- Advertisement -
சுவாரஸ்ய தகவல்கள்

தங்கச் சிலையில் துளியளவும் தங்கம் இல்லை – மாயமானதா தங்கம் ?

காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள ‘சோமாஸ்கந்தர்’ என்றழைக்கப்படும் உற்சவர் சிலை பழுதடைந்த காரணத்தால் புதிய உற்சவர் சிலையைச் செய்ய கடந்த 2015-ம் ஆண்டில் கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, இந்து அறநிலைத்துறையின் உத்தரவின் பேரில், 50 கிலோ எடையில், 2.12 கோடி செலவில் புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டு, 2016, டிசம்பரில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

புதிதாக செய்யப்பட்ட இந்தச் சிலையில் அறநிலையத்துறை குறிப்பிட்ட 5 சதவிகித தங்கம் கலக்கப்படவில்லை என்று புகார் எழுந்தது. இது தொடர்பாக சிலர் வழக்குத் தொடர்ந்தார்கள். இதையடுத்து, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் 9 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில், ஏகாம்பரநாதர் கோயிலில் சிலை கணக்கெடுப்பு மற்றும் ஆய்வு நடைபெற்றது. ஆய்வு முடிந்த பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த காஞ்சிபுரம் ஏ.எஸ்.பி. வீரமணி, “அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பிஎம்ஐ (positive metal Identification) என்ற எலெக்ட்ரானிக் கருவி மூலம் சோமாஸ்கந்தர், ஏலவார்க் குழலி ஆகிய சிலைகளைப் பரிசோதனை செய்தனர்.

பரிசோதனையின் முடிவில் அந்த சிலைகளில் எள்ளளவு கூட தங்கம் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் அறிக்கைப்படி, இந்த சிலைகளில் 5.75 கிலோ தங்கம் இருக்க வேண்டும்.

- Advertisement -

ஸ்தபதியின் அறிக்கையிலும், சோமாஸ்கந்தர் சிலையில் 75 சதவிகிதம் வரை தங்கம் இருப்பதாக அறிக்கை கொடுத்துள்ளார். இந்த வழக்குகளை மேற்கொண்டு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் விசாரணை செய்வார்கள். சிலை செய்வதற்காக எவ்வளவு தங்கம் வசூல் செய்யப்பட்டது என்பது புலன் விசாரணையின் முடிவில் தெரியவரும்.” என்கிறார்.

இந்த விவகாரம் குறித்து, தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் டாக்டர் இரா.நாகசாமியிடம் பேசினோம். “கோயிலில் சிலைகள் எப்படி இருக்க வேண்டும், அவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் ஆகம நூல்களில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

- Advertisement -

சுவாமியின் அங்கங்களில் உள்ள மான், மயில் போன்ற இடங்களில் பின்னம் ஏற்பட்டிருந்தால், அதைச் சரிசெய்து, அதே சிலையைத்தான்நாகசாமி, தொல்லியல் துறை பயன்படுத்த வேண்டும். ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சிலை ஒரு பீடத்தின் மீது உள்ளது. காலப்போக்கில் அந்தப் பீடத்திலிருந்து சிலை பிரிந்து சற்று வெளியே வருவது இயல்பானதுதான். பீடத்தைச் சரிசெய்து, அதன்மீது மீண்டும் சிலையை வைக்க வேண்டும். ஒரே நாளில் இதைச் செய்து, அப்போதே பூஜை செய்ய வேண்டும். வேறு சிலை செய்யவே கூடாது.

தொல்லியல் துறை விதிகளும் அதைத்தான் சொல்கின்றன. சுவாமியின் உடலில் உள்ள முகம் மற்றும் உடலில் உள்ள முக்கிய அங்கங்களில் சேதம் ஏற்பட்டிருந்தால் புதிய உற்சவர் சிலையைச் செய்யலாம். புதிய சிலையை ஊர்மக்கள், கோயில் அறங்காவலர்கள், அர்ச்சகர்கள், அதிகாரிகள், பஞ்சாயத்துத் தலைவர் முன்னிலையில், சம்பந்தப்பட்ட கோயில் மண்டபத்தில்தான் செய்ய வேண்டும். வெளியில் செய்யக் கூடாது.

இதையும் படிக்கலாமே:
நீண்ட கால பிராத்தனை நிறைவேற விநாயகரை இப்படி வழிபடுங்கள்

புதிதாகச் சிலை செய்ய முடிவெடுத்தால், பழைய சிலையை உருக்கி, அதிலிருந்தே மீண்டும் புதிய சிலையைச் செய்ய வேண்டும். அதே சுவாமிதான் மீண்டும் வருகிறார் என்பது ஐதீகம். ஏற்கெனவே ஒரு சிலை இருக்கும்போது இங்கு இன்னொரு சிலையைச் செய்திருக்கிறார்கள். ஒரு ஏகாம்பரநாதர்தான் இந்தக் கோயிலில் இருப்பார். இரண்டு ஏகாம்பரநாதர்கள் இருக்க முடியாது. சுமார் 1,000 வருடத்துக்கு மேலாக பூஜை செய்யப்பட்டு தங்க வாகனத்திலும், வெள்ளி வாகனத்திலும் உலா வந்த சிலையை, ஒரு நிமிடத்தில் தூக்கி எறிந்துவிட்டு வேறு சிலையைச் செய்திருக்கிறார்கள். விசாரணைக்குப் பிறகு இன்னும் பல மோசடிகள் வெளிவர வாய்ப்பு இருக்கிறது” என்கிறார்.

- Advertisement -