- Advertisement -
சமையல் குறிப்புகள்

இறால் செய்வது எப்படி என்று பார்ப்போம்

இறால் வறுவல் சாதத்துடன் சாப்பிட்டால் சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். அந்த அளவிற்கு இறால் வறுவல் சுவையாக இருக்கும். இந்த பதிவில் இறால் வறுவல் எப்படி சமைப்பது என்று பார்ப்போம் வாருங்கள்.

இறால் செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

இறால் – 1/2 கிலோ
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
வெங்காயம் – 1

இறால் செய்முறை:

இறால் நன்றாக கழுவி ஒரு கின்னத்தில் போட்டு அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா , மல்லித்தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடங்கள்வரை ஊற வைக்கவும்.

- Advertisement -

பிறகு ஒரு கடாயில் என்னை ஊற்றி அதில் பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். நன்றாக வெந்ததும் அத்தானும் நாம் ஊற வாய்த்த இறாலை கொட்டி 20 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும்.

பிறகு வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான இறால் தயார்.

- Advertisement -

சமைக்க ஆகும் நேரம் – 45 நிமிடங்கள்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 3

இதையும் படிக்கலாமே:
சுவையான அதிரஸம் தயாரிக்கும் முறை

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Prawn recipe in Tamil. It is also called as Prawn seimurai or Prawn seivathu eppadi in Tamil or Prawn preparation in Tamil.

- Advertisement -