- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகாணும் பொங்கல் சிறப்பு

காணும் பொங்கல் சிறப்பு

- Advertisement -

பொங்கல் விழாவில் நான்காவது நாளில் கொண்டாடப்படும் பண்டிகை இந்த காணும் பொங்கல். காணும் பொங்கல் என்றால் என்ன. இந்த பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பொங்கல் என்றும் சொல்லுவார்கள். இந்த நாளில் அதி விசேஷமாக நாம் எந்த செயல்களை செய்தால், நம் குடும்பத்திற்கு நல்லது. நம் குடும்பம் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர இந்த நாளில் செய்ய வேண்டிய சில எளிமையான பரிகார முறைகளை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

காணும் பொங்கல் அன்று செய்ய வேண்டியது

நாம் அனைவரும் பொங்கல் அன்று மஞ்சள் கொத்து வாங்கி வைத்து வழிபாட்டை செய்திருப்போம். இந்த பொங்கல் வழிபாட்டில் ரொம்ப ரொம்ப முக்கியம் துவம் வாய்ந்த பொருள் இந்த மஞ்சள் கொத்து. இன்று வரை அந்த மஞ்சள் கொத்து நம் வீட்டு பூஜை அறையில் தான் இருக்கும். பூஜை அறையில் இருக்கும் அந்த மஞ்சள் கொத்து என்ன செய்வது.

- Advertisement -

இன்றைய தினம் தான் அந்த மஞ்சள் கிழங்குகளை எடுத்து மண் இல்லாமல் கழுவி, ஒரு மஞ்சள் இழைக்கும் கல்லில் இழைத்து, அந்த மஞ்சளை எடுத்து கன்னி பெண்களது காலில் பூசி இந்த காணும் பொங்கல் நாளை நிறைவு செய்ய வேண்டும். உங்கள் வீட்டிலே கன்னி பெண்கள் இருந்தாலும் சரி அல்லது உங்க சொந்த பந்தங்கள் யாராவது கன்னிப்பெண்களாக சிறு குழந்தைகள் இருந்தாலும் சரி, அவர்களுடைய காலில் இந்த மஞ்சளை பூசி அவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும்.

உங்களால் முடிந்தால் அவர்களுக்கு புது வளையல், பொட்டு கழுத்தில் அணிந்து கொள்ளும் மணி, அலங்காரம் செய்து கொள்ளக்கூடிய பொருட்கள், மருதாணி இதுபோல பொருட்களை வாங்கி தானம் தரலாம். சொந்த பந்தங்கள் இல்லாமல் மூன்றாவது நபர் வீட்டில் இருக்கும் குழந்தைக்கும் இந்த பரிகாரத்தை செய்யலாம் தவறு கிடையாது.

- Advertisement -

அதை தான் கன்னி பொங்கல் என்று சொல்லுகிறார்கள். கன்னிப் பெண்களுக்கு இந்த நாள் மிக மிக விசேஷமான நாள். உங்களுடைய வீட்டில் யாரேனும் கன்னிப் பெண்களாக சிறுவயதிலேயே இறந்திருந்தால், அவர்களை மனதார நினைத்தும் இன்று பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாம்.

காணும் பொங்கல் அன்று உறவினர்களை எல்லாம் காண்பதற்கு வெளியூர்களுக்கு இன்று மக்கள் செல்வார்கள். அதுவே நாள் போக்கில் சுற்றுலா செய்யக்கூடிய நாளாகவும் இந்த நாள் மாறிவிட்டது. அதெல்லாம் அவரவர் சௌகரியம். உங்களுடைய சௌகரியத்தை பொறுத்து ஊர் சுற்றிப் பார்ப்பது, சொந்த பந்தங்களை பார்த்து நேரத்தை செலவழிப்பது என்று இந்த நாளை விமர்சையாக கொண்டாடலாம். இன்னும் ஒரு முக்கியமான விஷயம் என்றால் இந்த நாள், கரிநாள் என்று சொல்லிவிட்டு இன்று கறி சாப்பாட்டை விருந்தினர்களோடு பகிர்ந்து சாப்பிட்டு கொண்டாடுவதும் ஒரு வழக்கமாக இருக்கிறது.

- Advertisement -

கடன் தீர காணும் பொங்கல் அன்று என்ன செய்வது?

மிக மிக முக்கியமான விஷயம் கடன் தீர இந்த நாளில் நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா. தர்மம் செய்ய வேண்டும். எதையும் எதிர்பார்க்காமல் பணமாக தர்மம் செய்ய வேண்டும். பத்து ரூபாய் தர்மம் கொடுத்தாலும் தவறு கிடையாது. யார் யாருக்கு இந்த தர்மத்தை செய்ய வேண்டும்.

உங்கள் வீட்டில் பால் போடுபவர்கள், உங்கள் வீட்டிற்கு காய்கறி விற்பவர்கள், துணி இஸ்த்திரி போட்டு கொடுப்பவர்கள் வீட்டு வேலைக்கு வருபவர்கள், உங்களிடம் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் இன்றைய தினம் நீங்கள் பணத்தை தர்மமாக கொடுக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: காணும் பொங்கல் அன்று இந்த ஒரு செயலை செய்பவர்கள் வாழ்வில் காலமெல்லாம் கடன் இருக்காது.

துப்புரவு தொழிலாளர்கள் இருப்பார்கள், இப்படி எல்லாம் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு, நமக்காக வேலை செய்பவர்களுக்கு மனதார உங்களால் முயன்ற பணத்தை மனமகிழ்ச்சியோடு கொடுக்கும்போது உங்களுக்கான கடன் தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த பொங்கல் தின விழா அனைவருக்கும் சிறப்பாக அமைந்திருக்கும், என்ற நம்பிக்கையில் அனைவருக்கும் காணும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்