
பணத்தால் பலருக்கும் பலவிதமான நன்மைகள் உண்டாகிறது. அதே சமயம் அதே பணத்தால் தான் பலருக்கும் பலவிதமான பிரச்சனைகளும் ஏற்படுகிறது. பணமே அனைத்துக்கும் பிரதிநிதியாக திகழ்கிறது. அதனால் தான் பணத்தை சம்பாதிப்பதுக்காக அனைவரும் பாடாய் பட்டு கொண்டே இருக்கின்றார்கள். இருப்பினும் பணவரவில் இருக்க கூடிய பிரச்சினைகள் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களுடைய விடாமுயற்சியுடன் காலபைரவரை வளர்பிறை அஷ்டமி தினத்தில் வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொதுவாக பைரவருக்கு உகந்த திதியாக கருதப்படக்கூடிய அஷ்டமி திதி, அது வளர்பிறை அஷ்டமி தேய்பிறை அஷ்டமி என்று மாதத்தில் இரண்டு முறை வரும். வளர்பிறை அஷ்டமி தினத்தன்று அஷ்ட லட்சுமிகள் அனைவரும் காலபைரவரை வழிபட்டு அவர்களுடைய செல்வ செழிப்பு அதிகரிப்பதற்குரிய வரங்களை வாங்குவார்கள் என்று கூறப்படுகிறது. அதனால் தான் வளர்பிறை அஷ்டமி தினத்தன்று நாம் காலபைரவர் ஆலயத்திற்கு சென்று காலபைரவரை வழிபட்டோம் என்றால் காலபைரவரின் அருளும் அஷ்ட லட்சுமிகளும் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கப்பெற்று பண வரவு என்பது அதிகரிக்கும்.
பொதுவாகவே கால பைரவரை ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில் வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. இந்த ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்துதான் அஷ்டமி திதியும் வருகிறது என்பதால் அன்றைய தினத்தில் கண்டிப்பான முறையில் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று ராகு காலத்தில் கால பைரவருக்கு நடக்கக்கூடிய அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொள்ள வேண்டும். அப்பொழுது கால பைரவருக்காக புனுகு, ஜவ்வாது, பன்னீர் போன்ற வாசனை நிறைந்த பொருட்களை வாங்கி தர வேண்டும்.
அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஞாயிற்றுக்கிழமைக்குரிய கிரகமான சூரிய பகவானுக்குரிய தானியமான கோதுமையை வைத்து காலபைரவருக்கு நாம் தீபம் ஏற்ற வேண்டும். ஒரு கைப்பிடி அளவு கோதுமையை பரப்பி அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து சுத்தமான நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு ஒரே ஒரு தீபத்தை கால பைரவரின் சன்னிதியில் ஏற்றி வைத்து கால பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். இப்படி வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய பண பிரச்சினைகள் தீரும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறும் என்று கூறிக் கொண்டே செல்லலாம்.
இதையும் படிக்கலாமே:அஷ்ட ஐஸ்வர்யங்கள் பெருக வளர்பிறை அஷ்டமி திதி வழிபாடு
பலவிதமான பலன்களை தரக்கூடிய வளர்பிறை அஷ்டமி காலபைரவர் தீபத்தை இந்த முறையில் ஆலயத்திற்கு சென்று ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு காலபைரவரின் அருளோடு மட்டுமல்லாமல் அஷ்டலட்சுமிகளின் அருளும், சூரிய பகவானின் அருளும் பரிபூரணமாக கிடைக்கப்பெறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.