- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் காணாமல் போக ஆஞ்சநேயர் வழிபாடு

கடன் காணாமல் போக ஆஞ்சநேயர் வழிபாடு

- Advertisement -

கடன் இல்லாத வாழ்க்கை தான் நிம்மதியான வாழ்க்கை என்று அனைவருக்கும் தெரியும். இருப்பினும் தங்களுடைய சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலைக்கு வந்த பிறகு அந்த கடனை அடைப்பதற்காக படாத பாடுபட்டும் அவர்களால் கடனை அடைக்க முடியாத சூழ்நிலை உருவாகிறது. அந்த கடனுக்குரிய வட்டியை கட்டுவதற்கு முடியாத சூழ்நிலையில் பலரும் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் எந்த அளவிற்கு கடனை அடைப்பதற்கு முயற்சி செய்கிறோமோ அதே அளவிற்கு தெய்வ வழிபாட்டையும் செய்யும் பொழுது முயற்சியும் தெய்வத்தின் அருளும் ஒன்றாக சேர்ந்து நம்முடைய பிரச்சனைக்கு நல்ல தீர்வை கொடுக்கும். அந்த வகையில் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் கடன் பிரச்சினை தீர ஆஞ்சநேயரை எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தான் பார்க்க போகிறோம்.

- Advertisement -

ஆஞ்சநேயர் வழிபாடு

கடன் பிரச்சினைகள் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் செவ்வாய் பகவானின் ஆதிக்கத்திற்குரிய நாளில் செவ்வாய் பகவானுக்குரிய அதி தேவதையான முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அதேபோல் துர்க்கை அம்மனை வழிபாடு செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வரிசையில் ஆஞ்சநேயரை எப்படி வழிபட்டால் கடன் பிரச்சனை தீரும் என்று தெரிந்து கொள்வோம்.

இந்த வழிபாட்டிற்கு நாம் தேர்வு செய்யக்கூடிய நாட்கள் என்று பார்த்தால் அது செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமை தான். செவ்வாயும் சனியும் தான் ஒருவருடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகளை கொடுத்து பாடங்களை கற்றுக் கொடுப்பவர்கள். இவர்களால்தான் கடன் பிரச்சினை என்பது ஏற்படும். அதனால் இவர்களுக்கு உரிய தினத்தில் நாம் ஆஞ்சநேயரை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்யும்பொழுது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தான் வழிபட வேண்டும்.

- Advertisement -

அந்த நேரம்தான் குரு ஹோரை. செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணியிலிருந்து 1 மணிக்குள்ளும், இரவு 7 மணியிலிருந்து 8 மணிக்குள் குரு ஹோரை என்பது இருக்கிறது. அதேபோல் சனிக்கிழமை காலை 7 மணியிலிருந்து 8 மணிக்குள்ளும், 2 மணியிலிருந்து 3 மணிக்கு இருக்கிறது. இந்த இரண்டு நேரங்களில் எந்த நேரம் உங்களால் ஆஞ்சநேயரை வழிபாடு செய்ய முடியுமா அந்த நேரத்தில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது உப்பு சேர்க்காத வெண்ணையாக பார்த்து உங்களால் எவ்வளவு வாங்க முடியுமோ அதை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும்.

இந்த வெண்ணெயை ஆஞ்சநேயருக்கு சாற்ற சொல்லி வழிபாடு செய்துவிட்டு “”ஸ்ரீராமஜெயம்” என்றோ “ராமா ராமா” என்றோ ஆஞ்சநேயரை 27 முறை வலம் வர வேண்டும். இப்படி தொடர்ச்சியாக நாம் ஆஞ்சநேயரை வெண்ணெய் வாங்கி கொடுத்து வழிபாடு செய்வதன் மூலம் வெண்ணெய் எப்படி உருகி ஒன்றும் இல்லாமல் போகிறதோ அதேபோல் நம்முடைய கடன் பிரச்சனையும் ஒன்றும் இல்லாமல் போய்விடும்.

இதையும் படிக்கலாமே:நினைத்ததை நடத்திக்காட்டும் குறுமிளகு பரிகாரம்
ஐந்து ரூபாய் ஆக இருந்தாலும் சரி 500 ரூபாயாக இருந்தாலும் சரி பிறரிடம் இருந்து வாங்கினால் அது கடன்தான். அதை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். அந்த எண்ணத்திற்குரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இதோடு ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்தால் கண்டிப்பான முறையில் கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்