
ஐப்பசி மாத வளர்பிறை பஞ்சமி என்பது நவம்பர் மாதம் ஆறாம் தேதி புதன்கிழமை வருகிறது. அன்றைய தினத்தில் பலரும் வாராகி அம்மனை வழிபாடு செய்வார்கள். ஒரு சிலருக்கு தங்களுடைய குடும்ப ரீதியாக பிரச்சனைகளாலோ அல்லது உடல் ரீதியான பிரச்சினைகளாலோ அந்த வழிபாட்டை செய்ய இயலாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கும். அப்படிப்பட்டவர்கள் மனவருத்தத்துடன் என்ன செய்வது தடைப்பட்டு விட்டது. என்று வருத்தப்பட்டு கொண்டு இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த பொருளை தானமாக தருவதன் மூலம் பஞ்சமி வழிபாட்டை செய்த பலனை பெற முடியும். அந்த பொருளை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சப்த கன்னிகளில் ஐந்தாவதாக திகழக்கூடிய வாராகி அம்மனுக்கு பஞ்சமி திதி என்பது உகந்த திதி. அன்றைய தினம் பலரும் வாராகி அம்மனை பலவிதங்களில் வழிபாடு செய்வார்கள். ஒரு சிலர் தங்களுடைய இல்லங்களிலேயே வாராகி அம்மனின் படத்திற்கு முன்பாகவோ சிலைக்கு முன்பாகவோ அவர்களுக்கு பிடித்தமான பொருட்களை வைத்து தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலர் அருகில் இருக்கக்கூடிய வாராகி அம்மனின் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வார்கள். எப்படி வழிபாடு செய்தாலும் முழுமனதோடு வாராகி அம்மனை வழிபாடு செய்யும்பொழுது அந்த அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். வேண்டுதலும் நிறைவேறும்.
ஒரு சிலர் இந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு இத்தனை பஞ்சமி திதிகள் வழிபாடு செய்கிறேன் என்று சங்கல்பம் செய்திருப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பவர்களும் தொடர்ச்சியாக ஒவ்வொரு பஞ்சமிக்கும் வாராகி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கும் ஏதாவது ஒரு சூழ்நிலையின் காரணமாக வழிபாடு செய்ய இயலாத நிலை என்பது ஏற்பட்டிருக்கும். உதாரணமாக பெண்களாக இருக்கும் பட்சத்தில் மாதவிடாய் பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம், உடல் ஆரோக்கியத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம், பிறப்பு தீட்டு, இறப்பு தீட்டு என்று ஏதாவது தீட்டால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் அல்லது வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கலாம்.
இப்படி பலவிதமான இடையூறுகள் என்பது நாம் ஒவ்வொருவருக்கும் ஏற்படும். அப்படிப்பட்ட இடையூறுகளையும் தாண்டி நாம் செய்யக்கூடிய வழிபாட்டிற்கு அதிக பலன் கிடைக்கும் என்று கூறலாம். அந்த வகையில் பஞ்சமி திதியில் வழிபாடு செய்யும்பொழுது இந்த மாதிரி இடையூறுகள் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு விதமான பொருட்களை தானமாக தருவதன் மூலம் வாராஹி அம்மனின் அருளையும், பஞ்சமி வழிபாட்டின் பலனையும் பெற முடியும். அதை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
மேஷ ராசிக்காரர்கள் பச்சரிசியையும், ரிஷப ராசிக்காரர்கள் துவரம் பருப்பையும், மிதுன ராசிக்காரர்கள் பச்சைப் பயிரையும், கடக ராசிக்காரர்கள் எள்ளையும், சிம்ம ராசிக்காரர்கள் கொள்ளையும், கன்னி ராசிக்காரர்கள் பசும்பாலையும், துலாம் ராசிக்காரர்கள் உளுந்தையும், விருச்சிக ராசிக்காரர்கள் கோதுமையையும், தனுசு ராசிக்காரர்கள் கொண்டைக்கடலையையும், மகர ராசிக்காரர்கள் பனைவெல்லத்தையும், கும்ப ராசிக்காரர்கள் பழங்களையும், மீன ராசிக்காரர்கள் மொச்சை பயிரையும் தானமாக தர வேண்டும்.
பஞ்சமி திதி அன்று ஒவ்வொரு ராசிக்காரர்களும் அவர்களுக்குரிய பொருட்களை தங்களால் இயன்ற அளவு வாங்கிக்கொண்டு அதை அருகில் இருக்கக்கூடிய பசு மாட்டிற்கும் தானமாக தரலாம் அல்லது ஆதரவற்றவர்களுக்கும் தானமாக தரலாம். இப்படி தருவதன் மூலம் வாராஹி அம்மனின் அருளையும் நம்மால் பெற முடியும். அதே சமயம் பஞ்சமி வழிபாட்டிற்குரிய பலனையும் பெற முடியும். மேலும் தானம் செய்வதன் மூலம் நம்முடைய கர்ம வினைகளும் குறைய ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே:குலதெய்வ அருள் கிடைக்க பஞ்சமி வழிபாடு
இந்த பொருட்களை பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனை வழிபாடு செய்ய இயலாதவர்கள் முழு மனதுடன் தானம் செய்வதன் மூலம் வாராகி அம்மனின் அருளை பரிபூரணமாக பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.