- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

சஷ்டி விரதம் கடைபிடிக்கும் முறை மற்றும் பலன்கள்

“வினை தீர்ப்பான் வேலவன்” என்பது வெறும் வாரத்தை அல்ல. அவரின் அருளால் வினை நீங்கப் பெற்ற அவரது அடியார்களின் அனுபவபூர்வ வாக்காகும். அப்படிப்பட்ட முருகனுக்குரிய ஒரு சிறப்பான தினம் “சஷ்டி தினம்”. கார்த்திகை மாதத்தில் வரும் “கந்த சஷ்டி” விசேஷமானது என்றாலும், வருடத்தில் ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டி தினமும் சிறப்பானது தான். அப்படிப்பட்ட சஷ்டி தினத்தில் முருகப்பெருமானின் அருளைப் பெற “சஷ்டி விரதம்” அனஷ்டிக்கும் முறையயையும், அதன் பலன்களைப் பற்றியும் இங்கு தெரிந்து கொள்வோம்.

விரதம் மேற்கொள்ளும் முறை:

- Advertisement -

இந்த சஷ்டி தினத்தன்று அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு வீடு முழுவதுமோ அல்லது வீட்டின் பூஜை அறையை மட்டுமோ சுத்தம் செய்ய வேண்டும். பின்பு பூஜையறையில் முருகன் படத்திற்கு முன்பு தீபமேற்றி, தூபங்கள் காட்டி, பால்,பழம் நிவேதனம் வைக்க வேண்டும்.

காலையிலிருந்து உணவேதும் அருந்தாமல் அப்பூஜையறையில் அமர்ந்து “கந்த சஷ்டி கவசத்தையோ’ வேறு ஏதேனும் முருகனின் மந்திரங்களையோ நாள் முழுவதுமோ அல்லது உங்களால் முடிந்த வரை ஜெபிக்க வேண்டும். வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள், ஓம் முருகா என்று மனதிற்குள் ஜபித்தவாறு தங்கள் வேலையில் ஈடுபடலா.

- Advertisement -

இந்த சஷ்டி விரத தினத்தன்று புலால் உணவுகளையோ, போதை வஸ்துக்களையோ விரதமிருப்பவர் உண்ணக்கூடாது. மனதில் தீய எண்ணங்களோ, கடுமையான உணர்ச்சிகளோ இல்லாதவாறு இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். இந்த சஷ்டி விரதத்தை நல்ல உடல்நிலைக் கொண்டவர்கள், அவர்களால் முடிந்தால் மூன்று வேளை உணவருந்தாமலும், அப்படியில்லையெனில் ஓன்று அல்லது இரண்டு வேளை உணவு உட்கொண்டு மேற்கொள்ளலாம். வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மூன்று வேளை உணவு உட்கொண்டு இவ்விரதத்தை மேற்கொள்ளலாம்.

விரதத்தால் ஏற்படும் நன்மைகள்:

- Advertisement -

“சஷ்டியிலிருந்தால் அகப்பையில்” வரும் என்று கூறுவார்கள். அதாவது இந்த சஷ்டி தினத்தன்று குழந்தையில்லாப் பெண்கள் விரதமிருப்பதால், அவர்களின் உடலின் குறைகள் நீங்கி முருகனின் அருளால் பெண்களின் “அகப்பையாகிய” “கருப்பையில்” குழந்தை உருவாகும் என்று கூறப்பட்டது. இப்பழமொழியே காலவெள்ளத்தில் “சட்டியிலிருந்தால் அகப்பையில் வரும்” என்று மறுவிவிட்டது.

இவ்விரதத்தை மாதந்தோறும் வரும் சஷ்டி தினத்தன்று மேற்கொள்வதால் நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உடலாரோக்கியம் மேம்பட்டு, அந்நோய்கள் படிப்படியாக நீங்கும். இவ்விரதத்தை தொடர்ந்து மேற்கொள்பவர்களுக்கு அந்த முருகப்பெருமானின் அருளால் மிகுந்த செல்வமும், எல்லாவற்றிலும் வெற்றியடையும் யோகமும் கிட்டும்.

இதையும் படிக்கலாமே:
கந்த சஷ்டி கவசம் வரிகள்

English Overview:
Here we have Kantha Sasti viratham monthly rules, benefits, food details in Tamil. We described about kantha Sashti viratham procedure(Sashti viratham irukum murai) and the power of Sasti viratham here. This fasting is to get grace from Lord Muruga.

- Advertisement -