நீண்ட கால பிராத்தனை நிறைவேற விநாயகரை இப்படி வழிபடுங்கள்

Pillayar

மனிதர்கள் பலருக்கும் தங்கள் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் வரத்தான் செய்கிறது. சிலருக்கு வாழ்வில் பிடிப்பே இல்லமால் ஏதோ ஒரு தளர்ச்சி இருந்துகொண்டே இருக்கும். எதிலும் தடை இருக்கும். சிலருக்கு நீண்டகாலமாக திருமணம் நடக்காமல் இருப்பது, குழந்தை பிறக்காமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் மனதை வாட்டி எடுக்கும். இது போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு எளிய தீர்வு இருக்கிறது. வாருங்கள் அதை பற்றி பார்ப்போம்.

vinayagar

நமது இதிகாசங்களின்படி வன்னி மரத்திற்கென்று சில சிறப்புகள் உண்டு. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி ராவணனை எதிர்த்து போரிட சென்ற போது வன்னி மரத்தை தொட்டு வணங்கியுள்ளார். பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞான வாசம் சென்றபோதும் தங்களது ஆயுதங்களை ஒரு துணியில் கட்டி வன்னி மரத்தில் தான் மறைத்து வைத்துள்ளனர். இப்படி வன்னி மரத்திற்கு பல சிறப்புகள் உண்டு.

சிறப்பிற்குரிய வன்னிமரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகர் பல விதமான வினைகளை தீர்க்க வல்லவர். அவரை சித்திரை, மிருகசீரிஷம் , அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் வரும் நாட்களில் விளக்கேற்றி வழிபடுவதன் பயனாக வாழ்வில் உள்ள தடைகள்  விலகி நீண்ட கால பிராத்தனை நிறைவேறும்.

இதையும் படிக்கலாமே:
குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?

நீண்டகாலமாக திருமணம் தடைப்பட்டிருப்பவர்கள், நீண்டகாலமாக குழந்தை இல்லாமல் தவிப்பவர்கள் பிள்ளையாரை வணங்கினால் அவர் நிச்சயம் நல்வழியை காட்டுவார். பிள்ளை வரத்தை நல்குவதால் தானே அவர் பிள்ளையார் என்று பெயரை பெற்றுள்ளார். ஆகையால் நம்பிக்கையோடு வணங்கினால் நல்லதே நடக்கும்.