- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

சிவன் அருள் பெற பிரதோஷ நாளில் செய்ய வேண்டியது

சிவனுக்குரிய வழிபாட்டு தினங்களில் மிக மிக முக்கியமான தினமெனில் அது பிரதோஷம் தான். இந்த பிரதோஷமானது மாதத்தில் இரண்டு முறை வரும். அது தேய்பிறை பிரதோஷம் மற்றும் வளர்பிறை பிரதோஷம். இது மட்டும் இன்றி அந்தந்த நாளில் வரக்கூடிய பிரதோஷத்திற்கு என தனி சிறப்புகள் உண்டு. அதிலும் குறிப்பாக சனிக்கிழமையில் வரக் கூடிய சனி பிரதோஷம் மிக மிக விசேஷமானது.

இந்த பிரதோஷ நாளில் சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்பவர்கள் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் அனைத்தும் நீங்கி நிம்மதியான வாழ்க்கையை வாழ்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஏனெனில் கர்மாக்களை அழிப்பதில் சிவனைப் போல் ஒருவர் இல்லை என்பது அனைவரும் அறிந்தே.

- Advertisement -

அதுமட்டுமின்றி சிவனை அடிபணிந்தோர் வாழ்க்கையில் இனி எவருக்கும் அடிப்பணிய வேண்டிய அவசியமே இல்லை. அப்படியான சிவபெருமானை வழிபடக் கூடிய பிரதோஷ தினத்தில் அவர் அருளைப் பெற நாம் செய்ய வேண்டிய எளிய வழிமுறைகளை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

சிவன் அருளை பெற பிரதோஷ வழிபாடு

பொதுவாக பிரதோஷ தினத்தில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுவது மிகவும் சிறந்தது. இந்த விரதமானது அவரவர் உடல் நிலைக்கு ஏற்றவாறு இருந்து கொள்ளலாம். விரதம் இருக்க முடியாதவர்கள் எளிமையான உணவை உட்கொண்டு இருக்கலாம். ஆனால் அன்றைய தினத்தில் விடியற்காலையில் எழுந்து பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு சிவபுராணம் படிப்பது கேட்பது போன்றவற்றை செய்வது நல்லது.

- Advertisement -

அதுமட்டுமின்றி அன்றைய நாள் முழுவதும் சிவனை மனதிலும் சிந்தையிலும் நினைத்து நாம் வழிபட வேண்டும். அதுமட்டுமின்றி அன்றைய தினத்தில் ஓம் நமசிவாய என்னும் இந்த மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும். அன்றைய தினம் பிரதோஷ வேளையில் ஆலயம் சென்று சிவ தரிசனம் பார்ப்பது கோடி புண்ணியத்தை தரும்.

ஆலயம் செல்ல முடியாதவர்கள் கூட வீட்டில் சிவபெருமானின் திருவுறப்படுவோமோ லிங்கம் போன்ற ஏதாவது வைத்து வழிபாடு செய்யலாம். இவையெல்லாம் பொதுவாக நாம் பிரதோஷ தினத்தில் சிவபெருமானை நினைத்து செய்யக் கூடிய வழிபாடுகள் இதில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு வழிபாடுகளும் வழிபடும் முறைகளும் மாறும்.

- Advertisement -

எப்படி இருப்பினும் அவை அனைத்துமே சிவன் அருளை பெறுவதற்காகவே என்பதில் துளியும் சந்தேகம் கிடையாது. ஆனால் நாம் செய்யும் ஒரு காரியம் சிவபெருமானை தேடி நாம் செல்லாமல் அவரே நம்மை தேடி வருவார் என்று சொல்லப்படுகிறது அது என்னவென்று பார்க்கலாம். இந்த பிரதோஷ நாளில் பசுவிற்கு நாம் உணவு அளிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

சிவபெருமானின் வாகனமாக கருதப்படுவது மட்டுமின்றி பசுவில் முப்பது முக்கோடி தேவர்களும் வாசம் செய்கிறார்கள். பிரதோஷ தினத்தில் பசுவிற்கு ஏதேனும் நாம் உணவு தருவது நம்முடைய பல ஜென்ம கர்மாக்களை கழிப்பதுடன் பல வருட வழிபட்ட பலனை தரும். இத்துடன் அன்றைய நாளில் வயதில் முடியாதவர்கள் இல்லாதவர் போன்றவருக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

சிவன் அருளை பெறுவதற்கு இது போன்றதொரு வேறு சிறந்த வழியே இல்லை என்று சொல்லப்படுகிறது. ஒருவர் அந்த நாளில் செய்யப்படும் அன்னதானமானது நம்முடைய வாழ்க்கை முழுமைக்கும் சிவனை நினைத்து வழிபட்ட பலனை தரும் என்பதோடு சிவனே நம்மை தேடி வருவார் என்று சொல்லப்படுகிறது.

இந்த இரண்டு விஷயங்களையும் பிரதோஷ நாளில் வழிபாடு செய்ய முடியாதவர்கள், ஆலயம் செல்ல முடியாதவர்கள் பெண்கள் மாதவிலக்கான சமயங்கள் அல்லது வீட்டில் வேறு ஏதேனும் தீட்டு போன்றவை இருந்தாலும் அன்றைய தினத்தில் இந்த தானத்தை தவறாமல் செய்யலாம் நிச்சயம் பிரதோஷ வழிபாடு செய்த பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: சனி தோஷம் விலக பரிகாரம்

பிரதோஷ நாளில் நாம் செய்யக் கூடிய இந்த ஒரு எளிமையான தானம் நம்முடைய வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் ஏற்படுத்தும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இந்த தகவலில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் பிரதோஷ நாளில் நீங்களும் இதுபோல செய்து பலன் அடையலாம்.

- Advertisement -