- Advertisement -
சமையல் குறிப்புகள்

மதிய உணவு ருசித்திட மிகவும் எளிமையான முறையில் இந்த பரங்கிக்காய் கூட்டி அவித்தல் குழம்பை ஒரு முறை செய்து தான் பாருங்கள்

- Advertisement -

சமையல் எளிமையாகவும் அதே சமயம் சுவையாக இருக்கவேண்டும், ஒரு சில நேரங்களில் அற்புதமாக அசத்த வேண்டுமா? அப்போ உடனே இதை செய்து பாருங்கள் வேலை செய்வது தெரியாமல் நிமிடத்திலேயே செய்துவிடலாம் என்ற பரங்கிக்காய் கூட்டி அவித்தலை. இதன் பெயரே சொல்லிவிடும் இதன் செய்முறை விளக்கத்தை. ஆம் எல்லாவற்றையும் ஒன்றாகக் கூட்டி அவிக்க வேண்டும், அவ்வளவுதான் சுவையான பரங்கிக்காய் குழம்பு தயாராகிவிடும். இது செட்டிநாட்டின் அனைத்து விதமான விருந்துகளிலும் பரிமாறப்படும் போது உணவு வகையாகும் அதிலும் கோவில் வைபவ நிகழ்ச்சிகளில் இந்த பரங்கிக்காய் கூட்டி அவித்தல் இல்லாமல் இருக்காது. அனைவரும் விருப்பமாக சாப்பிடும் சைவ கறி என்றால் இந்தக் குழம்பு தான். வாருங்கள் இந்த உணவை எப்படி சமைக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பரங்கிக்காய் – 250 கிராம், சின்னவெங்காயம் – 15, பூண்டு – 3 பல், தக்காளி – 1, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், வெந்தயம் – கால் ஸ்பூன் வெல்லம் – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் பரங்கிக்காயை தோல் சீவாமல் சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் பூண்டு மற்றும் வெங்காயத்தை தோலுரித்து, சுத்தம் செய்துகொள்ள வேண்டும். அதன் பிறகு தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் 20 நிமிடத்திற்கு ஊறவைத்து, அதன் பின்னர் அதனை கரைத்து, புளி தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த புளித் தண்ணீருடன் ஒரு ஸ்பூன் உப்பு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 2 ஸ்பூன் மிளகாய்தூள் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு குக்கர் அல்லது ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் முதலில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். பிறகு அதனுடன் அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் சோம்பு மற்றும் கால் ஸ்பூன் வெந்தயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள பரங்கிக்காய் மற்றும் தக்காளி துண்டுகளை சேர்க்க வேண்டும். அதன்பிறகு தோலுரித்து வைத்துள்ள சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்துக் கொள்ளவேண்டும். இவற்றுடன் ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவி சேர்க்க வேண்டும்.

பின்னர் கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி சேர்த்து, இவற்றுடன் ஒரு கோப்பை தண்ணீர் சேர்த்துக் கொண்டு, அனைத்தையும் நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து கலந்துவிட்டு, அடுப்பின் மீது வைத்து குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பாத்திரம் என்றால் குழம்பு சுண்டி வரும் வரை வேக விடவேண்டும். பின்னர் இறுதியாக ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அனைத்து விட வேண்டும்

- Advertisement -