தக்காளி சட்னியை இவ்வளவு ருசியாக யாராலும் அரைக்க முடியாது. சில வீடுகளில் தக்காளி சட்னி வாசமாகவும் சுவையாகவும் இருப்பதற்கு இதுதான் காரணமா?

thakkali-chutney
- Advertisement -

தக்காளி சட்னி. இது எல்லோருக்கும் பிடித்த சைடு டிஷ். இட்லி, தோசை, சப்பாத்தி சுட சுட சாதம் என்றால் இந்த தக்காளி சட்னியை சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால், எல்லோரும் ஒரே சுகையில் தக்காளி சட்னியை செய்ய மாட்டாங்க. ஒவ்வொரு வீடுகளில் ஒவ்வொரு சுவை இருக்கும். இன்றும் நாம் ஒரு வித்தியாசமான தக்காளி சட்னி ரெசிபியை தான் பார்க்கப் போகின்றோம். உங்களுடைய வீட்டிலும் ஒரு முறை இப்படி தக்காளி சட்னியை அரைத்து பாருங்கள். இதனுடைய ருசி நாக்கை விட்டு போகவே போகாது. நேரத்தை கடத்தாமல் ரெசிபிக்குள் செல்வோம் வாருங்கள்.

செய்முறை

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அலுதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, உளுந்து – 1 டேபிள் ஸ்பூன், போட்டு பொன்னிறம் வரும் வரை வறுக்கவும். அடுத்து வர மிளகாய் – 7 போட்டு அதையும் லேசாக வறுத்து விட்டு, நறுக்கிய மீடியம் சைஸ் வெங்காயம் – 1, போட்டு கண்ணாடி பதம் வரை வரும் வரை வதக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்து தோல் உரித்த பூண்டு பல் – 10 போட்டு ஒரு நிமிடம் வரை வதக்கி நறுக்கிய மீடியம் சைஸில் இருக்கும் பழுத்த தக்காளி பழம் – 4 போட்டு மீண்டும் வதக்கத் தொடங்குங்கள். (4 தக்காளி பழத்திற்கு 1 வெங்காயத்தின் அளவு சரியாக இருக்கும்.)

தக்காளிப் பழம் நன்றாக வெந்து கண்ணுக்கே தெரியாமல் மசிந்து விட வேண்டும். எண்ணெயிலேயே வதங்கி தக்காளி தொக்கு பதத்திற்கு வந்துவிடும். அப்போது மிகக் குறைந்த அளவில் 1/2 கைப்பிடியளவு கொத்தமல்லி தழையை இதோடு சேர்த்து, இரண்டு வதக்கு வதக்கி அடுப்பை அணைத்து விடுங்கள்.(கொத்தமல்லி தழையின் பச்சை நிறம் சட்னியில் தெரியக்கூடாது. அதன் வாசம் மட்டும் இருக்க வேண்டும்.)

- Advertisement -

இப்போது இந்த கலவை நன்றாக ஆரிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு, தேவைப்பட்டால் 2 சிட்டிகை பெருங்காயத்தூள் போட்டு விழுதாக அரைத்து ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். தேவையான அளவு தண்ணீரை ஊற்றி சட்னியை கரைத்துக் கொள்ளுங்கள்.

தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, கருவேப்பிலை, வரமிளகாய், பெருங்காயத்தூள், உளுந்தம் பருப்பு, வெந்தயம் 10, தாளித்து இதை சட்னியில் கொட்டி கலந்து பரிமாறினால் சூப்பராக இருக்கும். இந்த சட்னியை அப்படியே கட்டியாக எடுத்து சுட சுட சாதத்தில் பிசைந்து சாப்பிட்டாலும் அருமையான சுவை இருக்கும்.

இதையும் படிக்கலாமே: மணக்க மணக்க ருசியான மல்லி துவையல் செய்வது இப்படி தானா? மல்லிக்கட்டு நிறைய இருந்தா ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க 4 நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்!

இந்த தக்காளி சட்னியை வெங்காயம் சேர்த்து செய்து இருப்பதால் அதிக புளிப்பு இருக்காது. அதே சமயம் லேசான வெங்காயத்தில் இருக்கும் இனிப்பும் காரமும் சேரும்போது இந்த ரெசிபி அல்டிமேட் ருசியை கொடுக்கும். இந்த தக்காளி சட்னி ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -