞ்சமி வழிபாடு

- Advertisement -

வசந்தமான வாழ்க்கையை தரக்கூடிய தெய்வங்களுள் ஒருவராக திகழ்பவர் தான் வாராகி அம்மன். வாராகி அம்மனை வழிபாடு செய்வதற்கு பஞ்சமி திதி என்பது மிகவும் உகந்ததாகவே கருதப்படுகிறது. நம்முடைய வாழ்க்கை மிகவும் சிறப்பு மிகுந்ததாக இருக்க வேண்டும் என்றாலும் மேலும் மேலும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாக வேண்டும் என்று நினைத்தாலும் வளர்பிறை பஞ்சமியில் வாராகி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். அப்படிப்பட்ட வளர்பிறை பஞ்சமி நாளன்று எந்த முறையில் வழிபட்டால் பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

பங்குனி பஞ்சமி வழிபாடு

உக்கிர தெய்வமாகவும் அதேசமயம் விஷ்ணு பகவானின் அவதாரமான வராக மூர்த்தியின் அம்சம் பொருந்தியவர் தெய்வமாகவும் திகழக்கூடியவர் தான் வாராகி அம்மன். சப்த கன்னிகளில் ஒருவராக திகழக்கூடிய இவரை முழுமனதோடு நாம் சரணாகதி அடைந்து வழிபாடு செய்தோம் என்றால் நம் வாழ்வில் எதிரிகளின் தொல்லை என்பதே இருக்காது. எதிரிகள் மட்டுமல்ல நம் வாழ்க்கையில் எதுவெல்லாம் பிரச்சனையாக இருக்கிறதோ நம்மை முன்னேற விடாமல் எதுவெல்லாம் தடுக்கிறதோ அவை அனைத்தும் காணாமல் போய்விடும் என்றே கூறப்படுகிறது.

- Advertisement -

பங்குனி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பஞ்சமி என்பது ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி காலை 7:45க்கு தொடங்கி மறுநாள் அதாவது ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி விடியற்காலை 4 மணிக்கு நிறைவடைகிறது. அதனால் பஞ்சமி வழிபாட்டை செய்பவர்கள் ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி இந்த வழிபாட்டை செய்து விட வேண்டும். இந்த வழிபாட்டை செய்வதற்கு உகந்த நேரமாக திகழ்வது மதியம் 1 மணியிலிருந்து 2 மணி அல்லது மாலை நேரத்தில் ஆறு மணிக்கு மேல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த வழிபாட்டை நாம் செய்யலாம்.

வீட்டில் வாராகி அம்மனின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். வாராகி அம்மனுக்கு தேங்காய் தீபம் ஏற்றுவதாக இருந்தால் ஏற்றலாம் அல்லது ஐந்து முக தீபம் ஏற்றுவதாக இருந்தால் ஏற்றலாம் அல்லது ஐந்து அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுவதாக இருந்தாலும் ஏற்றலாம். இவை மூன்றில் எது தங்களுடைய வசதிக்கு பொருந்துமோ அதை செய்து கொள்ளுங்கள். அதேபோல் வாராகி அம்மனுக்கு நெய்வேத்தியமும் தங்களால் இயன்ற மாதுளம் பழம், கிழங்கு வகைகள், பானகம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை வைக்கலாம்.

- Advertisement -

பிறகு வாராகி அம்மனுக்கு முன்பாக ஒரு சிறிய தட்டை வைத்துக் கொள்ளுங்கள். அந்த தட்டிற்கு மேல் பச்சரிசியை பரப்பிக் கொள்ளுங்கள். அந்த பச்சரிசிக்கும் மேல் ஒரு குண்டு மஞ்சளை வைக்க வேண்டும். இந்த குண்டு மஞ்சளின் நடுவில் மோதிர விரலால் குங்குமத்தை எடுத்து பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த குண்டு மஞ்சளை பார்த்தவாறு “ஓம் வாராஹி தேவியே போற்றி” என்னும் மந்திரத்தை 111 முறை கூற வேண்டும். இவ்வாறு கூறி முடித்து பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

அன்றைய நாள் முழுவதும் இந்த குண்டு மஞ்சள் பூஜை அறையில் இருக்கட்டும். மறுநாள் இந்த குண்டு மஞ்சளை பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். வருகின்ற பௌர்ணமி வரை இந்த குண்டு மஞ்சள் அப்படியே பணம் வைக்கும் இடத்தில் இருக்கட்டும். பௌர்ணமி அன்று இந்த குண்டு மஞ்சளை எடுத்து ஓடுகின்ற நீரில் போட்டு விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய குடும்பம் தொடர்பான பிரச்சினையாக இருந்தாலும் பணம் தொடர்பான பிரச்சினையாக இருந்தாலும் தரித்திரமாக இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:வேண்டிய வரம் தரும் முருகன் மந்திரம்

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக திகழக்கூடிய வாராகி அம்மனை வளர்பிறை பஞ்சமி நாளன்று இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு குடும்பத்தில் இருக்க கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -