- Advertisement -
சமையல் குறிப்புகள்

பொட்டுக்கடலையும், தேங்காயும் இருந்தா தக்காளியே சேர்க்காம சூப்பரான டிபன் சாம்பாரை வித்தியாசமான சுவைல சிம்பிளா ரெடி பண்ணிடலாம். இது வரைக்கும் இப்படி ஒரு டேஸ்ட்ல சாம்பார் சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க.

- Advertisement -

இட்லி தோசைக்கு செய்யப்படும் இந்த சாம்பாரை பல விதமாக செய்யலாம். அதிலும் இந்த டிபன் சாம்பாரை பொருத்த வரையில் விதவிதமாக செய்யலாம். ஏன் பருப்பே இல்லாமல் கூட சாம்பார் வைக்கும் முறைகள் எல்லாம் கூட இப்போது பிரபலமாக உள்ளது. இந்த சமையல் குறிப்பு பதிவில் தக்காளி சேர்க்காமல் தேங்காய் பொட்டுக்கடலை பருப்பு இவற்றை வைத்து ரொம்பவே வித்தியாசமான சுவையில் சூப்பரான ஒரு சாம்பார் எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

இந்த சாம்பார் செய்வதற்கு முதலில் அரை கப் துவரம் பருப்பை நன்றாக சுத்தம் செய்து குக்கரில் சேர்த்து பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி அதில் 15 பல் உரித்த பூண்டையும் சேர்த்து பிறகு மூன்று விசில் வரும் வரை விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். அது ஒரு புறம் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்ததாக ஒரு மிக்ஸி ஜாரில் 1 ஸ்பூன் பொட்டுக்கடலை, ரெண்டு ஸ்பூன் தேங்காய் பொடியாக நறுக்கியது, ஐந்து காய்ந்த மிளகாய், ஒரு சின்ன துண்டு புளி, ஒரு டீஸ்பூன் சாம்பார் தூள் சேர்த்து முதலில் பல்ஸ் மூட்டில் அரைத்த பிறகு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுத்து அடுப்பில் கடாய் வைத்து அதில் ஒரு முருங்கைக்காய் இரண்டு கத்திரிக்காய் மீடியம் சைஸில் நறுக்கி சேர்த்து காய் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக விடுங்கள். காய் பாதி அளவு வெந்த பிறகு நாம் வேக வைத்த பருப்பை நன்றாக கடைந்து இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அரைத்த மசாலா விழுதையும் இதில் சேர்த்து கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் அரை டீஸ்பூன் உப்பு ஒரு சிறிய துண்டு வெல்லம் அனைத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.

- Advertisement -

இந்த சாம்பார் கொதித்துக் கொண்டிருக்கும் போதே இதற்கு தாளிப்பை தயார் செய்து விடுவோம். அதற்கு அடுப்பில் பேன் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் ஒரு டீஸ்பூன் கடுகு சேர்த்து பொரிந்த பிறகு ஒரு சிறிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

இத்துடன் ஒரு கொத்து கருவேப்பிலை, கால் டீஸ்பூன் பெருங்காயம் இவை எல்லாம் சேர்த்த பிறகு வெங்காயம் நல்ல பொன்னிறமாகும் வரை வதக்கிய பிறகு அடுப்பை அணைத்து விட்டு இந்த தாளிப்பை கொதித்துக் கொண்டிருக்கும் சாம்பாரில் ஊற்றி ஒரு முறை கலந்து அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: தக்காளி சட்னியை இவ்வளவு ருசியாக யாராலும் அரைக்க முடியாது. சில வீடுகளில் தக்காளி சட்னி வாசமாகவும் சுவையாகவும் இருப்பதற்கு இதுதான் காரணமா?

இந்த சாம்பார் நாம் எப்போதும் செய்யும் டிபன் சாம்பார் போல இல்லாமல் ரொம்பவே வித்தியாசமான சுவையில் அட்டகாசமாக இருக்கும். இந்த சாம்பார் ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் உங்கள் வீட்டில் இன்று இதை ட்ரை பண்ணி பாத்துருங்க.

- Advertisement -