- Advertisement -

செல்வ செல்வாக்குடன் வாழ தை முதல் திங்கள் வழிபாடு

- Advertisement -

இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கக் கூடிய அற்புதமான சக்திகள் 2 இருக்கின்றன. அவை தான் சூரியனும் சந்திரனும். நம் கண்ணுக்கு தெரிந்த தெய்வமாக இவர்கள் இருவருமே திகழ்கிறார்கள். இவர்கள் இருவரையும் நம் முறையாக வழிபட்டோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் என்பது ஏற்படும். அந்த வகையில் சூரிய மாதமாக திகழக்கூடிய தை மாதத்தில் சந்திர பகவானுக்குரிய திங்கள் கிழமை அன்று பெருமாளை எந்த முறையில் வழிபாடு செய்தால் செல்வ செல்வாக்குடன் வாழ முடியும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தை முதல் திங்கள் வழிபாடு

ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய திங்கட்கிழமையை சோமவாரம் என்று கூறுவோம். இந்த நாள் சந்திர பகவானுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் யார் ஒருவர் சந்திர பகவானை வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு மனரீதியான பிரச்சினைகள் அனைத்தும் தீரும் என்று கூறப்படுகிறது. இதோடு ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் திங்கள் கிழமை அன்று நாம் சூட்சமமான பெருமாள் வழிபாட்டை செய்தால் நம் வாழ்க்கையில் செல்வ செல்வாக்கு மேலோங்கும் என்றும் கூறப்படுகிறது. அந்த வழிபாட்டை தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் திங்கட்கிழமை அன்று செய்ய வேண்டும். அப்படி பார்க்கும் பொழுது தை மாதத்தின் முதல் திங்கட்கிழமை என்பது ஜனவரி மாதம் இருபதாம் தேதி வருகிறது. அன்று காலை 12 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்து விட வேண்டும். இயன்றவர்கள் அன்றைய தினத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்வது மிகவும் நல்லது. ஒருவேளை திருப்பதிக்கு செல்ல இயலவில்லை என்பவர்கள் திருப்பதிக்கு செல்வதாக கருதிக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.

அவ்வாறு செல்லும் பொழுது மண்டை வெல்லத்தை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். முதலில் கருடரை பார்த்து செல்வ செல்வாக்கு உயர வேண்டும் என்ற வேண்டுதலை அவரிடம் முன்வைத்து வழிபாடு செய்ய வேண்டும். பிறகு நேராக பெருமாள் சன்னதிக்கு சென்று முதலில் பெருமானின் பாதத்தை தரிசனம் செய்ய வேண்டும். பிறகு பெருமாளின் மார்பை தரிசனம் செய்ய வேண்டும். கடைசியாக பெருமாளின் கண்களை தரிசனம் செய்ய வேண்டும். நம் வாங்கி வந்த அந்த மண்டை வெல்லத்தை பெருமாளின் பாதத்தில் வைத்து தரும்படி கூறி வழிபாடு செய்து திரும்பவும் வாங்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

வாங்கிய இந்த மண்டை வெல்லத்தை கையில் வைத்துக்கொண்டு பெருமாளின் ஆலயத்திலேயே அமர்ந்து பெருமாளுக்குரிய இந்த இரண்டு மந்திரங்களை முழுமனதோடு 27 முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்துவிட்டு அந்த மண்டை வெல்லத்தை வீட்டிற்கு எடுத்து வந்து அடுத்த மாதம் முதல் திங்கட்கிழமை வரும் வரை வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் அந்த மண்டை வெல்லத்தை தினமும் பெருமாளை நினைத்துக் கொண்டு சிறிதளவு பிரசாதமாக சாப்பிட வேண்டும்.

இப்படி ஒவ்வொரு மாதமும் நாம் தொடர்ச்சியாக பெருமாளை முதல் திங்கட்கிழமை அன்று இந்த முறையில் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு வைகுண்ட பதவி கிடைக்கும் என்றும் அதே போல் இந்த உலகில் வாழ்வதற்கு தேவையான அனைத்து வித செல்வங்களும், பேரும், புகழும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மந்திரம்

“ஓம் நமோ நாராயணாய
ஓம் ஸ்ரீம் லலித்தம் லம்போதரம்”

இதையும் படிக்கலாமே:பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்க பரிகாரம்.

மிகவும் எளிமையான இந்த சூட்சுமமான வழிபாட்டை ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய முதல் திங்கட்கிழமை அன்று பெருமாளை முழுமனதோடு நினைத்து செய்பவர்களுக்கு பெருமாளின் அருளால் செல்வ செழிப்பும் பெயரும் புகழும் செல்வாக்கும் உயரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -