- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவேண்டிய வரம் தரும் முருகன் மந்திரம்

வேண்டிய வரம் தரும் முருகன் மந்திரம்

- Advertisement -

இன்று ஏப்ரல் மாதத்தில் முதல் நாள் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நாள் முருகப் பெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் நாம் முருகப்பெருமானை கண்டிப்பான முறையில் வழிபாடு செய்ய வேண்டும். ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதாக இருந்தாலும் சரி, வீட்டிலேயே வழிபாடு செய்வதாக இருந்தாலும் சரி, முருகப்பெருமான் வழிபாடு என்பது இன்றைய தினம் கண்டிப்பாக முறையில் நடைபெற வேண்டும். அப்படி முருகப் பெருமானை வழிபாடு செய்து விட்டோம் என்றால் முருகப்பெருமானின் அருளால் நம்முடைய வாழ்க்கையில் நல்ல திருப்புமுனை உண்டாகும். மேலும் நாம் வேண்டிய வரம் கிடைப்பதற்கு இன்று இரவுக்குள் எழுத வேண்டிய முருகனின் மந்திரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வேண்டிய வரம் தரும் மந்திரம்

முருகப்பெருமானுக்கு என்று பலவிதமான மந்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கும். ஒவ்வொரு மந்திரத்தையும் ஒவ்வொரு விதமாக நம் உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரங்களை சரியாக நாம் உச்சரித்து முருகப்பெருமானை வழிபாடு செய்தோம் என்றால் அந்த மந்திரத்திற்கு உரிய பலன் நமக்கு முழுமையாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த மந்திர உச்சாடலை நாம் கூறுவதற்கு பதிலாக எழுதும் பொழுது அதன் மூலம் பலன்கள் இன்னும் அதிகமாகவே கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த மந்திரங்கள் ஒன்றாக திகழக்கூடிய முருகப்பெருமானின் மந்திரத்தை இன்று இரவு 12 மணிக்குள் முருகப்பெருமானை நினைத்து ஆறு முறை மட்டும் எழுதினால் போதும். முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைப்பதோடு நாம் வேண்டிய வரத்தை முருகப்பெருமான் அருள்வார் என்று கூறப்படுகிறது. இன்று மதியம் 3:23 மணிக்குத்தான் கிருத்திகை நட்சத்திரம் என்பது தொடங்குகிறது. மேலும் இது நாளை மதியம் 1:51 வரை இருக்கிறது. அதனால் இன்று இரவு 12 மணிக்குள் இந்த ஒரு மந்திர வழிபாட்டை நாம் செய்ய வேண்டும்.

தங்களுக்கு எந்த நேரம் வசதியாக இருக்கிறதோ அந்த நேரத்தில் வீட்டு பூஜை அறையில் முருகப்பெருமானுக்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பேப்பரில் சிவப்பு நிற மையை பயன்படுத்தி இந்த மந்திரத்தை எழுத வேண்டும். சிவப்பு என்பது செவ்வாய் பகவானுக்குரிய நிறமாக கருதப்படுகிறது. அதனால் தான் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர்களை சாற்ற வேண்டும் என்று கூறுவார்கள். அதனால் இந்த மந்திரத்தை சிவப்பு நிற மையால் தான் எழுத வேண்டும்.

- Advertisement -

முழு மனதோடு எந்தவித தொந்தரவும், எந்தவித சலனமும் இல்லாமல் இந்த மந்திரத்தை முருகப்பெருமானை நினைத்துக் கொண்டு எழுத வேண்டும். இந்த மந்திரத்தை எழுதி முடித்த பிறகு அதை மடித்து முருகப்பெருமானின் படத்திற்கு கீழ் வைத்து விடுங்கள் அல்லது பின்புறத்தில் வைத்து விடுங்கள். உங்களுடைய வேண்டுதல் எப்பொழுது நிறைவேறுகிறதோ அப்பொழுது இந்த பேப்பரை கற்பூரத்தை பயன்படுத்தி எரித்து விட வேண்டும்.

மந்திரம்

“ஓம் ஐம் ரீம் வேல் காக்க”

இதையும் படிக்கலாமே:பங்குனி மாத வசந்த பஞ்சமி

எளிமையான இந்த ஒரு வரி மந்திரத்தை இன்று இரவுக்குள் ஆறு முறை மட்டும் முருகப்பெருமானை நினைத்து எழுதுபவர்களுக்கு முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக இருப்பதோடு அவர்கள் வேண்டிய வரமும் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்