- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுலதெய்வ அருள் கிடைக்க பஞ்சமி வழிபாடு

குலதெய்வ அருள் கிடைக்க பஞ்சமி வழிபாடு

- Advertisement -

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான திதி வரும். அந்த திதிக்குரிய தெய்வத்தை நாம் வழிபடும் பொழுது அந்த தெய்வத்தின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். அந்த வகையில் நவம்பர் மாதம் ஆறாம் தேதி பஞ்சமி திதி வருகிறது. பஞ்சமி என்றதுமே நம் நினைவிற்கு வரக்கூடிய தெய்வமாக திகழ்பவள் வாராகி அம்மன் தான். ஆனால் அன்றைய தினத்தில் நாம் குலதெய்வத்தை வழிபாடு செய்தோம் என்றால் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பஞ்சமி வழிபாடு

பொதுவாகவே எந்த ஒரு வழிபாட்டை நாம் செய்வதாக இருந்தாலும் அந்த வழிபாட்டை செய்வதற்கு முன்பாக விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அடுத்ததாக நம்முடைய குலதெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும். பிறகுதான் நாம் எந்த தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அந்த தெய்வத்தின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் நவம்பர் மாதம் ஆறாம் தேதி பஞ்சமி திதி வருகிறது. பலரும் பஞ்சமி திதி அன்று வாராஹி அம்மனை வழிபாடு செய்வார்கள். அவ்வாறு வாராகி அம்மனை வழிபாடு செய்வதற்கு முன்பாக குலதெய்வ வழிபாட்டை செய்தோம் என்றால் குலதெய்வத்தின் அருளும் கிடைக்கும் அதே சமயம் வாராகி அம்மனின் அருளும் கிடைக்கும். அதைப்பற்றி பார்ப்போமா?

- Advertisement -

ஒருவருடைய வீட்டில் குலதெய்வம் வாசம் செய்யக்கூடிய இடமாக திகழ்வது அவர்களுடைய வீட்டு நிலை வாசல் தான். என்னதான் பூஜையறையில் குலதெய்வத்தின் படத்தை பெரியதாக மாட்டி வைத்து அலங்காரம் செய்து வழிபாடுகளை மேற்கொண்டாலும் அவர்களுடைய நிலை வாசல் எந்த அளவிற்கு சுத்தமாகவும் பவித்திரமாகவும் மங்களகரமாகவும் இருக்கிறதோ அந்த அளவிற்கு தான் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் பஞ்சமி திதி அன்று நாம் குலதெய்வத்தை வழிபாடு செய்வதற்கு நிலைவாசல் பூஜையை செய்ய வேண்டும்.

இதற்கு முதலில் நிலை வாசலை சுத்தம் செய்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு சொம்பு அல்லது கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். அது நிறைய சுத்தமான தண்ணீரை பிடித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் நல்ல எலுமிச்சம் பழமாக பார்த்து ஒரு எலுமிச்சம் பழத்தை போட வேண்டும். அதனுடன் ஒரு ரூபாய் நாணயம், சிறிது மஞ்சள் தூள், வெட்டிவேர், இரண்டு ஏலக்காய், இரண்டு கிராம்பு, ஒரு சிட்டிகை கல் உப்பு, வேப்பிலை அல்லது துளசி இலை அல்லது வாசனை நிறைந்த மலர்கள் இவற்றை போட்டு நிரம்ப நிரம்ப நிலை வாசலுக்கு வெளியே வைத்து விட வேண்டும்.

- Advertisement -

இப்படி செய்த பிறகு நாம் பஞ்சமி வழிபாட்டை எப்பொழுதும் போல் செய்ய வேண்டும். பஞ்சமி வழிபாடு செய்யாதவர்கள் கூட வீட்டில் தீபம் ஏற்றி வைத்து சாதாரணமாக வழிபாடு செய்து கொள்ளலாம். வழிபாடு செய்து முடித்த பிறகு இதில் இருக்கக்கூடிய தண்ணீரை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். அதற்குள் போடப்பட்ட பொருட்கள் அனைத்தையும் எடுத்து கால்படாத இடத்தில் போட்டுவிட்டு ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இந்த முறையில் நாம் செய்யக்கூடிய இந்த வழிபாடு குலதெய்வத்தை நம் வீட்டிற்குள் அழைப்பதோடு குலதெய்வ அருளையும் பரிபூரணமாக கிடைக்கச் செய்யும். குலதெய்வத்தின் அருள் கிடைத்துவிட்டாலே நமக்கு நடக்கக்கூடிய அனைத்து வித காரியங்களும் நல்லவிதமாக நடைபெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை அல்லவா…

இதையும் படிக்கலாமே:ஆரோக்கியம் பாதிக்கும் தூங்கும் முறைகள்
இந்த எளிமையான குலதெய்வ வழிபாட்டை பஞ்சமி திதியில் முழு மனதுடன் செய்பவர்களுக்கு குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் அதன் மூலம் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்

சற்று முன்