- Advertisement -

திங்கள் கிழமை பிள்ளையார் பரிகாரம்

- Advertisement -

எவ்வளவு பெரிய கொமையான தலையெழுத்து உங்கள் விதியில் எழுதப்பட்டு இருந்தாலும் சரி, அதை மாற்றக்கூடிய எளிமையான பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். வாழ்க்கையில் நல்ல வேலை கிடைக்கவில்லை, கைக்கு வருமானம் வரவில்லை, நல்ல கணவன் இல்லை, நல்ல மனைவி இல்லை, கஷ்டம் கஷ்டம் கஷ்டத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் மிகக் குறைந்த செலவில் முழு நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயம் உங்கள் கஷ்டங்கள் தீர்ந்துவிடும். அது என்ன பரிகாரம் ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

திங்கள் கிழமை பிள்ளையார் வழிபாடு

புராண கோவில்கள், பரிகார ஸ்தலங்களில் சென்று சாமியை பார்த்தால் நல்லது. எங்கே சென்று சாமி கும்பிட்டால் நல்லது என்று தேடித்தேடி நிறைய செலவு செய்து, தெய்வங்களை வழிபாடு செய்வோம். அதெல்லாம் தேவையே இல்லை. உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் அரச மரத்தடி விநாயகரை பற்றி கொள்ளுங்கள். உங்கள் கஷ்டங்கள் தீரும்.

- Advertisement -

வாரம் தோறும் வரக்கூடிய திங்கட்கிழமை அன்று காலை சூரியன் உதயமாகும் போது, 6 மணிக்கு, 2 வெற்றிலை, 2 பாக்கு, 2 பழம், கொண்டு போய் அந்த பிள்ளையார் பாதத்தில் வைத்து விடுங்கள். இரண்டே இரண்டு செம்பருத்தி பூவை பிள்ளையாருக்கு வையுங்கள். முடிந்தால் இரண்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, உங்கள் கஷ்டங்களை பிள்ளையாரின் காதில் போடுங்கள்.

பிறகு 3 தோப்பு கரணம் போடுங்கள். பிள்ளையார் கொட்டு வையுங்கள். அந்த பிள்ளையாரது அரச மரத்தை எத்தனை முறை வலம் வர முடியுமோ அத்தனை முறை வலம் வாருங்கள். உதாரணத்திற்கு ஐந்து முறை வலம் வந்தால் உங்கள் கஷ்டங்கள் ஐந்து வாரத்தில் தீரும். ஐந்து வாரம் திங்கட்கிழமைக்குள் தீரும்.

- Advertisement -

11 முறை வலம் வந்தால் உங்கள் கஷ்டங்கள் இரண்டு அல்லது மூன்று வாரத்திற்குள் தீரும். எந்த அளவுக்கு உங்களுடைய கால்களை வருத்திக்கொண்டு, உங்களை நீங்களே வருத்திக்கொண்டு அரசமரத்தை சுற்றி வருகிறீர்களோ அவ்வளவு சீக்கிரத்தில் உங்களுடைய வேண்டுதல் பலிக்கும். 108 முறை உங்களால் சுற்ற முடியும் என்றால் சுற்றுங்கள்.

இதையும் படிக்கலாமே: நினைத்த காரியம் தடையின்றி நடக்க தேங்காய் பரிகாரம்

பெரிய வேண்டுதலாக இருந்தாலும் அது உடனே நிறைவேறும். இந்த வழிபாட்டிற்கு பின்னால் இருக்கும் மகிமையை பதிவை படித்தோ அல்லது வேறு யாராவது சொல்லியோ நிச்சயம் உங்களால் புரிந்து கொள்ள முடியாது. பரிகாரத்தை செய்து பாருங்கள். பிறகு உங்கள் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களை நீங்களே நம்ப மாட்டீங்க. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டினை பின்பற்றி பலன் பெறுங்கள்.

- Advertisement -