சுவையான அதிரசம் தயாரிக்கும் முறை

athirasam
- Advertisement -

தீபாவளி பொங்கல் போன்ற பல தினங்களில் வீட்டில் செய்யப்படும் ஒரு இனிப்பு வகைதான் இந்த அதிரசம். இப்போது உள்ள நம் நடைமுறை வாழ்க்கையில் நாம் இதனை கடைகளில் வாங்கி உண்டு வருகிறோம். ஆனால் இந்த அதிரசத்தினை நமது வீட்டிலேயே மிகவும் எளிமையாகவும் மற்றும் சுவையாகவும் செய்யலாம். அதிரசம் எப்படி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காணலாம் வாருங்கள்.

athirasam_1

அதிரசம் செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

பச்சரிசி – 1கப்
வெள்ளம் – 3/4கப்
ஏலக்காய் – 2
நல்லெண்ணெய் – சிறிதளவு
[கப்பின் அளவு சரியாக இருக்கவேண்டும்]

அதிரசம் செய்முறை :

முதலில் ஒரு கப் பச்சரிசியை பாத்திரத்தில் 2 அல்லது 3 மணி நேரம் நன்றாக ஊற வையுங்கள். மூன்று மணி நேரத்துக்கு பிறகு, அந்த அரிசியினை 10 நிமிடம் அளவுக்கு காயவையுங்கள். அரிசியின் ஈரப்பதம் மொத்தமாக காயாமல் சற்று ஈரப்பதமாக இருக்கவேண்டும். இப்போது இந்த அரிசியினை மிக்சியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

athirasam_2

பிறகு, 3/4கப் வெள்ளத்தினை எடுத்து வாணலில் போட்டு அதனுடன் 1/4கப் அளவு தண்ணீர் ஊற்றி வெல்லப்பாகினை தயார் செய்து கொள்ளுங்கள். இப்போது அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவில் 2 ஏலக்காய் நசுக்கி அதனுடன் சேர்த்து கொள்ளுங்கள்.

வெல்லப்பாகு சூடு ஆறுவதற்கு முன் நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பச்சரிசிமாவில் ஊற்றி நன்றாக கலக்குங்கள். அது சற்று கெட்டியாக இல்லாமல் தான் இருக்கும். ஆனால், அதன்மீது சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி 2 அல்லது 3 நாட்கள் அப்படியே ஒரு கின்னத்தில் மூடி வைக்கவும்.

- Advertisement -

athirasam_3

மூன்று நாட்களுக்கு பிறகு அதிரசமாவு சரியான பதத்தில் தயாராக இருக்கும். பிறகு வாணலில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து அதிரசமாவினை வட்டமாக தட்டி அந்த எண்ணெய்யில் போட்டு எடுத்தால் அதிரசம் தயார். தீ அதிகம் இருந்தால் அதிரசம் மேல் பகுதி மட்டும் வெந்து இருக்கும் எனவே மிதமான தீயில் சிறிது நேரம் வேகவிட்டு அதிரசத்தினை எடுத்தால் சுவையாக இருக்கும்.

athirasam_4

இந்த அளவிற்கான மொத்த அதிரசத்தின் எண்ணிக்கை – 15
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 5

இதையும் படிக்கலாமே :
மூங் டால் ஸ்னாக்ஸ் செய்யும் முறை

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Here we have Athirasam recipe in Tamil. It is also called as Athirasam seimurai or Athirasam seivathu eppadi in Tamil or Athirasam preparation in Tamil.

- Advertisement -