- Advertisement -

எவ்வளவு பணம் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அவ்வளவு பணத்தையும் இந்த பிரபஞ்சம் உங்களுக்கு கொட்டிக் கொடுக்கும். வெள்ளை காகிதத்தில் இந்த நம்பரை, இப்படி எழுதி வைத்தால்.

- Advertisement -

இந்த உலகத்தில் எல்லோருக்கும் கை நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். கோடிகோடியாக பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. எல்லோராலும் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடிகிறதா? நிச்சயம் கிடையாது. ஆனால் கொஞ்சம் முயற்சி செய்தால் இந்த பிரபஞ்சம் நமக்கு, கேட்ட பணத்தை நிச்சயமாக கொட்டி கொடுக்கும். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. இன்று தெருக்கோடியில் இருப்பவர்கள் கூட, நாளை கோடிஸ்வரர் ஆக மாறலாம். அவர்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்க வேண்டும். அவ்வளவு தான். நமக்கான அதிர்ஷ்டக் காற்று நம் பக்கம் வீச செய்வது எப்படி, என்ற ஒரு சூட்சமத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த பிரபஞ்சத்தில் இருந்து பணத்தை ஈர்த்து கொடுக்கக்கூடிய அதிர்ஷ்டம் வாய்ந்த எண்கள் என்று சில உள்ளது. இந்த சுவாரசியமான எண்களை வெள்ளைத்தாளில் இப்படி எழுதி வைத்தால், நீங்கள் சம்பாதிக்க நினைக்கும் பணம் உங்கள் கைக்கு வந்து சேரும்.

- Advertisement -

நம்ப முடியவில்லையா? அதற்காக பரிகாரத்தை மட்டும் செய்துவிட்டு, வருமானம் வரவில்லை என்று சொல்லக்கூடாது. பரிகாரத்தை செய்து உங்களுடைய வேலைகளை, விடாமுயற்சியோடு செய்து வரும் பட்சத்தில், உங்களுக்கு அதிர்ஷ்டக் காற்று நிச்சயம் வீசும். உங்கள் கையிலிருந்து நீங்கள் எந்த காசையும் செலவு செய்யப் போவது கிடையாது. உங்களை யாரும் ஏமாற்ற போவதில்லை. இந்த பரிகாரத்தை நீங்க ட்ரை பண்ணி பாக்க போறீங்க. ஒர்க்கவுட் ஆச்சுன்னா அது உங்களுக்கு லக். ஒர்க்கவுட் ஆகவில்லை என்றால் நம் கையில் இருந்து ஒரு ரூபாய் கூட நஷ்டமாக போவது கிடையாது.

ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 808, 520, 741 இந்த மூன்று எண்களை எழுதி விடுங்கள். இந்த நம்பருக்கு கீழே உங்களுக்கு எவ்வளவு பணம் தேவையோ அதாவது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு குறிக்கோள் இருக்கும் அல்லவா. மாதம் குறிப்பிட்ட இவ்வளவு தொகை வருமானத்தை சம்பாதிக்கவேண்டும். ஒரு வருடத்திற்குள் இவ்வளவு பணம் சேமிக்க வேண்டும் என்ற லட்சியம் இருக்கும் அல்லவா. அதை எழுதிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

எடுத்துக்காட்டுக்கு ‘1 வருடத்திற்குள் 2,00,000 ரூபாய் சேமிக்க வேண்டும்’. என்று எழுதி இந்த பேப்பரை அப்படியே மடித்து ஏதாவது ஒரு புத்தகத்தில் நடுவில் வைத்து விடுங்கள். நீங்கள் இந்த நம்பரை எழுதக்கூடிய பேனா கட்டாயம் பச்சை நிறப் பேனா வாகத்தான் இருக்க வேண்டும்.

இதோடு சேர்த்து தினமும் காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, ஒரு பச்சைநிற பேனாவை எடுத்து இந்த மூன்று எண்களையும் உங்கள் உடம்பில் இடது பக்கத்தில் ஏதாவது ஒரு இடத்தில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். கையில் கடிகாரம் கட்டும் இடத்தில் எழுதி வைத்துக் கொண்டாலும் சரி தான். ஆனால் இடது கையில் எழுத வேண்டும். இடது கையில் எழுதிவிட்டு அதன் மேலேயே யாருக்கும் தெரியாமல் கடிகாரம் கட்டிக் கொண்டாலும் பரவாயில்லை.

இப்படி இந்த எண்ணுக்கும் உங்களுக்கும் உண்டான நெருக்கம் அதிகரிக்க, இந்த பிரபஞ்சத்தில் இருந்து தானாக ஏதாவது ஒரு ரூபத்தில் பணம் உங்களை நோக்கி வரத் தொடங்கும். பணம் சம்பாதிப்பதற்கு தேவையான வழியையும் இந்த பிரபஞ்சம் உங்களுக்கு காட்டிக் கொடுக்கும். பரிகாரத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து இதை முயற்சி செய்து பாருங்கள். இழப்பதற்கு எதுவுமே கிடையாது. ஆனால் நம்பி செய்யும் பட்சத்தில் உங்கள் பக்கம் அதிர்ஷ்டக் காற்று வீசினால் வாழ்க்கையில் எங்கோ சென்று விடலாம். நல்லது நினைப்பவர்களுக்கு நல்லது மட்டும்தான் நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவு நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -