
ஆண்களை பொறுத்த மட்டிலும் எப்பொழுதும் பணம் சட்டை பையில் வைத்திருப்பது அதிர்ஷ்டம் தரக்கூடிய செயலாகும். இப்போதெல்லாம் சட்டை பையில் மட்டுமல்ல கையிலேயே பணத்தை யாரும் வைத்துக் கொள்வது கிடையாது. எல்லாம் நாலு இன்ச் அட்டையிலேயே அடங்கிவிட்டது. பணம் மகாலட்சுமியின் அம்சம். மகாலட்சுமி இருக்கும் இடத்தில் இந்த பொருட்கள் இருந்தால், அவள் எப்போதும் நம்மிடம் வந்து சென்று கொண்டிருப்பாள். ஆண்கள் வெளியில் கிளம்பும் முன்பு இதை செய்தால் காரிய சிந்தியும், பண வரத்தும் உண்டாகும் என்பது நம்பிக்கை. அதைப் பற்றிய சுவாரசியமான ஆன்மீகம் சார்ந்த தகவல்களை காண்போம் வாருங்கள்.
தாந்த்ரீக பரிகாரங்களில் பணத்தை ஈர்க்கக்கூடிய சில சூட்சமமான பரிகாரங்களும் உண்டு. இதை செய்யும் பொழுது செல்லும் காரியம் வெற்றி அடையும். பணம் தடை இல்லாமல் நம்மிடம் தங்கும் என்பது ஜோதிட மற்றும் ஆன்மீக ரீதியான நம்பிக்கை. அந்த வகையில் பணம் சட்டை பையில் எப்போதும் வீண் விரயம் ஆகாமல் இருந்து கொண்டே இருக்க, செலவு செய்ய செய்ய பணம் சேருவதற்கு, காரிய சித்தி உண்டாக, செல்லும் காரியம் வெற்றி அடைய இந்த பரிகாரத்தை செய்யலாம்.
நீங்கள் நல்ல காரியத்திற்காக வெளியில் கிளம்பும் முன்பு ஒரு நுனி மழுங்காத நல்ல வெற்றிலையாக பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். பச்சை பசேல் என ஓட்டைகள் இல்லாத வெற்றிலை இருக்க வேண்டும். வெற்றிலை காய்ந்து போய் இருக்க கூடாது. செழுமையாக செழிப்புடன் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு வெற்றிலையில் இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், கொஞ்சம் பச்சை கற்பூரத்தை சேர்த்து நான்கைந்தாக மடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வெற்றிலையை மடிக்கும் பொழுது பணம் நம்மிடம் சேர்வதற்கு நம் புறமாக பார்த்து மடிக்க வேண்டும். எதிர்புறம் மடிக்கக் கூடாது. வெற்றிலையை மடித்து ஒரு மெல்லிய நூல் அல்லது ரப்பர் பேண்ட் கொண்டு கட்டிக் கொள்ளுங்கள். உள்ளே இருக்கும் பொருட்கள் வெளியில் வரக்கூடாது. இந்த மடித்த வெற்றிலையை பூஜை அறையில் வைத்து செல்லும் காரியம் ஜெயமாக வேண்டும். கையில் பணம் நிறைய சேர வேண்டும் என்று மனதார பிரார்த்தித்து, மகாலட்சுமி தாயாருக்கு வழிபாடு செய்து விட்டு, சட்டை பையில் வைத்துக் கொள்ளுங்கள்.
வெற்றிலை மகாலட்சுமியின் அம்சம். அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் பணத்தை ஈர்க்கக்கூடிய தன்மை கொண்டது. இந்த ஒரு விஷயத்தை செய்து சட்டை பையில் வைத்துக் கொண்டு வெளியில் கிளம்பும் பொழுது லாபம் வரும் என்பது நம்பிக்கை. எந்த ஒரு விஷயத்திற்காக செல்கிறோமோ.. அந்த விஷயம் தடையில்லாமல் காரிய சித்தி உண்டாகும்.
இதையும் படிக்கலாமே:
காணும் பொங்கல் சிறப்பு
அது மட்டுமல்லாமல் வரக்கூடிய பணம் வசூல் ஆகும். செல்லும் காரியம் நஷ்டத்தை ஏற்படுத்தாது. லாபத்தை ஏற்படுத்தும். சட்டை பையில் எப்போதும் பணம் இருந்து கொண்டே இருக்க, இந்த விஷயத்தை தினமும் புதிதாக செய்து கடைபிடிக்க வேண்டும். சட்டை பையில் வெற்றிலை மடிப்பு இருக்கும் வரை, உங்களுக்கு தேவையில்லாத செலவுகள் வராது. சுப செலவுகளும், உங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்கக்கூடிய யோகமும், தேவைக்கேற்ப பணமும் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது ஐதீகம்.