- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅஷ்ட ஐஸ்வர்யங்கள் பெருக வளர்பிறை அஷ்டமி திதி வழிபாடு.

அஷ்ட ஐஸ்வர்யங்கள் பெருக வளர்பிறை அஷ்டமி திதி வழிபாடு.

- Advertisement -

வளர்பிறை அஷ்டமி திதியில், அஷ்டலட்சுமிகளும் பைரவரை வழிபாடு செய்ய வருவதாக ஐதீகம். வளர்பிறை அஷ்டமி திதியில் சுக்கிர ஹோரையில், நம்முடைய வீட்டிலேயே பின் சொல்லக்கூடிய வழிபாட்டை மேற்கொண்டால், வீட்டில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும். அஷ்ட லட்சுமிகளின் ஆசிர்வாதத்தால் நம் பண பிரச்சனைகள் எல்லாம் சரியாகி, வீட்டில் பண வரவு அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யம் பெருக வளர்பிறை அஷ்டமி திதி வழிபாடு

நாளை 8.12.2024. வளர்பிறை அஷ்டமி திதி. நாளைய தினம் நம் வீட்டில் ஐஸ்வரியம் பெருக செய்ய வேண்டிய எளிமையான வழிபாட்டை இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவை மூலம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

நாளைய தினம் பூஜை அறையில் மகாலட்சுமிக்கு பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் அஷ்ட லட்சுமிகளின் திருவுருவப்படம் இருந்தால் ரொம்ப ரொம்ப சிறப்பு. அந்த திருவுருவப்படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்வது நல்லது. பூஜை அறையில் வெள்ளை விரிப்பு விரித்துக்கொள்ளுங்கள். வெள்ளை நிறம் சுக்கிரனுக்கு உரியது.

அதன் மேலே 8 மண் அகல் விளக்குகள் வைத்து, நெய் ஊற்றி பஞ்சுதிரி போட்டு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். நெய் மகாலட்சுமிக்கு சொந்தமானது. எட்டு லட்சுமிகளுக்கு, எட்டு விளக்கு, இந்த தீபத்தை வளர்பிறை அஷ்டமி திதி அன்று சுக்கிர ஹோரையில் தான் ஏற்ற வேண்டும். நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை சுக்கிர ஹோரை வரும் நேரம்.

- Advertisement -

ஞாயிறு காலை 7 – 8 சுக்கிர ஹோரை. ஞாயிறு இரவு 9-10 மணி வரை சுக்கிர கோரை. காலை நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பு. சூழ்நிலை காரணமாக காலை நேரத்தை தவறவிட்டவர்கள், மாலை மேலே சொன்ன முறைப்படி இந்த வழிபாட்டை மேற்கொண்டு, அஷ்ட லட்சுமியையும் பைரவரையும் வேண்டுதல் வைத்தால் நிச்சயம் குடும்பத்தில் செல்வ செழிப்பு படிப்படியாக உயரத்துடங்கும்.

இதையும் படிக்கலாமே: தாங்க முடியாத கஷ்டம் வரும்போது சொல்ல வேண்டிய மந்திரம்

நாளை ஒரு வளர்பிறை அஷ்டமி திதியில் மட்டும், இந்த வழிபாட்டை மேற்கொண்டு பலனை முழுமையாக எதிர்பார்ப்பது கொஞ்சம் தவறான விஷயம். 8 வளர்பிறை அஷ்டமி திதி இந்த வழிபாட்டை செய்தால் வாழ்வில் யாரும் எட்டா உயரத்திற்கு செல்வீர்கள். செல்வ வளத்தில் உயர்ந்த நிலைக்கு செல்ல இத்தனை எளிமையான சக்தி வாய்ந்த வழிபாட்டை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம். அனைவருக்கும் பைரவரின் ஆசிர்வாதம் அஷ்டலட்சுமிகளின் ஆசீர்வாதம் கிடைக்க பிரார்த்தனை வைத்து இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்