- Advertisement -

செல்வ வளத்துடன் வாழ பெருமாள் வழிபாடு

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் வசதியாக வாழ வேண்டும், எந்தவித கடன் பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவோம். நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவு ஏற்பட வேண்டும், இதற்காக பலரும் பல முயற்சிகளை செய்வார்கள். அப்படி முயற்சிகளை செய்தும் அவர்களால் பணத்தை சம்பாதிக்க முடியவில்லை என்றாலோ, செல்வ வளம் அதிகரிக்கவில்லை என்றாலும், கடன் பிரச்சனை அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்றாலோ அந்த பிரச்சினைகளை சமாளிப்பதற்கு பெருமாளுக்கு எந்த பொருளை வைத்து எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

செல்வ வளத்துடன் வாழ வழிபாடு

செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக் கூடியவள் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தாயாரை வழிபட்டால் செல்வநிலை உயரும் என்று பலரும் தெரியும். மகாலட்சுமி தாயாரை மட்டும் வழிபடுபவர்களுக்கு செல்வ செழித்து ஏற்படாது. இதற்கு காரணம் என்னவென்றால் மகாலட்சுமி என்பவள் பதிவிரதை. அதாவது தன் கணவனை நினைத்து கணவனுக்காக வாழக்கூடியவள் என்று அர்த்தம். அதனால் யார் ஒருவர் பெருமானை மனதார வழிபாடு செய்கிறார்களோ அவர்களின் இல்லத்திற்கு மகாலட்சுமி அழைக்காமலேயே வருவாள் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு வழிபாட்டு முறையைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை பெருமாளுக்கு உகந்த கிழமையான சனிக்கிழமை அன்று செய்வது மிகவும் சிறப்பு. மேலும் இந்த வழிபாட்டை மாலை ஐந்து மணிக்கு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டு பூஜை அறையில் பெருமாளின் படம் இருக்கும். அந்த படத்திற்கு முன்பாக ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றுக்கொள்ளுங்கள். பிறகு அதற்கு பக்கத்தில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த கிண்ணத்தில் சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும். அந்த தண்ணீரில் கஸ்தூரி மஞ்சள் தூளை போட வேண்டும். பிறகு ஒரு சிட்டிகை பச்சை கற்பூரத்தை அதில் போட வேண்டும்.

இப்படி போட்டு முடித்த பிறகு பெருமாளின் மந்திரங்களை கூற வேண்டும். பெருமாளின் மந்திரம் தெரியாது என்பவர்கள் “ஓம் நமோ நாராயணா” என்னும் மந்திரத்தை மனதார 27 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி உச்சரித்து முடித்த பிறகு இந்த மஞ்சள் கலந்த தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக பணம், நகை வைத்திருக்கும் இடத்தில் தெளிக்க வேண்டும். இப்படி வீட்டில் ஒரு இடம் கூட விடாமல் அனைத்து இடத்திலும் இந்த தீர்க்கத்தை தெளிக்க வேண்டும். அப்படி தெளிக்கும் பொழுது பெருமாளின் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி ஒவ்வொரு சனிக்கிழமையும் செய்வதன் மூலம் பெருமாளின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெறும். மேலும் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் முற்றிலும் நீங்கும்.. வீடு தெய்வீக அம்சம் பொருந்தியதாக திகழும். பெருமாளின் நாமத்தை உச்சரித்த வண்ணம் இந்த தீர்த்தத்தை தெளிப்பதால் மகாலட்சுமி மனம் மகிழ்ந்து அழைக்காமலேயே வீட்டிற்குள் வருவாள். மேலும் பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கி செல்வ செழிப்புடன் நிம்மதியாக வாழ முடியும்.

இதையும் படிக்கலாமே:கடன் காணாமல் போக ஆஞ்சநேயர் வழிபாடு

பெருமாளின் அருளையும் மகாலட்சுமியின் அருளையும் பரிபூரணமாக பெற்றுத் தரும் இந்த மஞ்சள் தீர்த்த பரிகாரத்தை முழுமனதோடு செய்பவர்களுக்கு செல்வ நிலை உயரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -